தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

2 நாள் வேலைநிறுத்த போராட்டம்! AIB0A முக்கிய அறிவிப்பு!

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு AIBOA சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 30, 2025

வருகின்ற மார்ச் 24 மற்றும் 25, 2025-ல் வங்கி வேலைநிறுத்த போராட்டத்திற்கு AIBOA (All India Bank Officers Association) சார்பில் அழைப்பு விடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்த போராட்டமானது, வங்கி ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை எதிர்த்து நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, வாரத்தில் 5 நாட்கள் வேலை (5-day Banking), சமீபத்தில் கையெழுத்தான 12வது BPS (Banking Personnel Settlement)-ல் 5 நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும், அதை இன்று வரை நடைமுறையில் எடுத்து செல்லவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் அலுவலகங்களும் 5 நாள் வேலை வாரத்துடன் செயல்படும் நிலையில், வங்கி ஊழியர்கள் இந்த சலுகையை ஏன் பெற முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக AIBOC (All India Bank Officers' Confederation) பிப்ரவரி 24 மற்றும் 25, 2025-ல் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தது. தற்போது, அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் ஏற்றுக்கொள்ளும் தேதி முடிவுக்கு வந்ததும், வேலைநிறுத்தத்தின் இறுதி தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

AIBOC-இன் முக்கிய கோரிக்கைகள் :

போதுமான ஊழியர்கள் இருப்பு : வங்கிகளின் அனைத்து பிரிவுகளிலும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைபாட்டை போக்க வேண்டும்.

வாரத்தில் 5 நாட்கள் வேலை : வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாள் வேலை நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

DFS அறிவுறுத்தல்களின் எதிர்ப்பு : வங்கி ஊழியர்களின் பணி பாதுகாப்பை அச்சுறுத்தும் நோக்கில் பொதுத்துறை வங்கிகளின் (PSBs) சுயஆட்சியை குறைமதிப்புக்கு உட்படுத்தும் மத்திய நீதித்துறையின் DFS அறிவுறுத்தல்களை திரும்ப பெற வேண்டும். 

வங்கி ஊழியர்களின் பாதுகாப்பு : வங்கி ஊழியர்களை வாடிக்கையாளர்கள் தாக்கும் செயல்களுக்கு எதிராக, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

வெற்றிடங்கள் நிரப்ப வேண்டும் : வங்கிகளில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.

வருமானவரி சலுகை :  அரசு ஊழியர்களை போலவே ரூ.25 லட்சம் வரையில் வருமானவரி சலுகையை அளிக்க வேண்டும். 

AIBOA அறிக்கை : 

வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து, AIBOA சங்கம் அறிக்கை ஒன்றையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் “ கடந்த ஆண்டு டிசம்பர் 11, 2024 அன்று சென்னையில் நடந்த UFBU சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் போராட்டத் திட்டங்கள் குறித்து ஜனவரி 28, 2025 தேதியிட்ட உங்கள் கடிதம்/அஞ்சலைப் பெற்றுள்ளோம்.

டிசம்பர் 2024 இல் எங்கள் மத்திய குழுவில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து, இதேபோன்ற கோரிக்கையின் பேரில் போராட்டத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளோம். எனவே, உங்கள் போராட்ட முன்மொழிவுடன் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம், 2 நாட்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம், இது முன்னுரிமையாக மார்ச் 24 மற்றும் 25, ஆகிய தேதிகளில்  நடத்தப்படலாம்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:AIBOAAIBOCUFBU2 Day ProtestTwo Day Strike