- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
“மகிழ்ச்சி., இன்னும் அதிகமாக செய்யுங்கள்..” வங்கிகளில் அடிப்படை வசதிகள் குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பதில்!
பொதுத்துறை வங்கிகளின் பல்வேறு கிளைகளில் போதிய அடிப்படை வசதி இல்லை இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள் என ஆம் ஆத்மி எம்பி கூறிய குற்றசாட்டுகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றிலுமாக மறுத்தார்.

Author: M Manikandan
Published: March 27, 2025
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வங்கி திருத்த சட்டம் 2024 மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து வருகிறார்.
ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா
அப்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ராகவ் சதா பேசுகையில், நாட்டில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என கூறினார். சாதாரண அடிப்படை சேவைகளை பெறுவதற்கே மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என பேசினார். .
அடிப்படை சேவைகளை பெறுவதற்கு கூட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது என்றும், பல்வேறு பொதுத்துறை வங்கி கிளைகளில் இடம் போதுமானதாக இல்லை. முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. அங்குள்ள மின்விசிறிகள் கூட சரியாக வேலை செய்யவில்லை. சாமானிய மக்களுக்கு கூட அதிக அளவில் அபாரதங்கள் விதிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வங்கி கணக்கு அறிக்கை உள்ளிட்ட அடிப்படை சேவைகள் பெறுவதற்கு கூட வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது என குறிப்பிட்டு பேசினார்.
நிதியமைச்சர் பதில் :
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவரை கிண்டல் செய்யும் நோக்கில் பதில் அளித்தார். முதலில் ராகவ் சதா குற்றசாட்டுகளை தான் மறுப்பதாக கூறினார்.மேலும், அவர், கோபப்படாவிட்டால், நான் ஒன்று கூறுகிறேன். அதே போல வங்கியில் உள்ள மின்விசிறிகளின் எண்ணிக்கை, வங்கியின் நிலை, எந்தெந்த வங்கி சுவர்களில் வெள்ளையடிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வங்கி சுவர்களில் வர்ணம் பூசப்படாமல் இருந்தது என்பதை கவனித்தார். அதனை கண்டு நான் மகிழ்ந்தேன். எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.
அதே போல கிராமப்புற வங்கிகளுக்குச் சென்று அவற்றைப் பார்க்க வேண்டும். அங்கு எத்தனை இடத்தில் மின்விசிறிகள் இல்லை, கதவுகள் இல்லை, நாற்காலிகள் இல்லை என்பதை ராகவ் சதா, தயவு செய்து உங்கள் கணக்கெடுப்பை அதிகமாகச் செய்யுங்கள். இது நாட்டிலுள்ள மக்களுக்கு உதவும். இதன் மூலம் மக்களுக்கு எங்களால் அதிகளவில் உதவி செய்ய முடியும். தயவுசெய்து செய்யுங்கள்," என்று அவரை கிண்டல் செய்யும் நோக்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
ராகவ் சதா மேலும் கூறியவை..,
ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா அதனை மட்டும் கூறவில்லை. தனது உரையில் பல்வேறு கருத்துக்களி கூறினார். அவர் பேசுகையில், " பொதுமக்களின் சேமிப்பு, விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக்கடன், ஓய்வூதியம் வரை ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் வங்கி அமைப்பு ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெருகிவரும் வங்கி மோசடிகள், கடன் வசூல் பிரச்சனைகள் மற்றும் ஊழியர்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதால் வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
நாட்டில் வீட்டுக் கடன் விகிதம் 8.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கல்விக் கடன்கள் 8.5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது. இதன் விளைவாக, சொந்த வீடு இளைஞர்களுக்கு கனவாகவே உள்ளது. மேலும், கல்வி மிகவும் விலை உயர்ந்ததாகி வருகிறது. மாணவர்கள் சம்பாதிக்கத் தொடங்கும் முன்பே கடனில் தள்ளப்படுகிறார்கள். MSME கடன் விகிதங்கள் 11 சதவீதத்தை எட்டியுள்ளன. இதனால் சிறு வணிகங்கள் வளர கடினமான சூழல் உள்ளது.
சேமிப்பு வட்டி குறைகிறது
சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வருகிறது. பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கும் போது FD விகிதங்கள் 6.5 சதவீதமாக உள்ளது. அதாவது சேமிப்பு காலப்போக்கில் மதிப்பை இழக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) விகிதம் 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது நீண்ட கால நிதி பாதுகாப்பை பாதிக்கிறது.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க மக்கள் வங்கிகளுக்கு வருகிறார்கள். விவசாயிகள் பயிர்களை வளர்க்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு பணம் சேமிக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் மகள்களின் திருமணத்திற்காக சேமிக்கிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கை தற்போது சிதைந்து வருகிறது.
டிஜிட்டல் மோசடி :
டிஜிட்டல் பேங்கிங்கில் மோசடி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. 2024 நிதியாண்டில் 36,075 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் கடன் மோசடி ஆகியவை இந்த மோசடியில் அதிகமாக உள்ளது. சைபர் மோசடியால் 2024 நிதியாண்டில் ரூ. 2,054.6 கோடி இழப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் UPI மோசடி அந்த ஆண்டில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த சைபர் மோசடி வழக்கில் பொதுத்துறை வங்கிகள் (PSBs) அதிக எண்ணிக்கையிலான மோசடி வழக்குகளைப் கொண்டுள்ளது. வங்கிகள் தங்கள் தகவல் தொழில்நுட்ப பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 10 சதவீதத்தை இணைய பாதுகாப்பிற்காக ஒதுக்க வேண்டும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் அங்கீகாரத்தை செயல்படுத்த வேண்டும் என பல்வேறு வங்கி சார்ந்த பிரச்னைகளை ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி ராகவ் சதா மாநிலங்களவையில் குறிப்பிட்டு பேசினார்.