வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு.! மார்ச் 31-க்குள் இதனை செய்ய மறந்துவிடாதீர்கள்…,
வருமான வரி செலுத்துபவர்கள் வரும் மார்ச் 31 நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் தங்கள் வருமான வரி கணக்குகளில் என்னென்ன தரவுகளை சேர்க்க வேண்டும் என தனியார் செய்தி நிறுவனம் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

Author: M Manikandan
Published: March 28, 2025
ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 உடன் நிறைவடையும். ஒரு வருட நிதி கணக்கு வழக்கு என்பது இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை குறிப்பிடும். இதில் வருமான வரி செலுத்துவோர் குறிப்பிட்ட வரவு செலவு தரவுகளை தங்கள் வருமான வரி கணக்குகளில் மார்ச் 31க்கும் சேர்க்க வேண்டியவை குறித்து தனியார் செய்தி நிறுவனமான ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டுள்ளது.
Advertisement
அதில், வருமான வரி செலுத்துவோர் தங்கள் வரிகளைச் சேமிப்பது மட்டுமல்லாமல், வீண் அபராதங்கள் மற்றும் தேவையற்ற மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
ELSS மியூச்சுவல் ஃபண்டுகள், PPF , EPF, NSC, வரி சேமிப்பு FD-க்கள் மற்றும் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் ஒருவர் சேமித்து வந்தால், அவை வருமான வரி பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு சலுகைகளை பெற முடியும். இந்த ஆவணங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு சலுகைகளைப் பெறலாம்.
Advertisement
80C வருமான வரி விதிமுறையை முழுமையாக பயன்படுத்தி மேலும் வரி விலக்கு பெற விரும்பினால், NPS பிரிவு 80CCD(1B)-ன் கீழ் ரூ.50,000 கூடுதல் வரி விலக்கு விருப்பத்தைப் பெறலாம்.
ஒருவர் தனக்காவும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தால் அதன் மூலம் ரூ.75,000 வரை வரி விலக்கு பெற முடியும்.
Advertisement
2023-24 நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப் படிவத்தை (ITR) தாக்கல் செய்ய விரும்பினால், அதில் ஏதேனும் தவறு இருந்தால், அதனை வரும் மார்ச் 31 வரைதிருத்தி கொள்ளலாம். காலக்கெடுவை தாண்டினால் கடும் அபராதங்களை செலுத்த நேரிடும்.
ஒருவரின் மொத்த வரி TDS தவிர்த்து ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் வரும் மார்ச் 31க்குள் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். இல்லையெனில் வட்டி மற்றும் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், மார்ச் 31-ம் தேதிக்குள் செய்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த பான் எண் செயலிழந்து போக வாய்ப்புள்ளது. இது வங்கி மற்றும் நிதிப் பணிகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
ஒருவர் சமீபத்தில் ஒரு சொத்தை விற்று நீண்ட கால மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க விரும்பினால், மார்ச் 31க்கு முன்பாக NHAI அல்லது REC இன் 54EC பத்திரங்களில் ரூ.50 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
வருமான வரி செலுத்துவோரின் சம்பளம் அல்லது முதலீட்டில் TDS (முன்கூட்டிய வரி) பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், உடனடியாக படிவம் 26AS மற்றும் AIS (ஆண்டு தகவல் அறிக்கை) ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் பிழை இருந்தால், வரி தாக்கல் செய்வதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு அதை விரைவில் சரிசெய்ய வேண்டும்.
நீங்கள் வாடகை வீட்டில் வசித்து, அதன் மூலம் HRA சலுகையைப் பெற விரும்பினால், மார்ச் 31-ம் தேதிக்கு முன் வாடகை ரசீதுகளை வருமான வரி கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல், விடுமுறை நாட்களில் நீங்கள் பயணம் செய்து, LTA சலுகையைப் பெற விரும்பினால், பயண டிக்கெட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை சரியான நேரத்தில் வருமான வரித்துறையில் சமர்ப்பிக்கவும்.
இந்த மார்ச் மாதம் என்பது வருமான வரி செலுத்துவோர் முதலீடுகளை மறுபரிசீலனை செய்ய சரியான நேரம் இதுவாகும். ஒருவர் லாபத்தை பதிவு செய்ய விரும்பினால் அல்லது நீண்ட கால மூலதன ஆதாய வரியைத் தவிர்க்க விரும்பினால், இப்போதே அதற்காக திட்டமிட வேண்டும்.
No comments yet.
