தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

ஊழியர்கள் மீதான அதீத பணி அழுத்தம் : BEFI சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

வங்கி ஊழியர்கள் மீது தொழிலாளர் நல விதிமுறைகளை மீறி அதிக அழுத்தம் கொடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருவனந்தபுரம் மண்டல அலுவலகம் முன்பு BEFI சங்கத்தினர் ஜனவரி 28-ல் போராட்டம் நடத்தினர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 3, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) திருவனந்தபுர கிளையில் எழுத்தர் ஊழியர்களை, தங்க நகை கடன் தொடர்பான வங்கி நிர்வாகம் கொடுத்த இலக்குகளை அடையவில்லை எனக் கூறி ஊழியர்களை இலக்கு தொடர்பான வேலைகளை விரைந்து முடிக்க வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். அந்த ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைந்த பின்னரே வங்கிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது நடைமுறையில் உள்ள வங்கி தொழிலாளர் சட்ட விதிகளின் படி, இம்மாதிரியான பணிகள் வங்கி எழுத்தர் பிரிவு ஊழியர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் மீறி வங்கி நிர்வாகத்தின் இச்செயல் தொழிலாளர் சட்டங்களை மீறும் செயல் என கூறுகின்றனர் BEFI சங்கத்தினர்.     

மேற்கண்ட இந்த நடைமுறையை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) திருவனந்தபுரம் மண்டல அலுவலகம் முன் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) கடந்த ஜனவரி 28 அன்று வங்கி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்குகளை நிறுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தொழிலாளர் சட்டங்களை மீறுவதையும், அடைய முடியாத வணிக இலக்குகளை அடைய ஊழியர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதையும் எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

போராட்டத்திற்கான முக்கிய கரணம் : 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) திருவனந்தபுர கிளையில் வங்கி மேலாளர், ஊழியர்கள் கலந்துகொண்ட பணி நிமித்தமான ஆன்லைன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தங்க நகை கடனுக்காக நிர்வாகம் அளித்த இலக்குகளை இரண்டு எழுத்தர் ஊழியர்கள் அடையவில்லை என்பதற்காக வங்கியை விட்டு வெளியேறி அந்த இலக்குகளை முடித்துவிட்டு வங்கிக்கு திரும்ப கட்டாயப்படுத்தப்பட்டதாக BEFI குற்றம் சாட்டுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் BEFI ஜனவரி 28 அன்று போராட்டத்தை நடத்தியது. தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இதுபோன்ற பணிகள் எழுத்தர் ஊழியர்கள் ஒதுக்கப்படவில்லை என்றாலும், குறிப்பிட்ட இலக்குகளை அடைந்த பின்னரே இந்த ஊழியர்களை வங்கிக்கு திரும்புமாறு IOB  திருவனந்தபுரம் அலுவலகத்தின் மண்டல மேலாளர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரவிய காணொளி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சனில் பாபு கருத்து : 

BEFI-ன் மாநில செயலாளர் சனில் பாபு, இந்த சம்பவம் குறித்து கனலிடம் பேசுகையில், “இச்சம்பவம் வினோதமானது. ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தொழிலாளர் சட்ட ஒப்பந்தத்தின் படி, ஒரு எழுத்தர் ஊழியருக்கு இலக்குகளை அடைவதற்கான எந்த விதியும் இல்லை. இது அப்பட்டமான விதி மீறல். இலக்குகளை அடைய தங்கக் கடன்கள் குறித்து கேன்வாஸ் செய்யும்படி எழுத்தர் பணியாளரிடம் கேட்பது இதுவரை நான் கேள்விப்படவில்லை. இந்த நியாயமற்ற நடைமுறையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு எழுத்தர் பணியாளரை கிளைக்கு வெளியே அனுப்புவதும், இலக்கை அடையாமல் வங்கிக்கு திரும்ப வேண்டாம் என்று கூறுவதும் வங்கியின் முக்கிய செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கும்.” என்று கூறினார். 

ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் : 

வங்கி ஊழியர்கள் மீதான அழுத்தம் மற்றும் தொழிலாளர் ஒப்பந்தங்களை மீறுதல் ஆன்லைன் ஆலோசனை கூட்டம் மூலம் வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தம் மற்றும் பணி தொடர்பான அச்சுறுத்தல்கள் என ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் இந்த ஆர்ப்பாட்டம் நிவர்த்தி செய்தது. பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி பொறுப்புகளுக்கு அப்பால் அடைய முடியாத இலக்குகளை முடிக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

வங்கி தொழிலாளர் விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர் சேவை பிரிவுமட்டுமே வங்கிக்கு புதிய கணக்காளர்களை பெறுதல், வங்கிசேவைகளை சந்தைப்படுத்துதல் மற்றும் வங்கி சேவைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு அலுவலக நேரத்திற்குள் வழிகாட்டுதல் ஆகியவற்றில் உதவலாம், ஆனால் குறிப்பிட்ட விற்பனை இலக்குகளை அவர்களுக்கும் ஒதுக்க முடியாது.

வங்கியின் இதுபோன்ற நடைமுறைகள், எழுத்தர் மற்றும் அதிகாரி நிலை ஊழியர்களின் ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். BEFI பிரதிநிதிகள் இச்சம்பவம் குறித்த உடனடி நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தனர் மற்றும் தொழிலாளர் நல சட்டங்களுடன் இணங்குவதை உறுதி செய்ய வங்கி உயர் அதிகாரிகள் இச்சம்பவத்தில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திருவனந்தபுரம் ஆர்ப்பாட்டம் : 

இந்த ஆர்ப்பாட்டத்தை வக்கீல் ஐ.பி.சதீஷ், எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். BEFI மாநில பொதுச்செயலாளர் N.சனில்பாபு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சம்மேளனம் மத்திய குழு உறுப்பினர் M.செந்தூர்நாதன், BEFI மாநில துணைத் தலைவர் K.ஹரிகுமார், இணைச் செயலாளர் SBS பிரசாந்த், மாவட்டச் செயலாளர் N. நிஷாந்த் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றினர். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்.சஜீவ்குமார் தலைமை வகித்தார்.

எர்ணாகுளம் சம்பவம் : 

இதேபோன்ற சம்பவம் எர்ணாகுளம் பகுதியிலும் நடந்துள்ளது. அங்கு ஒரு IOB ஊழியர் வங்கி மேலாளர் கொடுத்த இலக்குகளை முடிக்க முடியாமல் மேலாளரால் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊழியர் மறுத்ததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மண்டல மேலாளர், வங்கியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையின் புகாரைத் தொடர்ந்து, பிராந்திய மேலாளர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் பதிவு செய்யப்பட்டது, அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

BEFI தலைவர்கள் இத்தகைய கட்டாய இலக்கு நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வங்கி ஊழியர்க;ளுக்கு ஒதுக்கப்பட்ட விதிமுறைகளின்படி தங்கள் கடமைகளை செய்ய அனுமதிக்கப்படுவதை வங்கி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வங்கி ஊழியர்கள் மீதான இத்தகைய பணி அழுத்தங்களை தடுக்க கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

Tags:BEFI ProtestBEFIIOB