தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / வங்கியியல்

வங்கி சேமிப்பு வைத்திருப்போர்களுக்கு குட் நியூஸ்! உயரும் வைப்புநிதி காப்பீடு தொகை?

DICGC கீழ் செயல்பட்டு வரும் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி காப்பீட்டு தொகையானது (Insurance cover for Bank deposits) ரூ.12 லட்சம் வரை உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 19, 2025

வங்கியில் சேமிப்பு கணக்கு , நிலையான வைப்பு நிதி கணக்கு, நடப்பு கணக்கு, RD என பலவகை சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது, வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திற்கு (DICGC) கீழ் பதிவு செய்து வைத்துள்ள வங்கிகள் ஒருவேளை திடீரென திவால் ஆகிவிட்டாலோ, வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று விட்டாலோ அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பணம் என்பது குறிப்பிட்ட அளவு காப்பீடு தொகையாக (Insurance cover for Bank deposits) திருப்பி செலுத்தப்படும். 

முன்னதாக ரூ.5 லட்சத்திற்கு மேல் அந்த வங்கி கணக்கில் சேமிப்பு வைத்திருந்தால் இன்சூரன்ஸ் பாதுகாப்பு தொகையாக ரூ.5 லட்சம்* (விதிமுறைகளுக்கு உட்பட்டு) வழங்கப்படும். ரூ.10 லட்சம் , ரூ.15 லட்சம் என எவ்வளவு சேமித்து வைத்திருந்தாலும் DICGC விதிமுறைப்படி ரூ.5 லட்சம் காப்பீடு தொகையாக வழங்கப்படும். 

1962-ல் ரூ.1,500-ல் ஆரம்பித்து 1993-ல் ரூ.1 லட்சமாக உயர்ந்தது. அதன் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் காப்பீடு உச்சவரம்பு உயர்த்தப்பட்டு இந்த வைப்பு நிதி காப்பீடு தொகை 2020 பிப்ரவரியில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

வருமானம் மற்றும் நாட்டின் பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த காப்பீடு தொகையை ரூ.20 லட்சம் வரை உயர்த்தவேண்டும் என சேமிப்பாளர்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் அமைப்பினர் வங்கிகளுக்கு தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

மூத்த குடிமக்கள் சங்கங்கள் கூறுகையில், மூத்த குடிமக்களின் மொத்த வங்கி வைப்புத்தொகையானது 2018-ல் ரூ.13.7 லட்சம் கோடியிலிருந்து 2023-ல் ரூ.34.2 லட்சம் கோடியாக அதிகரித்துளளது. இது 150% வளர்ச்சியாகும் எனக் குறிப்பிட்டு வைப்பு நிதி காப்பீட்டு தொகையை உயர்த்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

இந்த தொடர் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு நிதி சேவைகள் துறை செயலாளர் நாகராஜு தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், வங்கி வைப்புத்தொகைகளுக்கான காப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தார். 

தற்போது, ​​கூட்டுறவு வங்கிகள் மற்றும் அவற்றின் வைப்புத்தொகையாளர்கள் உட்பட அனைத்து காப்பீடு செய்யப்பட்ட வங்கிகளுக்கும் ரூ.5 லட்சம் வைப்புத்தொகை காப்பீட்டுத் தொகையாக வழங்கும் விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஒரு வங்கி கலைக்கப்பட்டாலோ அல்லது திவால் ஆனாலோ வைப்புத்தொகையாளருக்கு அவர் வைத்திருக்கும் வைப்புத்தொகைகளுக்கு ஏற்ப இழப்பீடு செலுத்தப்படும் என தெரிவித்தார். 

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் (Financial Express) வெளியிட்ட தகவலின் படி, அடுத்த மாதம் (மார்ச் 2025) வைப்பு நிதி காப்பீடு தொகை உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் உயர்த்துவது குறித்து முக்கிய அறிவிப்பு வரலாம் என கூறப்பட்டுள்ளது. 

Tags:InsuranceDFSDeposit insuranceDeposit insurance coverageDeposits