தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Monday, Apr 28, 2025 | India

Home / நிதி

முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகள் எது? முழு விவரம் இதோ!

2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த மதிப்பீடு பெற்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்ப்போம்.

News Image

Author: Gowtham

Published: April 22, 2025

2025-ஆம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் நிதி இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டு கால அளவு மற்றும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து மாறுபடும். முதலீட்டு செய்வதற்கு முன் நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது அவசியம். 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.

புதிய முதலீட்டாளர்களுக்கு லார்ஜ் கேப் மற்றும் ஹைப்ரிட் ஃபண்டுகள் பாதுகாப்பானவை, அதே சமயம் உயர் ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர்கள் ஃப்ளெக்ஸி கேப், மிட் கேப் அல்லது ஸ்மால் கேப் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். செபியின் கட்டளைப்படி, நிதிகள் மூலதனத்தில் குறைந்தது 65% பங்குகள் மற்றும் பங்கு பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

சிறந்த 10 மியூச்சுவல் ஃபண்டுகள் :-

  1. கனரா ரோபெகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் (லார்ஜ் கேப்)
  2. மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்ட் (லார்ஜ் கேப்)
  3. பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (ஃப்ளெக்ஸி கேப்)
  4. யுடிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (ஃப்ளெக்ஸி கேப்)
  5. ஆக்சிஸ் மிட் கேப் ஃபண்ட் (மிட் கேப்)
  6. கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் (மிட் கேப்)
  7. ஆக்சிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் (ஸ்மால் கேப்)
  8. எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (ஸ்மால் கேப்)
  9. எஸ்பிஐ ஈக்விட்டி ஹைப்ரிட் ஃபண்ட் (ஹைப்ரிட்)
  10. மிரே அசெட் ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட் (ஹைப்ரிட்)

முதலீடு செய்யும் உத்திகள்:-

ஒரு முறை முதலீடு செய்வதற்கு பதிலாக, மாதாந்திர SIP (Systematic Investment Plan) மூலம் முதலீடு செய்வது சந்தை ஏற்ற இறக்கங்களை சமநிலைப்படுத்த உதவும். SIP-ல் குறைந்தபட்சம் ரூ.100 முதல் தொடங்கலாம். இல்லையென்றால், உங்கள் முதலீட்டை லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் மற்றும் ஹைப்ரிட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யுங்கள். அதுவும் இல்லையெனில், ஈக்விட்டி ஃபண்டுகளில் 5-10 ஆண்டுகள் முதலீடு செய்ய தயாராக இருங்கள். இது சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க உதவும்.  

முதலீட்டுக்கு முன் எச்சரிக்கை:-

  • ஃபண்டின் கடந்த கால செயல்பாடு, ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் மற்றும் போர்ட்ஃபோலியோ விவரங்களை ஆராயுங்கள்.
  • உங்கள் நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் சுயவிவரத்திற்கு ஏற்ற ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க ஆலோசகரின் உதவியைப் பெறுங்கள்.
  • ஈக்விட்டி ஃபண்டுகள் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. பீதியடையாமல் நீண்ட கால பார்வையுடன் முதலீடு செய்யுங்கள்.
  • உங்கள் இலக்கு அடையப்பட்டவுடன் அல்லது ஃபண்டின் செயல்பாடு தொடர்ந்து மோசமாக இருந்தால் வெளியேறுவதற்கு திட்டமிடவும்.
Tags:investBest Mutual FundsInvesting in Mutual FundsMutual Funds

No comments yet.

Leave a Comment