தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Wednesday, May 14, 2025 | India
Home / நிதி

UPI பரிவர்த்தனைகள் எப்படி செயல்படுகிறது? எந்த செயலி உங்களுக்கு பெஸ்ட்?

ஆன்லைன் UPI பரிவர்த்தனைகள் எவ்வாறு இயங்குகிறது, பரவலாக பயன்படுத்தப்படும் UPI செயலிகள் எவை என்பது பற்றி இந்த செய்தியில் காணலாம்.

News Image

Author: M Manikandan

Published: April 17, 2025

ஐக்கிய பணப் பரிமாற்ற இடைமுகம் (Unified Payments Interface - UPI) என்பது தேசிய பணப் பரிமாற்றக் கழகமான NPCI உருவாக்கிய ஒரு நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையாகும். இது வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை எளிதாக்க பயன்படுத்தப்படுகிறது.

UPI பரிவர்த்தனைகளின் செயல்பாடு :
 

UPI ID உருவாக்கம் :
 

பயனர்கள் தங்களது மொபைல் போனில் Google Pay, PhonePeபோன்ற UPI செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்கை UPI செயலியுடன் இணைத்து ஒரு தனிப்பட்ட UPI ID-ஐ உருவாக்குக வேண்டும். 
இந்த ID, வங்கியில் பயனரால் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

பரிவர்த்தனை செயல்முறை :
 

பயனர் UPI செயலியில், யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரின் UPI ID, மொபைல் எண் அல்லது QR குறியீட்டை உள்ளீடு செய்கிறார்.  
பணத்தின் அளவு உள்ளிடப்பட்டு, பரிவர்த்தனை UPI PIN (தனிப்பட்ட அடையாள எண்)  உள்ளீடு செய்யப்படுகிறது.
NPCI-இன் UPI அமைப்பு, பயனரின் வங்கியிலிருந்து பெறுநரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை உடனடியாக மாற்றுகிறது.

முக்கிய அம்சங்கள் :
 

24/7 பரிவர்த்தனை வசதி.
வங்கி விடுமுறை நாட்களிலும் செயல்படும்.
பணம் அனுப்புதல், பெறுதல், பில் செலுத்துதல், ஆன்லைன் வணிக பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு : 

UPI PIN மற்றும் மொபைல் சாதன பாதுகாப்பை கொண்டுள்ளது.
 

தொழில்நுட்ப பின்னணி :
 

UPI ஆனது IMPS (Immediate Payment Service) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
வங்கிகள், NPCI, மற்றும் UPI செயலிகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு.

 

பிரபலமான UPI தளங்கள் :
 

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் UPI செயலிகள்:
 

Google Pay (Tez):
 

பெரும்பாலான பயனர்கள், பரவலான வணிகர்கள் என பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் கேஷ்பேக் மற்றும் சில சிறப்பு கூப்பன் திட்டங்கள் உள்ளன.
 

PhonePe :
 

கூகுள் பே போல பரிவர்த்தனை சேர்த்து, பில் செலுத்துதல், முதலீடுகள் வரை பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.  இந்த செயலி பல மொழிகளில் கிடைக்கிறது.
 

Paytm :
 

UPI உடன் டிஜிட்டல் வாலட் சேவைகளையும் இது வழங்குகிறது.
ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றிற்கு பிரபலமாக உள்ளது..
 

BHIM (Bharat Interface for Money):
 

NPCI-ஆல் உருவாக்கப்பட்டது, அரசு ஆதரவு பெற்ற UPI செயலி.
எளிமையான பயன்பாடு, பல்வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 
 

Amazon Pay :
 

ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் UPI பரிவர்த்தனைகளுக்கான ஒருங்கிணைந்த UPI சேவையாகும். அமேசான் ஷாப்பிங் தளத்தில் இதனை பயன்படுத்த எளிது.
 

WhatsApp Pay :
 

வாட்ஸ்அப் செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் வாயிலாக நண்பர்களுக்கு எளிதாக பணம் அனுப்புவதற்கு பயன்படுகிறது.
மேற்கண்ட தகவல்களை அடிப்படியாக கொண்டும்,உங்கள் பயன்பாடுகளை கவனத்தில் கொண்டும் உங்களுக்கு ஏற்ற UPI செயலியை பயன்படுத்துவது நல்லது. 

Tags:UPI servicesUPIGPayAmazon PayPhonePeBHIM

No comments yet.

Leave a Comment