தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

கல்விக்கடன் சிறந்ததா? சேமிப்பில் கல்வி கட்டணம் செலுத்துவது சிறந்ததா?

கல்வி கட்டணம் செலுத்துகையில் சேமித்த பணத்தை செலுத்துவதா அல்லது அதற்கென கல்விக்கடன் வாங்கி அதன் மூலம் கட்டணம் செலுத்தி பின்னர் மாதாந்திர தவணை செலுத்துவது சிறந்ததா என EduFund எனும் நிதி ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 24, 2025

இந்தியாவை பொறுத்தவரையில் கல்வி என்பது ஒருவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் கூறி தெரியவேண்டியதில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்பது நம்பிக்கை. அது உண்மையும் கூட. 

அதேநேரம் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணம் என்பது கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் சுமார் 60 முதல் 70% வரை உயர்ந்துள்ளதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ படிப்பு செலவு என்பது சில இடங்களில் சுமார் ரூ.1 கோடியை எட்டியுள்ளது. கல்வி கற்க ஆர்வம் அதிகரிக்க தொடங்கியதும், அரசு கல்வி நிலையங்கள் மூலம் அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத சூழல் நிலவுவதாலும் இத்தகைய கட்டண உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

மேலும் கல்விக்கான பணவீக்கம் என்பது 10% முதல் 11% இருப்பதால் அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் கல்வி கட்டண செலவானது இரட்டிப்பாகும் எனக் கூறப்படுகிறது. இந்த கட்டணங்களை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறைக்கான கல்வி கட்டணம் குறித்த திட்டமிடலை இப்போதிருந்தே திட்டமிடுவது அவசியம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். 

இந்திய வங்கிகள் சங்கம் (IBA) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, புதிய கல்வி கடன் விண்ணப்பங்கள் 2019-20ல் 3,22,163ஆக இருந்தது என்றும், அவை 2023-24-ல் 5,50,993ஆக அதாவது சுமார் 71%-க்கும் மேலாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வருமான வரி (IT) சட்டம், 1961-ல் பிரிவு 80E-ன் படி கல்விக்கடன் பெற்று அதனை மாதத்தவனை மூலம் திருப்பி செலுத்தினால் அதற்கு வருமான வரியில் இருந்து, வரி செலுத்துவோர் விலக்கு கோரலாம். 

கல்விக்கடன் vs சேமிப்பு : 

உதாரணமாக ரூ.10 லட்சம் கல்விகட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனை செலுத்த 2 வழிகள் உள்ளது. ஒன்று கடன் வாங்குவது, மற்றொன்று சேமித்த தொகையை கொண்டு கட்டணம் செலுத்துவது. இவை இரண்டுக்கும் இடையேயான வித்தியாசங்களை காணலாம்…

  • கல்வி செலவு - ரூ.10 லட்சம் ; கால அளவு - ஒரு ஆண்டு.
  • வட்டி விகிதம் - 10% (கடன் வட்டி & சேமிப்பு வட்டி). 
  • மாதாந்திர தவணைத் தொகை - ரூ.87,916/- (கல்வி கடனுக்கு மட்டும்.)
  • மொத்தம் திருப்பி செலுத்தும் தொகை - ரூ.10,54,991/-
  • கடனுக்கான மொத்த வட்டி தொகை - ரூ.54,991/-
  • முதலீட்டில் இழக்கும் வருமானம் - ரூ.1 லட்சம். (சேமிப்பு தொகை கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால் 10% வட்டி வீதத்தில் கிடைத்திருக்கும் தொகை)
  • கல்விக்கடன் சலுகை (பழைய விதிமுறை 30%) - ரூ.16,497/-
  • வரிசலுகை கிடைத்த பிறகு கடன் வட்டி செலுத்திய மொத்த தொகை - ரூ.38,493/-
  • சேமித்து வைத்திருந்தால் கிடைத்திருக்கும் தொகை - ரூ.1 லட்சம். 

சேமித்த பணத்தை கட்டணமாக செலவு செய்தால் ரூ.10 லட்சம் (10%) இழப்பீர்கள். அதுவே கல்விக்கடனாக பெற்று அதனை தவணை மூலம் திருப்பி செலுத்தி இருந்தால் ரூ.38,493/- (38.5%) மட்டுமே செலுத்தி இருப்பீர்கள் (வருமானவரி விதிமுறை, வட்டி விகிதங்களை பொறுத்து). 

கல்வி கடனின் மேலும் நன்மைகள் :  

  • படிக்கும் காலத்தில் தவணை செலுத்த வேண்டியதில்லை.
  • கடனை திருப்பி செலுத்தல் கால அவகாசத்தை நீட்டித்து கொள்ளலாம்.
  • வேறு முதலீடுகள் மூலம் அதிக வருவாய் ஈட்டிக்கொள்ளலாம். 
  • கல்விக் கடன்கனுக்கான வரிச் சலுகைகள்.

கடன் சுமையை சமாளித்தல் : 

இந்த கடன் செலுத்துதலில் உளவியல் காரணிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. கடன் வாங்குவது, அதனை திருப்பிச் செலுத்து என்பது பெற்றோருக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடும். மேலும், மாதாந்திர EMI என்பது அவர்களின் அன்றாட செலவுகளில் சில நிதி சிக்கலை உருவாகக்கூடும். 

கல்விக் கடன் அல்லது சேமிப்பு என இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதற்கு பதிலாக இரண்டையுமே தேர்வு செய்யலாம்.  ரூ.10 லட்சம் கட்டணத்தில் ரூ.5 லட்சம் கல்விக் கடனாகவும், 50% சேமிப்பு மூலமாகவும் கட்டணம் செலுத்தினால், உங்கள் EMI ரூ.43,958ஆக இருக்கும். மொத்த திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.5,27,495 ஆகும்,  கல்விக் கடனுக்கும் சேமிப்புக்கும் இடையிலான இந்த பிரிப்பு என்பது ஒவ்வொரு தனிநபரின் நிதி நிலைமை மற்றும் வசதி நிலையைப் பொறுத்தது மட்டுமே. இந்த தகவல்/ஆய்வுகள் EduFund நிதி மேலாண்மை நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டது. 

Tags:LoansEducation loan