- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
தள்ளிபோகிறதா 2 நாள் ஸ்டிரைக்? ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Author: Bala Murugan K
Published: March 21, 2025
வங்கி ஊழியர்கள் சங்கமான UFBU சங்கத்தினர் வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னதாக அறிவித்திருந்தார்கள். இந்த தேதிக்கு முன்னதாகவே அதாவது மார்ச் 3, 11,12 ஆகிய தேதிகளில் இதற்கான முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த மார்ச் 3ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மகா தர்ணா போராட்டத்திலும் வங்கி ஊழியர்கள் பெரும் அளவில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.11 ஆம் தேதி வங்கிகளின் தலைமை அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களின் முன், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
எனவே, மார்ச் 24-25 வேலைநிறுத்தம் பொருளாதார ரீதியாக கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், UFBUவின் வேலைநிறுத்த அறிவிப்பு தொடர்பாக, தலைமை தொழிலாளர் ஆணையர் மார்ச் 18, 2025 அன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் ஒரு சமரசக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் எனவும், நிதிச் சேவைகள் துறை, இந்திய வங்கிகள் சங்கம், IDBI வங்கி மற்றும் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த கூட்டத்தில் சமரச பேச்சுவார்த்தை முடிந்ததாகவும், இதனால் திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த கூட்டத்தில் நடந்த விஷயங்கள் குறித்து விவரமாக இந்த பதிவில் பார்ப்போம்.
வங்கி ஊழியர்கள் கவனத்திற்கு – சமரசக் கூட்டத்தின் முழு தகவல்
இன்று காலை தொழிலாளர் ஆணையரின் தலைமையில் அடைந்த நிலை சமரசக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய வங்கி சங்கம் (IBA) மற்றும் நிதி சேவைகள் துறை (DFS) ஆகிய அமைப்புகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முக்கிய கோரிக்கைகள் குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
நடந்த விவாதங்கள்
ஐந்து நாள் வங்கி வேலை:
DFS இணைச் செயலாளர் வீடியோ கால் மூலம் இந்த கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது நிதியமைச்சர் மற்றும் DFS செயலாளர் ஆகியோருக்கு இடையே ஐந்து நாள் வங்கி வேலை குறித்த நேர்முக பேச்சுவார்த்தை நடைபெற்றதைக் குறிப்பிட்டு சில விஷயங்களை பேசினார். இவர் பேசியவுடன் இந்த விவாதம் நன்மையான முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், விசயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மற்ற கோரிக்கைகள்:
அதைப்போல, IBA, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் சார்ந்த கோரிக்கைகளை மேலும் விரிவாக பேச உத்தேசம் தெரிவித்தது. குறிப்பாக வேலைவாய்ப்பு (Recruitment), முன்னேற்ற ஊக்கத்தொகை (PLI) மற்றும் பிற சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என IBA தெரிவித்தது.
மத்திய தொழிலாளர் ஆணையரின் அறிவிப்பு:
மத்திய தொழிலாளர் ஆணையர் (CLC), ஐந்து நாள் வங்கி வேலை நடைமுறைக்கு வரும் வரை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க இருப்பதாக அறிவித்தார். இந்த விவகாரம் சரியான முடிவிற்கு கொண்டு வரப்படும் வரை தொடர்ந்து கவனித்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார். முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் மீண்டும் கூட்டம் நடத்தப்படும்.
இந்த நலம்சார்ந்த முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பது அவசியம் என ஐக்கிய வங்கி தொழிற்சங்க அமைப்பு (UFBU) கருதுகிறது. எனவே, மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் ஒரு அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அனைத்து சங்க உறுப்பினர்களும் கவனிக்க வேண்டியவை நடப்பு சூழ்நிலையை முழுமையாக கண்காணித்து, யாரும் எந்தவித குழப்பத்திற்கும் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கிறோம். ஏப்ரல் மாதம் நடைபெறும் கூட்டத்தில் எவ்வாறு முன்னேற்றம் நடைபெறுகிறதோ, அதைப் பொறுத்து அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவரங்கள் மற்றும் அடுத்த கட்ட செயல் திட்டங்கள் குறித்து விரிவான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும். வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் அனைத்து அலகுகளும் இந்த தகவலை பரப்பி, அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவும் ஐக்கிய வங்கி தொழிற்சங்க அமைப்பு (UFBU) தெரிவித்துள்ளது. போராட்டம் நடைபெறும் தேதி பற்றிய தெளிவான அறிவிப்பு இல்லை என்கிற காரணத்தால் விரைவில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.