அரசு சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகித மாற்றம் இருக்கிறதா? வெளியான புதிய அறிவிப்பு!
மத்திய அரசு சேமிப்பு திட்டங்களான PPF, தபால் நிலைய சிறுசேமிப்பு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே உள்ள வட்டி விகித முறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: M Manikandan
Published: March 29, 2025
மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மறு ஆய்வு செய்து புதிய வட்டி விகித அறிவிப்பை அறிவிக்கும். இந்த முறை, 2025-ம் நிதியாண்டு வரும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாத காலத்திற்கு, PPF மற்றும் தபால் நிலைய சிறு சேமிப்பான NSC போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்ற இல்லை என்று முடிவு செய்துள்ளது. அதாவது, முந்தைய காலாண்டில் இருந்த வட்டி விகிதமே தொடரும் என்பதை குறிப்பிட்டுள்ளது.
Advertisement
அதன்படி பொது நிலையான வைப்பு நிதி PPF-க்கு 7.1 சதவீதமும், தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டத்திற்கு 4 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறது.
பெண் பிள்ளைகளுக்கான சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் உள்ள சேமிப்புகளுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் உள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் மூன்றாண்டு வைப்புத்தொகையின் விகிதம் 7.1 சதவீதமாகவே உள்ளது.
Advertisement
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமான SCSS வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. இது பிற சேமிப்பு திட்டங்களை விட அதிக வருமானத்தை வழங்குகிறது.
ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகை திட்டமான RD போன்ற திட்டங்களுக்கு 6.7 சதவீத வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் காலாண்டில் இந்த வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
No comments yet.
