- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இதுதான் நல்லாட்சியா? 2 நாள் வேலை நிறுத்தம் ஏன்? AIBEA புதிய விளக்கம்!
பல்வேறு வங்கிகளில் பணியாளர் இயக்குனர் மற்றும் அதிகாரி இயக்குனர் ஆகிய பணியிடங்கள் கடந்த 8/10 வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்து வருகிறது அதில் தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என AIBEA சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Author: M Manikandan
Published: March 17, 2025
வாரத்தில் 5 நாட்கள் வேலை,வங்கி காலிப்பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி UFBU சங்கத்தின் தலைமையில் பல்வேறு வங்கி சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் மிக முக்கிய போராட்ட முன்னெடுப்பாக 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தமானது வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு முன்னதாக கருப்பு பேட்ஜ் அணிவது, வங்கி தலைமை அலுவலகங்கள் முன்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை வங்கி ஊழியர்கள் நடத்தி வருகின்றனர்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கையில் ஒரு முக்கிய கோரிக்கையாக பார்க்கப்படுவது வங்கி யில் தொழிற்சங்கங்கள் பிரதிநிதியாக வங்கி நிர்வாக தலைமை பொறுப்புகளில் பணியாளர் இயக்குனர் மற்றும் ஆபிசர்கள் இயக்குனர் என இரு பொறுப்புகள் 1970 முதல் நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 8, 10 வருடங்களாக இந்த பல்வேறு வங்கிகளில் இந்த பதவிகள் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளில் முக்கிய ஒன்றாகும்.
இதனை குறிப்பிட்டு AIBEA பொதுச்செயலாளர் C.H.வெங்கடாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசை விமர்சித்தும் தங்கள் கருத்தை முன்வைத்துள்ளார். வருகிற மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் எங்கள் வேலைநிறுத்த போராட்டத்தின் மூலம் ஏன் பணியாளர் இயக்குநர்கள் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
1969-ல் AIBEA போராடி பெரிய தனியார் வங்கிகளை தேசியமயமாக்கிய பிறகு, AIBEA வங்கிகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், வங்கிகள் பொது மக்களின் நலனுக்காக செயல்படுவதை உறுதி செய்யவும் வங்கி வாரியங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
AIBEA-ன் முயற்சியின் காரணமாக, SBI உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் 1 பணிப்பாளர் இயக்குனர் மற்றும் 1 அதிகாரி இயக்குநரை நியமிப்பதற்கான திட்டத்தை 1970-ம் ஆண்டு அரசாங்கம் ஒப்புக்கொண்டு உருவாக்கியது. அதன்பிறகு, தொழிற்சங்க பிரதிநிதிகள் வங்கிகளில் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால், நல்லாட்சி என்று தம்பட்டம் அடிக்கும் NDA/BJP அரசு கடந்த 8, 10 ஆண்டுகளாக இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதால் வங்கிகளின் இயக்குநர் குழுவில் உள்ள தொழிற்சங்கங்களின் பங்கு பறிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் & அதிகாரி இயக்குனர்கள் காலிபணியிடங்கள் விவரம் :
பாங்க் ஆப் பரோடா
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 19-97-2017
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 25-07-2014
பாங்க் ஆப் இந்தியா
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 18-07-2015
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 01-05-2017
பாங்க் ஆப் மகாராஷ்டிரா
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 16-03-2014
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 21-07-2016
கனரா வங்கி
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 03-01-2017
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 21-10-2014
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 02-04-2016
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 10-07-2016
இந்தியன் வங்கி
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 11-03-2017
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 29-05-2016
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 01-05-2016
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 23-01-2017
பஞ்சாப் நேஷனல் வங்கி
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 26-06-2016
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 08-03-2016
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 26-09-2009
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 23-11-2014
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 20-11-2014
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 03-10-2015
யூகோ வங்கி
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 13-12-2015
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 15-02-2016
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
தொழிலாளர் இயக்குனர் பதவி காலியான நாள் : 27-02-2014
அதிகாரி இயக்குனர் பதவி காலியான நாள் : 04-05-2014
55/57/58 வயதில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்திறனை நிர்வாகங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், பல ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான இந்த முக்கியமான பதவிகளை நிரப்பாத அரசின் செயல்திறனை யார் மதிப்பாய்வு செய்வார்கள்? மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.