- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்! ஜியோ ஹாட்ஸ்டார் சிறப்பு திட்டங்களை அறிவித்த ஜியோ,வோடபோன்!
மூன்று மாதங்களுக்கு இலவச பிரீமியம் JioHotstar வசதியை வாங்கும் ரீஜார்ச் திட்டங்களைய ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: March 3, 2025
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களுடைய ஜியோ சினிமாவை டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) என்ற புதிய ஸ்ட்ரீமிங் தளத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது . இந்த புதிய சேவை மூலம், ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, அதிகமான டேட்டா மற்றும் பிற சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், ஜியோ மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் இணைந்த காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் , ICC கிரிக்கெட் போட்டிகள், பிரபல இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், இணையத் தொடர்கள், Marvel, Star Wars, Pixar, மற்றும் பல்வேறு கேமிங் நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில் பார்க்கலாம். இருப்பினும் சந்தா கட்டி தான் பார்க்க முடியும் என்பதால் பலரும் கவலையில் உள்ளனர்.
அப்படி கவலைப்படுபவர்கள் ஜியோ,ஏர்டெல், வோடோ போன் ஆகிய பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ ஹாட்ஸ்டார் பிளானையும் சேர்த்து ரீஜார்ச் செய்து கொள்ளலாம். என்னென்ன சிம்கார்டுகளில் என்னென்ன பிளான் உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் (ஜியோஹாட்ஸ்டாருடன்)
1. ரூ.195 – Cricket Data Pack
- டேட்டா: 15GB (4G/5G)
- அழைப்புகள்: இல்லை (Data Only Pack)
- JioHotstar சந்தா: 3 மாதங்கள் (HD தரம், ஒரு சாதனத்தில் மட்டுமே)
- செல்லுபடி: டேட்டா முடியும் வரை
இந்த திட்டம் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.ஏனென்றால் மார்ச் மாதம் கடைசியில் IPL போட்டிகள் தொடங்கிவிடும். அது மட்டுமின்றி. ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.எனவே, இந்த திட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
2. ரூ.949 – ப்ரீபெய்ட் திட்டம்
- டேட்டா: தினசரி 2GB (4G/5G)
- அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள்
- எஸ்எம்எஸ்: தினசரி 100 SMS
- JioHotstar சந்தா: 3 மாதங்கள்
- செல்லுபடி: 84 நாட்கள்
5G கிடைக்கும் இடங்களில் அன்லிமிடெட் நெட் கிடைக்கும் என்பதால் அதிக அளவிலான டேட்டா, அழைப்புகள், SMS மற்றும் OTT ஸ்ட்ரீமிங் வேண்டும் என்றால், இந்த திட்டம் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
(வோடபோன் ஐடியா) ப்ரீபெய்ட் திட்டங்கள் (JioHotstar உடன்)
1. ரூ.151 – Data Pack
- டேட்டா: 4GB
- ஜியோஹாட்ஸ்டார் சந்தா: 3 மாதங்கள்
- செல்லுபடி: 30 நாட்கள்
இந்த திட்டம் குறைந்த செலவில் OTT மற்றும் ஸ்ட்ரீமிங் மற்றும் டேட்டா தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது.
2. ரூ.169 – Data Pack
- டேட்டா: 8GB
- ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா: 3 மாதங்கள்
- செல்லுபடி: 30 நாட்கள்
இந்த திட்டம் 4GB-க்கும் அதிகமான டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு சிறந்த தேர்வு.
3. ரூ.469 – ப்ரீபெய்ட் திட்டம்
- டேட்டா: தினசரி 2.5GB
- கூடுதல் டேட்டா: தினமும் அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை 2.5GB
- அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள்
- எஸ்எம்எஸ்: தினசரி 100 SMS
- ஜியோஹாட்ஸ்டார் சந்தா: 3 மாதங்கள்
- செல்லுபடிக்கு: 28 நாட்கள்
OTT ஸ்ட்ரீமிங் மற்றும் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய நன்மைகளை வழங்குகிறது.இரவு 12 மணிக்கு மேல் உங்களுடைய டேட்டா தீர்ந்துவிட்டது என்றால் நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்திருந்தால் 6 மணி வரை இலவசமாக வரம்பற்ற டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் என்ன பிளான்?
இன்றும் Airtel மற்றும் BSNL நிறுவனங்கள் ஜியா ஹாட்ஸ்டார் சந்தா திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடவில்லை. ஆனால், விரைவில் இரண்டும்புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளனர். அவர்கள் அறிவித்த பிறகு தான் என்னென்ன திட்டங்கள் இருக்கும் என்பது தெரியவரும்.
எந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்
- குறைந்த செலவில் (JioHotstar) ஜியோ ஹாட்ஸ்டார் திட்டம் பெற வேண்டும் என்றால் – Jio ரூ.195, Vi ரூ.151 திட்டங்கள் சிறந்தவை. பட்ஜெட் குறைவாக செலவு செய்ய திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த திட்டங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.
- மேலும், அதுவே அதிக டேட்டா வசதி தேவைப்பட்து என்றால் – ஜியோ ரூ.949, வோடோபோன் ரூ.469 சிறந்த தேர்வுகள்
- ஜியோ ஹாட்ஸ்டார் வசதியுடன் அழைப்புகள், SMS தேவைப்பட்டால் – Vi ரூ.469, Jio ரூ.949 திட்டங்கள் சிறந்தவையாக இருக்கும்.