- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கேள்விக்கு பதில் வேணுமா? எக்ஸ் தளத்தில் அந்த அம்சமும் இருக்கு... சூப்பரான grok டிப்ஸ்!
எக்ஸ் வலைத்தளத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு சூப்பரான டிப்ஸ் ஒன்று வந்திருக்கிறது.

Author: Bala Murugan K
Published: March 13, 2025
AI தொழில் நுட்பங்களின் வளர்ச்சியானது அசுர வளர்ச்சியாக வளர்த்துக்கொண்டு இருக்கிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் சாட்ஜிபிடி (ChatGPT) பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதிதாக ஒரு செயலியை அறிமுகம் செய்தால் கூட அதிலும் AI தொழிநுட்பம் மூலம் சாட்ஜிபிடி போல ஒரு AI கொண்டுவரப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படி தான் டிவிட்டர் (எக்ஸ்) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் க்ரோக் (Grok) என்கிற AI -ஐ கொண்டுவந்தார்.
இந்த க்ரோக்க்கில் சாட்ஜிபிடி வசதியை மிஞ்சும் அளவுக்கு புகைப்படங்கள் கேட்டாலே அதனை எடிட் செய்து கொடுத்தது மட்டுமின்றி தகவல்களை துல்லியமாக தருவதன் காரணமாக இதனுடைய பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே, எலான் மஸ்க் Grok 1, Grok 2, Grok 3 என தொடர்ச்சியாக அடுத்தடுத்த வெர்ஷன்களை கொண்டு வந்து பயனர்களை கவர்ந்து கொண்டு இருக்கிறார்.
கடைசியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு Grok 3 வெர்ஷனை அறிமுகம் செய்திருந்தார். இதில் இதற்கு முன்பு இருந்ததை விட கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் Grok 3 ஆனது மனிதன் போன்ற பதில்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அத்துடன் இதற்கு முன்பு வந்த மாடல்களில் எதாவது கேள்வி கேட்டால் கூட கொஞ்சம் தாமதமாக தான் பதில் தரும் ஆனால், Grok 3 கேட்டவுடன் விரைவாகவே பதில் அழித்துவிடும்.
பலருக்கும் தெரியாத புது ட்ரிக்
தொடர்ச்சியாக பலரும் Grok AI -ஐ பயன்படுத்தினாலும் எக்ஸ் வளைத்தளத்தில் பலருக்கும் தெரியாத டிப்ஸ் ஒன்று இருக்கிறது. எக்ஸ் வலைத்தளத்தில் Grok இருந்தாலும் அதை விட சுலபமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்றால் ஒருவருக்கு டேக் செய்து கேட்டாலே போதும் அது மனிதர் அளிக்கும் பதிலை போல நமக்கு பதில் கொடுத்துவிடுகிறது.
அதாவது இப்போது ஒரு படம் குறித்த வீடியோவை யாரவது ஷர் செய்கிறார்கள் என்றால் நீங்கள் அந்த படம் பெயர் என்ன? என்பது பற்றிய கேள்வியை போஸ்ட் போட்டவரிடம் கேட்பீர்கள்..அவரும் எதோ ஒரு நியாபகத்தில் மறந்துவிடுவார். இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஏனென்றால், நீங்கள் எக்ஸ் தளத்தில் Grok பெயரை சர்ச் செய்து அந்த கணக்கை பின் தொடருங்கள்.
பிறகு உங்களுக்கு எதாவது கேள்வி இருந்தாலோ அல்லது எதற்கும் விளக்கம் வேண்டும் என்றால் அந்த Grok ஐடியை டேக் செய்து கேட்டாலே போதும். துல்லியமாக செயல்பட்டு சில நொடிகளில் உங்களுடைய கேள்விக்கு Grok பதில் அளித்துவிடும். எனவே, இனிமேல் எதுவும் தெரியவில்லை என்றால் கூட நீங்கள் இதனுடைய உதவியுடன் வேண்டியதை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால், Grok அதிகாரப்பூர்வ கணக்கை எக்ஸ் வலைதளத்தில் பின்தொடர வேண்டும். அப்படி பின் தொடர்ந்திருந்தால் மட்டும் தான் உங்களுடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். எந்த மொழிகளில் எப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்றாலும் உங்களுக்கு கிடைத்துவிடும்.
