- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
DSLR கேமராவுக்கு போட்டி! சியோமி 15 சீரிஸ் எப்போது விற்பனை? சிறப்பம்சங்கள் இதோ…
பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான சியோமி (Xiaomi) நிறுவனம், தங்கள் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களான Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Ultra-வை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: March 4, 2025
சீன எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான சியோமி (Xiaomi) நிறுவனம், தனது இரண்டு ஸ்மார்ட்போன்களான Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Ultra-வை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகின்ற மார்ச் 11ம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இருப்பினும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டு நிகழ்வு பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் நடந்தது.
எந்த தேதியில் இந்த போன் அறிமுகமாகவுள்ளது? விலை எவ்வளவு சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி விவரமாக காணலாம்…
செயல் திறன்
இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 இல் ஹைப்பர்ஓஎஸ் 2 ஸ்கின் உடன் இயங்கும். இந்த போன் நான்கு வருட OS அப்டேட்களுடன் வரும்.
ரேம் & ஸ்டோரேஜ்
குவால்காம் ஸ்னாப்டிராகன் எட்டு எலைட் செயலியுடன் பொருத்தப்பட்ட Xiaomi 15 Ultra, 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.1 சேமிப்பிடத்தை வழங்குகிறது.
கேமரா
AI தொழில்நுட்பத்தில் அதிநவீன வசதிகளுடன் Xiaomi 15 சீரிஸ் மாடல்களில் Leica டியூன் செய்யப்பட்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 200MP Leica டெலிஃபோட்டோ லென்ஸ் கொடுக்கப்படுள்ளது
ஜியோமி 15 அல்ட்ரா மாடலில் 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா wide கேமரா, 32MP செல்பி கேமராவுடன் கிடைக்கிறது.
ஜியோமி 15 மாடலில், 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைட் லென்ஸ், 50MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா உடன் கிடைக்கிறது.
டிஸ்பிளே
6.73-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1-120Hz தகவமைப்பு புதுப்பிப்பு வீதம் மற்றும் 3200 nits உச்ச ஒளி பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பேட்டரி வசதி
சீன வேரியண்டில் 6000mAh பேட்டரி உள்ளது, உலகளாவிய மாடலில் வரும் இந்த போன் 90W வேகமான சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. பவர் பேக்கப்பிற்காக, போனில் 5410mAh பேட்டரி இருக்கும்
விலை & அறிமுகம் எப்போது?
Xiaomi 15 Ultra மாட்ல 16GB of RAM and 512GB ஸ்டோரேஜ் ரூ.1,36,100 இருக்காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோமி 15 - 12GB+256GB மாடல் விலை ரூ.90,700 ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிராகப்பூர்வ வெளியிட்டிற்கு பின்னரே உண்மையான விலை தெரியவரும். இந்தியாவில் மார்ச் 11-ம் தேதி முதலில் இந்த மாடல்கள் விற்பனைக்கு வருகிறது.