2 கி.மீ தூரம் பின்னோக்கி நடைபயணம்! KVGBOF சங்கத்தினரின் நூதன போராட்டம்!
கர்நாடகா கிராம வங்கி நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் KVGB அதிகாரிகள் சங்கத்தினர் 2 கி.மீ தூரம் பின்னோக்கி நடந்து நூதன எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Author: Kanal Tamil Desk
Published: January 23, 2025
AIBOC மற்றும் AIRRBOF சங்கங்களுடன் இணைந்து செயல்படும் கர்நாடகா கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் (KVGBOF), தங்கள் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை ஜனவரி 6,2025 அன்று அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.
அதன்படி, இன்று KVGBOF சங்கத்தினர் வங்கி நிர்வாகம் தங்கள் கொள்கையில் இருந்து பின்னோக்கி செல்வதாக குறிப்பிட்டு 2 கி.மீ தூரம் அளவுக்கு பின்னோக்கி நடந்து தங்கள் எதிர்ப்பபை பதிவு செய்துள்ளனர். இந்த நூதன போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட KVGBOF அதிகாரிகள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகா கிராம வங்கி நிர்வாகமானது டிஜிட்டல் செயல்முறையில் இருந்து மீண்டும் காகித பயன்பாட்டிற்கு மாறியுள்ளது, அதேபோல ஏற்கனவே வங்கி நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை முன்னறிவிப்பு இன்றி திரும்ப பெற்று கொண்டுள்ளது போன்ற குற்றசாட்டுகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்துவதாக KVGB அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
KVGBOF சங்கத்தினர் முன் வைக்கும் முக்கிய கோரிக்கைகள் :
தொழிற்சங்கங்கள் எழுப்பும் பல்வேறுக்கு குறைகளுக்கு நிர்வாகம் உரிய நடவடிக்கை அல்லது பதிலை அளிக்க வேண்டும்.
KVGBOF-ன் கோரிக்கைகளை நிர்வாகம் தொடர்ந்து புறந்தள்ளி வருகிறது சில தொழிற்சங்கங்க கோரிக்கைகள் மீது மட்டும் பாரபட்சம் காட்டுகிறது.
மற்ற வங்கிகளை போல NPS கட்டமைப்பின் கீழ் 14% முதலாளி பங்களிப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
ஜூன் 2024 முதல் நிலுவையில் உள்ள ஊழியர்களின் ஊதியத்தை அளிக்க வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கான நிலுவையிலுள்ள சலுகைகளை நிவர்த்தி செய்து, DFS வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.
பணியாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுப் பிரிவின் (PHRDD) தலைமை மேலாளரின் பாரபட்ச நடவடிக்கைக்காக அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் .
சந்தா தாமதங்களுக்கு உடனடி தீர்வு வேண்டும்.
சம்பள சீட்டுகள் மற்றும் வழக்கமான உறுப்பினர் புதுப்பிப்புகளில் தொழிற்சங்க இணைப்பு விவரங்களை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும்.
வெளிப்படையான, எந்தவித பின்புலமும் இல்லாத வகையில் இடமாற்றங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
No comments yet.