தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / RRB

வங்கி நிர்வாகத்தை கண்டித்து 2 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட KVGBOF சங்கத்தினர்!

கர்நாடகா கிராம வங்கி நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் KVGBOF சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 26, 2025

AIBOC மற்றும் AIRRBOF சங்கங்களுடன் இணைந்து செயல்படும் கர்நாடகா கிராம வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் (KVGBOF), தங்கள் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்ட அறிவிப்புகளை ஜனவரி 6, 2025 அன்று அறிக்கை வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். 

இதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 23ஆம் தேதியன்று தார்வாட் (Dharwad) நகரில் ஜூப்ளி பகுதியில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் பின்னோக்கி நடைபயணம் மேற்கொண்டு KVGBOF சங்கத்தினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து 2 நாள் (ஜனவரி 23, 24) தர்ணா போராட்டத்திலும் KVGBOF சங்கத்தினர் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் சுமார் 300க்குன் மேற்பட்ட KVGBOF சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.  

KVGBOF சங்கத்தினரின் முக்கிய கோரிக்கைகள் : 

  • திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் மற்ற சலுகைகளை அமல்படுத்துவதில் KVGB நிர்வாகம் தொடர்ந்து தாமதம் செய்கிறது. மற்ற RRBகள் ஏற்கனவே இந்த மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளன. 
  • 2017 அரசாங்க உத்தரவுப்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் ஊழியர்களின் பங்கு 14% ஆகவும், KVGB நிர்வாகம் 10% ஆகவும் இருக்க வேண்டும்.
  • கூடுதல் பொறுப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு கூடுதலாக 6% ஊதியம், புதிய தீர்வில் 15%ஆக உயர்த்தப்பட்டது. இந்த இரு சலுகைகளும் KVGB ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. 
  • பெண் ஊழியர்களுக்கான சிறப்பு விடுப்புக்கான ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளை நிர்வாகம் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது.  

நிர்வாகத்தின் அலட்சியம்…

KVGBOF சங்க பொதுச்செயலாளர் சாகர் ஷாஹா கூறுகையில், நிர்வாகம் தனது ஊழியர்களின் கோரிக்கைகளை அலட்சியம் செய்கிறது என விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில், “KVGB வங்கி அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை தாண்டி அதிக பொறுப்புகளை சுமந்து வேலை செய்து வருகின்றனர். ஊதியத் திருத்தங்கள், NPS பங்களிப்புகள் மற்றும் ஊழியர் விடுப்புப் பலன்களை நிர்வாகம் செயல்படுத்தத் தவறி வருகிறது. எங்கள் சங்கத்தில் இருந்து நாங்கள் பலமுறை எடுத்துரைத்தும் நிர்வாகம் எங்கள் நோக்கத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எங்கள் கடிதங்களுக்கு பதிலளிக்க மறுக்கிறது. இதன் மூலம் KVGB நிர்வாகத்தின் அலட்சியம் அப்பட்டமாக தெரிகிறது என சாகர் ஷாஹா கூறினார். 

கோரிக்கை கடிதம் : 

KVGBOF சங்கத்தினரின் போராட்டத்தின் 2வது நாளில், KVGBOF பொதுச் செயலாளர் சாகர் ஷாஹா, ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரிடம் முறையான கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார். அதில்,KVGB தலைவர் ஸ்ரீகாந்த் பண்டிவாட்  கீழ் செயல்படும் நிர்வாகத்தில், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும், உடனடிச் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கடிதம் வாயிலாக அப்போது வலியுறுத்திபட்டது. 

இந்த கோரிக்கைகள் தொடர்பாக KVGB தலைவர் ஸ்ரீகாந்த் பண்டிவாட் தனிப்பட்ட முறையில் கோரிக்கை கடிதத்தைப் பெற்று, குறைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக KVGBOF-க்கு உறுதியளித்தார். ஊழியர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவில் செயல்படுத்துவதற்கும் அவர் உறுதியளித்தார். 

இந்த உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், KVGBOF சங்கத்தினரின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் வாயிலாக தங்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவோம் என KVGBOF சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்

Tags:2 Day ProtestKVGBOF ProtestKVGBKarnataka Vikas Grameena BankKarnataka