- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
முடிவுக்கு வந்த 22 ஆண்டுகால பயணம்! ஸ்கைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைக்ரோசாப்ட்?
உலகின் முதல் வீடியோ அழைப்பு தளங்களில் ஒன்றான ஸ்கைப் செயலியை, இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் நிரந்தரமாக மூட திட்டமிட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: March 1, 2025
ஒரு காலத்தில் உலகில் மிகவும் புகழ்பெற்ற வீடியோ கால் சேவைகளில் ஒன்றாக ஸ்கைப் (Skype) விளங்கியது குறிப்பிடத்தக்கது. ஸ்கைப் செயலி பயனர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வசதியை வழங்குகிறது. பலர் இதை ஆன்லைன் உரையாடலுக்கு பயன்படுத்துகிறார்கள், இது உலகின் முதல் வீடியோ அழைப்பு தளங்களில் ஒன்றாகும். இப்போது மைக்ரோசாப்ட் அதன் வீடியோ அழைப்பு தளமான ஸ்கைப்பை நிரந்தரமாக மூட திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் இந்த நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இந்த தகவல்கள் குறித்து அவர்கள் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்கைப்பிற்கு விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது போல் அவர்களின் ஆம், ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் நிறுத்தப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வருமானம் குறைவு மற்றும் பல சமூக வலை தளங்களுடனான போட்டியை சமாளிக்க முடியாததாலும் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அதற்கு பதிலாக ஸ்கைப் பயனாளர்கள் Microsoft Teams-ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறித்தியுள்ளது. Teams மூலம், பயனர்கள் Skype-ல் பயன்படுத்தும் ஒரே மாதிரியான பல முக்கிய அம்சங்களான, ஒன்றுக்கு ஒன்று அழைப்புகள் மற்றும் குழு அழைப்புகள், செய்தி அனுப்புதல் மற்றும் கோப்பு பகிர்வு போன்றவற்றை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.
ஸ்கைப் கடந்த 2003-ல் தொடங்கப்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011-ம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலர்களுக்கு மொத்த ரொக்க ஒப்பந்தத்தில் வாங்கியது. கடந்த சில ஆண்டுகளில், மைக்ரோசாப்ட் ஸ்கைப்பின் பல அம்சங்களை நிறுத்தியுள்ளது. இப்போது அதை முழுவதுமாக மூட முடிவு செய்துவிட்டார்கள். பல ஆண்டுகளாக ஸ்கைப் நிறுத்தப்படுவது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
காரணம் என்ன?
அதாவது, மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டில் "டீம்ஸ்" என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியின் அம்சம் என்னவென்றால், வீடியோ அழைப்பு மற்றும் செய்தி அனுப்புவதற்கும் யன்படுத்தப்படுகின்றன, மேலும் இது பெரிய நிறுவனங்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இருப்பினும். மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைவரும் ஸ்கைப்பிற்கு பதிலாக டீம்ஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது. அதனால்தான் மைக்ரோசாப்ட் ஸ்கைப்பை மூட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால், ஸ்கைப்பின் 22 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வரும்.
ஸ்கைப்பின் பயணம்
உயர் தொலைத்தொடர்பு கட்டணங்களுக்கு டப் கொடுக்கும் வகையில், மலிவு விலையில் ஆன்லைன் ஆடியோ அழைப்பு தளமாக நான்கு டெவலப்பர்கள் குழுவால் 2003 ஆம் ஆண்டு 'ஸ்கைப்' தொடங்கப்பட்டது. பின்னர் 2006 ஆம் ஆண்டில், இந்த தளம் வீடியோ அழைப்புக்கான அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இதனால் இந்த செயலி உடனே, பிரபலமடையத் தொடங்கியது, 2010-ம் ஆண்டில் 300 மில்லியன் பயனர்களை உபயோகபடுத்த தொடங்கினர். பின்னர், ஸ்கைப் என்பது வீடியோ அழைப்புகளுக்கு இணையானதாக மாறிவிட்டது.
இருப்பினும், நாளைடைவில் மோசமான வீடியோ தரம் மற்றும் மென்பொருள் உறுதியற்ற தன்மை உள்ளிட்ட சிக்கல்களுடன் ஸ்கைப் சற்று காலாவதியானது போல் உணரத் தொடங்கியது. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், 2017 இல் Microsoft Teams அறிமுகப்படுத்தியது, ஆனால் அதன் கவனம் வழக்கமான பயனர்களை விட நிறுவன பயன்பாட்டில் அதிகமாக இருந்தது.
இருந்தாலும், 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்கைப் சுமார் 30 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்தது. ஆனால் மைக்ரோசாப்ட் முன்னேற முடிவு செய்துள்ளதால், சில மாதங்களில் ஸ்கைப் சேவையை படிப்படியாக நிறுத்தக்கூடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.