- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மக்களே... உங்க ஏடிஎம்மை தவிர மற்றொரு ATM-ல் பணம் எடுக்கிறீர்களா? வருகிறது புது ரூல்ஸ்..
மே 1 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை ரூ.2 முதல் ரூ.23 வரை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

Author: Gowtham
Published: March 28, 2025
ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் தேசிய பணப்பரிவர்த்தனை மையம் (NPCI) ஆகியவை ஏடிஎம்களில் பணம் எடுக்கும் இடைமாற்று கட்டணத்தில் மாற்றம் செய்ய அனுமதி அளித்துள்ளன.
அதாவது, ஏடிஎம்களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, மே 1 முதல் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17ல் இருந்து, ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
அதே நேரம், ரொக்கம் அல்லாத ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளான மினிமம் பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு ரூ.6ல் இருந்து ரூ.7ஆக கட்டணம் உயருகிறது. ஏடிஎம் இடைமாற்று கட்டணம் என்பது ஒரு வங்கியின் ஏடிஎம்மை மற்றொரு வங்கியின் வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது, அந்த ஏடிஎம்மை நிர்வகிக்கும் வங்கிக்கு கட்டணமாக செலுத்தப்படும் தொகையாகும்.
தற்போது, இந்தியாவில் உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் 5 முறை தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. அதாவது, மெட்ரோ நகரங்களில் (பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புது தில்லி) மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத பகுதிகளில் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம்.
இந்த இலவச வரம்பைத் தாண்டிய பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இடைமாற்று கட்டணம் ரூ15லிருந்து ரூ.17 ஆகவும், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.21 ஆகவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, ஏடிஎம் உள்கட்டமைப்பை பராமரிக்கவும், வங்கிகளுக்கு ஆதரவளிக்கவும் எடுக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவிலான பொருளாதார சுமையை ஏற்படுத்தலாம். எனவே, இலவச பரிவர்த்தனை வரம்பை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதும், முடிந்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறுவதும் செலவைக் குறைக்க உதவும்.