தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / RRB

“RRB ஊழியர்கள் மீதான அதீத வரிச்சுமை..,” NFRRBO கோரிக்கை கடிதம்!

RRB வங்கி ஊழியர்களிடம் இருந்து முன்கூட்டியே வரி பிடித்தம் செய்யும் முறையை விலக்கி அந்த வரிச் சுமையை நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என RRB நிர்வாக அதிகாரிகளுக்கு NFRRBO வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 30, 2025

வருமானவரி விதிகளின்படி, குறிப்பிட்ட அளவு நிலையான ஆண்டு வருமானம் பெரும் நபர்களின் வங்கி கணக்கில் ஆண்டு இறுதியில் செலுத்தப்படும் வருமானவரியானது முன்கூட்டியே மாத வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

ஆண்டு இறுதியில் வரிபிடித்தம் செய்யப்பட்ட மாத சம்பள ஊழியர்கள் தங்கள் செலவு கணக்குகளை சமர்ப்பித்து செலுத்தப்பட்ட வருமான வரியில் சலுகை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறையில் பல வணிக வங்கிகள், ஆந்திர பிரதேச கிராம வங்கி போன்ற RRB வங்கிகள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வரித்தொகையை அந்தந்த வங்கி நிர்வாகமே செலுத்துகிறது. இதனால் ஊழியர்களுக்கு பெரிய வரிச்சுமை குறைகிறது.

இதனை குறிப்பிட்டு RRB அதிகாரிகள் தேசிய கூட்டமைப்பான NFRRBO சங்கமானது, அனைத்து RRB நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஜனவரி 28ஆம் தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கிழே காணலாம்…   

கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை..,   

அந்த கடிதத்தில், சில RRB நிர்வாகங்கள், தொழிற்சங்கங்களுடன் எந்தவித முன்கூட்டிய ஆலோசனையும் இல்லாமல், ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் இருந்து தன்னிச்சையாக வரிகளைக் கழித்து கொள்கிறது என NFRRBO சுட்டிக்காட்டியது. 

சில RRB நிர்வாகங்கள், ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் இருந்து இவ்வாறு ஒருதலைப்பட்சமாக வரியைக் கழித்து வருகிறது. இது RRB அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பெரும் வரிச் சுமையையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், பல வணிக வங்கிகள் மற்றும் ஆந்திரப் பிரதேச கிராம விகாஸ் வங்கி (APGVB) போன்ற சில RRBக்கள், ஊழியர்கள் எந்தவொரு வரிச் சுமையையும் எதிர்கொள்ள வேண்டாம் என்ற நோக்கத்தில் தங்கள் ஊழியர்களின் சார்பாக இந்த வரியைச் செலுத்துகின்றன. ஏப்ரல் 1, 2015-ல் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள்காட்டி, இது ஊழியர்களின் சார்பாக முன்கூட்டிய வரியை நிர்வாகம் செலுத்த வேண்டும் எனும் நடைமுறையை ஆதரிக்கிறது என குறிப்பிட்டது. 

அனைத்து RRBகளும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து நேரடியாக வரியை முன்கூட்டியே பிடித்தம் செய்யும் முறையை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வரிச் செலவை அந்தந்த வங்கி நிர்வாகங்களே ஏற்க வேண்டும் என்று NFRRBO கேட்டுக்கொண்டது. இந்த நடவடிக்கை மூலம் சலுகைக் கடன்கள் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு சீரான தன்மையை கிடைக்க உறுதிப்படுத்துகிறது என வலியுறுத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவசர நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் NFRRBO குறிப்பிட்டுள்ளது.

Tags:AIRRBEARRBNFRRBO