- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
RRB ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! இனி தேசிய ஓய்வூதிய பங்களிப்பு 14 சதவீதம் உயர்வு!
கிராமப்புற வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) வங்கி நிர்வாகத்தின் பங்களிப்பு 10% இலிருந்து 14% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Author: M Manikandan
Published: March 4, 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை வங்கி (PSBs) ஊழியர்களுக்கும் திருத்தப்பட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் பணியார்களின் பங்களிப்பு 14%ஆக உள்ளது. அதே போல கிராம வங்கி ஊழியர்களுக்கும் பங்களிப்பை உயர்த்த வேண்டும் என கிராம வங்கி ஊழியர்கள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.
கிட்டத்தட்ட நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைக்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி,கிராம வங்கிகளில் (RRBs) பணியாற்றும் பணியாளர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (NPS) பணியாளர் பங்களிப்பானது 10% இலிருந்து 14% ஆக உயர்த்தி வழங்க பரிந்துரைத்து அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்புவரை கிராம வங்கிகள் (RRBs) பணியாளர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியம், DA அலவன்ஸ், மற்றும் சம்பளத்தில் 10% NPS பங்களிப்பாக அந்தந்த கிராம நிர்வாகமானது ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. இப்போது, அந்த பங்களிப்பானது 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களுக்கு ஓய்வூதிய காலத்தில் கூடுதல் நிதி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 1, 2025 அன்று F.No.8/1/2022-RRB எனும் கடிதம் வழியாக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 11, 2020 முதல் இந்த புதிய 14% NPS பங்களிப்பு விதி அமலுக்கு வரும் வகையில், அனைத்து RRBகள் மற்றும் அவற்றின் ஸ்பான்சர் வங்கிகளிலும் இதனை செயல்படுத்தப்படுவதை NABARD உறுதி செய்ய வேண்டும் என அந்த உத்தரவு அறிவுறுத்துகிறது.

அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டவை..,
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) நிர்வாகத்தின் பங்களிப்பானது ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10% முதல் 14% வரை உயர்த்துவது குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
11.11.2020 முதல் அனைத்து பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் (RRBs) தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) பங்களிப்பு 10%இலிருந்து 14% வரையில் வங்கி நிர்வாகத்தின் பங்களிப்பை மறுபரிசீலனை செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும்,
மத்திய அரசின் ஒப்புதலை அனைத்து RRB களுக்கும் அவற்றின் ஸ்பான்சர் வங்கிகளுக்கும் இந்தத் துறைக்குத் தெரிவிக்கும் வகையில், அந்தத் திருத்தத்தை நடைமுறைக்கு மேற்குறிப்பிட்ட தேதியிலிருந்து செயல்படுத்த NABARD-ஐ கேட்டுக் கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்மைகள் :
ஓய்வூதிய சேமிப்பு உயர்வு – பணியாளர்கள் ஓய்வூதிய காலத்திற்காக அதிக தொகையை சேமிக்கலாம்.
நிதி பாதுகாப்பு – ஓய்வில் சென்ற பிறகு, அவர்களுக்கு கூடுதல் நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
வரிவிலக்கு சலுகை – வருமான வரி சட்டத்தின் 80CCD(2) பிரிவின் கீழ், நிறுவன பங்களிப்பு 14% வரை வரிவிலக்கு பெற முடியும்.