தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / இந்தியா

அரசு இணையதளங்களில் RRB-களை சேர்க்க வேண்டும்! நிதியமைச்சருக்கு AIRRBEA கடிதம்!

மத்திய அரசு இணையதளங்கள் வாயிலாக RRB-களை இணைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு AIRRBEA கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

News Image

Author: M Manikandan

Published: March 10, 2025

கிராமப்புற மக்கள் மத்தியில் வங்கி சேவையை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட கிராமப்புற பிராந்திய வங்கிகளான RRBக்கள், அதன் கொள்கை கோட்பாடுகளால் மற்ற வணிக நோக்க வங்கிகள் போல பொருளாதார ரீதியில் பெரிய அளவில் சோபிக்க முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என AIRRBEA மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

RRB-க்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கிலும், அதன் மூலம் RRBக்கள் சந்திக்கும் வணிக இழப்புகளை சரிசெய்யும் நோக்கிலும் மத்திய நிதியமைச்சருக்கு சில கோரிக்கைகளை முன்னிறுத்தி AIRRBEA கடிதம் எழுதியுள்ளது. 

AIRRBEA கடிதம் : 

அந்த கடிதத்தில், RRB-யின் கொள்கை கட்டுப்பாடுகள் காரணமாக வணிக இழப்புகளை கிராம வங்கிகள் சந்திக்கின்றன என்பதை மேற்கோள் காட்டி, முக்கியமான மத்திய அரசின் இணையதளங்களில் RRB-களை பிரதிநித்துவப்படுத்துமாறு (இணைக்குமாறு) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  அகில இந்திய கிராமப்புற வங்கி ஊழியர் சங்கம் (AIRRBEA) வலியுறுத்தியுள்ளது. RRB-கள் வணிக வங்கிகளுடன் நியாயமான முறையில் போட்டியிடுவதை உறுதிசெய்ய சில அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. .

அனைத்து இந்திய பிராந்திய கிராமப்புற வங்கி ஊழியர் சங்கம் (AIRRBEA) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முக்கிய தேசிய இணையதளங்கள் மூலம் RRB-களை பிரபலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 8, 2025 அன்று தேதியிட்ட AIRRBEA கடிதத்தில், நிதி விதிகள், 2014 மற்றும் நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (NeSL) கட்டமைப்பின் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக RRBகளால் பெரிய டெபாசிட்களைப் பெற முடியவில்லை. மேலும், முக்கியமான வங்கிச் சேவைகளை வழங்க முடியவில்லை என்று AIRRBEA சுட்டிக்காட்டியுள்ளது. RRBயின் வணிக நலன்களைப் பாதுகாக்கவும், வங்கித் துறையில் மற்ற வங்கிகளுடன் நியாயமான போட்டியை உறுதிப்படுத்தவும் சில திருத்த நடவடிக்கைகள் அவசியம் என்று AIRRBEA வலியுறுத்துகிறது.

குறிப்பிட்ட விதிமுறைகள் காரணமாக RRB-கள் அதன் வருவாயை இழக்கின்றன

RRBகளுக்கு முக்கிய நிதித் தளங்களுக்கான அணுகல் மறுக்கப்படுகிறது. இது RRB-யின் வருவாய் வாய்ப்புகளை இழக்க வழிவகுக்கிறது என்ற கவலையை AIRRBEA வெளிப்படுத்தியது.

அந்தக் கடிதத்தில், “PPF கணக்குகள், EPFO ஓய்வூதியக் கணக்குகள், நிதி கணக்குகள் போன்ற சேவைகளை நீட்டிப்பதற்காக பல்வேறு அரசு இணையதளங்களில் சேர்க்கப்படுவதிலிருந்து RRBக்கள் விலக்கப்பட்டு வருகின்றன. நிதி விதிகள் 2014-ன் கீழ், நிதி நிறுவனங்கள் கூட்டுறவு வங்கி மற்றும் RRBகளைத் தவிர வேறு எந்த அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கியிலும் டெர்ம் டெபாசிட்களில் முதலீடு செய்யலாம். தமிழ்நாடு கிராம வங்கி இந்த தடையால் மாநிலத்தில் இயங்கி வரும் ஏராளமான நிதி நிறுவனங்களின் டெபாசிட்களை எடுக்க முடியவில்லை. எனவே, நிதி விதிகள், 2014-ன் விதி 14, RRB களை பட்டியலில் சேர்க்க, சம நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஏற்றவாறு விதிகள் திருத்தப்பட வேண்டும்.

கிராமப்புற வங்கி மற்றும் நிதிச் சேர்க்கைக்கு RRBக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினாலும், அவர்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடுகள் RRB-கள் தங்கள் முழு வணிகத் திறனை அடைவதைத் தடுக்கின்றன என AIRRBEA குறிப்பிட்டது.

AIRRBEA-ன் முக்கிய கோரிக்கைகள் : 

RRB-கள் மற்ற வங்கிகளுடன் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய, நிதியமைச்சர் பின்வருவனவற்றில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு AIRRBEA வலியுறுத்தியுள்ளது. 

நிதி நிறுவனங்களை RRB கால வைப்புகளில் முதலீடு செய்ய அனுமதிக்க, 2014 நிதி விதிகளின் விதி 14ஐ திருத்த வேண்டும்.

NeSL-ன் கீழ் RRBகளுக்கு இணைய வங்கி உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.

RRB-களின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், இணைய வங்கி, மொபைல் வங்கி அணுகலை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து RRB கிளைகளுக்கும் தடையில்லா IFSC குறியீடுகளை உறுதிசெய்ய வேண்டும். இதன் மூலம் நிதி பரிவர்த்தனைகளை மேம்படுத்துதல் செய்ய வேண்டும்.

தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி, PPF மற்றும் EPF-இணைக்கப்பட்ட கணக்குகளை வழங்க RRBகளை அனுமதிக்க வேண்டும்.

கொள்கை இடைவெளிகளால் RRBகள் தொடர்ந்து பின்னடைவுகளை சந்திப்பதால் இந்த விவகாரங்களில் உடனடியாக அரசாங்கம் தலையிட வேண்டும் என AIRRBEA அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் RRB வணிகம் மற்றும் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என AIRRBEA மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. 

Tags:AIRRBEARRBFinance MinistryFinance MinisterNirmala Sitharaman