- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
SBI லைஃப் இன்சூரன்ஸின் ‘டார்கெட்’ அழுத்தம்! மன வேதனையில் ஊழியர்கள்!
SBI வங்கியின் லைஃப் இன்சூரன்ஸ் சேவைக்கான (SBI Life Cross-selling Targets) இலக்குகளை அடைவதற்கு நிர்வாகத்தின் தரப்பில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றன

Author: Kanal Tamil Desk
Published: January 22, 2025
SBI (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) பணியாளர்களில், SBI Life Insurance காப்பீட்டு பிரிவில் வேலை செய்பவர்கள் நிர்வாகம் அளிக்கும் இலக்குகளை அடைய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் இருந்து அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இத்தகைய நிலைமை பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
SBI Life Cross-selling Targets - நோக்கம் :
கிராஸ்-செல்லிங் என்பது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு தேவையான வங்கி சேவைகளுடன் (புதிய கணக்கு, நிரந்தர வைப்பு தொகை, கடன்கள்) கூடுதலாக காப்பீட்டு மற்றும் முதலீட்டு தயாரிப்புகளை விற்பனை செய்வதை குறிக்கிறது. இது வங்கிகளுக்கு கூடுதல் வருமானத்தை உருவாக்கும் என்பதால் வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் நிர்வாகம் அளித்துள்ள இலக்குகளை முடிக்கவேண்டும் என உத்தரவிடுகிறது என கூறப்படுகிறது.
பணியாளர்களின் பிரச்சினைகள் :
வங்கிகள் இலக்குகள் (Targets) குறித்து அழுத்தம் கொடுப்பதன் காரணமாக வேலை செய்யும் ஊழியர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
பணிச்சுமை அதிகரிப்பு : வங்கி சேவைகளுடன் கூடுதலாக காப்பீட்டு தயாரிப்புகளை விற்பனை செய்யும் பொறுப்பு, ஏற்கனவே உள்ள பணிச்சுமையுடன் மேலும் சுமையை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம் : வங்கி நிர்வாகம் நமக்கு ஒரு உத்தரவு கொடுத்துவிட்டதே விற்பனை இலக்குகளை அடைய வேண்டும் என யோசித்து கொண்டு வேலை செய்வதால் ஊழியர்களுக்கு, மன அழுத்தமும் ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்ப்படுகிறது.
வாடிக்கையாளர் சேவைகள் பாதிப்பு : கிராஸ்-செல்லிங் முயற்சிகளுக்கான கவனம் என்பது, வாடிக்கையாளர்களின் முதன்மை வங்கி சேவைகளின் தரத்தைக் குறைக்கக் கூடும் எனவும் ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சஜி வர்கீஸ் வேதனை :
பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (SBIEF) செயற்குழு உறுப்பினர் மற்றும் துணைத் தலைவர் சஜி வர்கீஸ், எஸ்பிஐ-ன் வணிக நோக்கங்களினால் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தனது கவலைகளை தெரிவித்தார்.
இது குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது "எஸ்பிஐ-ன் கொள்கைகள் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை எடுப்பதற்காக ஊழியர்கள் என்ன செய்வார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் தங்களுடைய இலக்கை மட்டும் நிலைநிறுத்தியுள்ளன. எஸ்பிஐ லைஃப் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இலக்குகள் ஊழியர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இரவு நேர வேலை, விடுமுறைகள் குறைப்பு, பணிச்சுமை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஊழியர்களை அதிகமாக பாதித்துள்ளன” என வருத்தத்துடன் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் ஊழியர்கள் வேதனை
SBI இன்சூரன்ஸ் தொடர்பான இலக்குகள், அந்த இலக்குகளால் ஏற்படும் விளைவுகள், ஊழியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் ஆகியவை சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிஐ இன்சூரன்ஸுக்கு கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம், முக்கியமான குறுக்கு விற்பனை இலக்குகளை அடைய வங்கியாளர்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என சமூக வலைத்தளங்களில் வங்கி ஊழியர்கள் பலரும் தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலைமை ஊழியர்களின் மன உறுதியையும், வேலை திறனையும் வெகுவாக பாதிக்கின்றது என்று ஊழியர்கள் கூறுகின்றனர். எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த அழுத்தம் குறித்து ஊழியர்களால் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் ஊழியர்கள் தங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவரித்துள்ளனர்.
RRBs ஸ்பான்சரின் அழுத்தம் :
SBI ஊழியர்கள் மட்டுமின்றி SBI ஸ்பான்சர் செய்யும் கிராமிய வங்கிகளும் (RRBs) மேற்கண்ட குறுக்கு விற்பனை அழுத்தத்தை (Cross-selling Targets) எதிர்கொள்கின்றன. SBI இன்சூரன்ஸ் பங்குகள் RRB-களில் அதிகரித்து வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. RRBகளை குறுக்கு விற்பனையுடன் இணைத்தல், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகள் வழங்குவதை தடுக்கும் என்று வங்கி நிர்வாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
SBI ஸ்பான்சர் செய்த 13 RRBகளில் SBI இன்சூரன்ஸ் விற்பனை இலக்குகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10, 2024 வரை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் மூலம் ரூ.49.92 கோடியை விற்பனை இலக்கு வைக்கப்பட்டது. இதில், CGM டிராபி மற்றும் MD டிராபி ஆகிய பிரிவுகள் உள்ளன. இவற்றின் இலக்குகள் முறையே ரூ.23.75 கோடி மற்றும் ரூ.26.17 கோடி ஆகும்.
என்ன வெகுமதி?
இந்த மனஅழுத்தங்களை தாண்டி குறிப்பிட்ட இலக்குகளை முடித்துவிட்டால் அவர்களுக்கு என்ன வெகுமதி கிடைக்கும் என்பதை பார்போம்.
SBI இன்சூரன்ஸ் இலக்குகளை அடைவதன் மூலம் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஆடம்பரமான வெகுமதிகள், முந்தைய அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வெகுமதிகள், தவறான விற்பனையை ஊக்குவிக்கின்றன மற்றும் வங்கி சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக விட, வங்கி அல்லாத செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வங்கி நிர்வாகத்தின் இவ்வாறான முடிவுகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மீது ஏற்படும் அழுத்தங்களுடன் இணைந்து லாபம் ஈட்டுவதை முதன்மையானதாக குறிப்பிடுகின்றன. எஸ்பிஐ லைஃப் குறுக்கு விற்பனை இலக்குகளை அடைவதற்கான அழுத்தம், வங்கியின் ஊழியர்களுக்கும் அதன் ஸ்பான்சர் செய்யப்பட்ட RRB நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இடையே அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், ஊழியர்களின் நல்வாழ்வையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில், ஊழியர்களின் கவலைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே SBI வங்கி ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
SBI நிர்வாகம் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு குறுக்கு-விற்பனை இலக்கங்களைத் திருத்தம் செய்யவேண்டும். பயிற்சி மற்றும் அதற்கான ஆதரவு அமைப்புகளை ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்க வேண்டும். இதன் மூலம் பணிச்சுமை குறைக்கப்படலாம்.வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து வங்கி சேவைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்" எனவும் தங்களுடைய வேண்டுகோளை நிபுணர்களை முன் வைத்து வருகிறார்கள்.