தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / RRB

பெல்லாரியில் களைகட்டிய 15வது AIRRBEA மாநாடு.., முக்கிய நிகழ்வுகள்..,

அகில இந்திய பிராந்திய கிராமப்புற வங்கி ஊழியர் சங்கதின் 15வது மாநாடு கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 10, 2025

இந்தியாவில் கிராமப்புற வங்கி துறையில் உள்ள மிகப்பெரிய கூட்டமைப்பின் கடந்தகால வரலாற்றை பெருமை படுத்தும் வகையில்,  அகில இந்திய கிராமப்புற வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIRRBEA) 15வது மாநாடு  (பிப்ரவரி 8 மற்றும் 9-ம் ) தேதிகளில் கர்நாடகாவில் உள்ள பெல்லாரி நகரில் நடைபெறவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, அறிவித்ததன் படி மாநாடு கோலாகலமாக நடைபெற்றும் வருகிறது. மாநாட்டில் நடந்த முக்கிய விஷயங்களை பற்றியும், எதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்…

மாநாடு இடம் முக்கிய விவரங்கள் 

கிராமப்புற வங்கி அமைப்புகளுக்கான மாநாடு பெல்லாரியில் நடத்த திட்டமிட்டதற்கு காரணம், இது இந்தியாவின் கிராமப்புற வங்கித்துறையின் முக்கிய மையமாக விளங்குவதாகும். இங்கு தான் தென்னிந்தியாவின் முதன்மை கிராமப்புற வங்கியான, துங்காபத்ரா கிராமப்புற வங்கி, 1976-ல் நிறுவப்பட்டது. இந்த வங்கி பல இளநிலை வங்கி இணைப்புகளை கடந்துவந்து தற்போது கர்நாடக கிராம வங்கி என்ற பெயரில் செயல்படுகிறது.

எனவே, இதன் காரணமாக அந்த பகுதியில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பில் நடக்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வு என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இதில் சிறப்பு அம்சம், பெண்களை முன்னிலைப்படுத்தும் மாநாடாக நடைபெறுகிறது.  இதில் வீ.கோபால் கௌடா (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி), டி.சூரேந்திரன் (கனரா வங்கி HR பிரிவின் தலைமை மேலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.  பெண்கள் மாநாட்டில் டாக்டர். ஷோபா ராணி வி.ஜே. (பெல்லாரி மாவட்ட காவல் ஆய்வாளர்) பொது விருந்தினராகவும்,  AIRRBEA-ன் பெண்கள் துணை குழுவின் தலைவரான லால்ந்கைஹாவ்மி பச்சுவா (Lalngaihawmi Pachuau) இந்த மாநாட்டில்  கலந்து கொண்டார்கள். 

கொடியேற்றம் : 

AIRRBEAவின் 15வது மூன்று ஆண்டு மாநாடு AIRRBEA தலைவர் சி. ராஜீவன் கொடியேற்றத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாநாட்டில் முக்கியான அதிகாரிகளும் பேசினார்கள். 

மரியம் தவாலே : 

அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தில் பொதுச் செயலாளரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய குழு உறுப்பினராகப் பணியாற்றி வரும் மரியம் தவாலே மாநாட்டில் பங்கேற்று பேசினார். மாநாட்டில் பேசிய அவர் “மார்ச் மாதம் நடைபெறும் வங்கியாளர்களின் அகில இந்திய வேலைநிறுத்தத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைப்பு (AIDWA) நிச்சயம் ஆதரிக்கும். அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஒற்றுமையுடன் எங்கள் கொடிகளை ஏந்தி வருவோம்” என போராட்டதிற்கு தன்னுடைய ஆதரவு இருக்கும் என மரியம் தவாலே தெரிவித்தார். 

கோபால் கவுடா :  

 மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் கவுடா உரையாற்றினார்.அதில் பேசிய அவர் “ உள்ளூரில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கிராமப்புற மக்களின் நிதி சேவைகள் அணுகலை விரிவுபடுத்தவும், RRBs (Regional Rural Banks) மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  கிராமப்புற வங்கிகள், 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நிறுவப்பட்டதிலிருந்து, கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளில் சேவை செய்து வருகின்றன. இவை, இன்று கிராமப்புற அபிவிருத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிக வலுவான வங்கி அமைப்புகளாக வளர்ந்துள்ளன.” எனவும் தெரிவித்துள்ளார்.

AIRRBEA-ன் வளர்ச்சி மற்றும் முக்கிய நிகழ்வுகள் : 

மேலும், AIRRBEA யின் தொடக்க மாநாடு, 1980ஆம் ஆண்டு கன்னூர், கேரளாவில் நடைபெற்றது. அப்போது ஆஷிஸ் சென் என்பவர் தலைவராகவும், திலிப் குமார் முகர்ஜி பொதுச் செயலாளராகவும், அஜித் குமார் பொருளாளராகவும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாநாட்டில் கிராமப்புற வங்கிகளுக்கான ஊழியர்களின் நலன்களை மேம்படுத்த தீர்மானங்கள் உருவாக்கப்பட்டது.

மரியம் தவாலே குறிப்பிட்டு பேசிய போராட்டமானது, வாரத்தில் 5 நாட்கள் வேலை, வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஒருங்கிணைத்து உள்ளதாக UFBO அறிவித்துள்ளது. அதற்கு ஆதரவு தெரிவிப்பதாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:AIRRBEA 15th National ConferenceAIRRBEARRB