- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் ஸ்ட்ரைக்! வாரத்தில் 5 நாள் வேலை., ஆட்கள் பற்றாக்குறை., வலுக்கும் கோரிக்கைகள்!
வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஒருங்கிணைத்து உள்ளதாக UFBO அறிவித்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 10, 2025
இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து வரும் மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவவதாக அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தம், வாரத்தில் 5 நாள் வேலை வாரம், ஊதிய உயர்வு, ஓய்வூதிய திருத்தம், மற்றும் வங்கிகளின் தனியார்மயமாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்த போரட்டம் நடைபெறவுள்ளது.
வேலைநிறுத்த தேதி மாற்றம்
முன்னதாக, All India Bank Officers’ Confederation (AIBOC) பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், UFBU தலைமையில் பெரும்பாலான வங்கி சங்கங்களும் ஒருமித்தமாக மார்ச் 24, 25 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இதனை UFBO அறிவித்துள்ளது.
பொது வங்கிகள் மற்றும் சேவைகள் பாதிக்கும் நிலை:
வேலைநிறுத்தம் காரணமாக, அரசுப் பொதுத் துறை வங்கிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணப்பரிவர்த்தனைகள், காசோலை கண்காணிப்பு, ரொக்கப் பணிகள் போன்றவை தாமதமாகலாம். ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்கினாலும், சில சேவைகளில் தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வேலைநிறுத்தம் நடத்தும் சங்கங்கள்:
இந்த 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு United Forum of Bank Unions (UFBU) தலைமையில் AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முக்கிய கோரிக்கைகள்:
- அனைத்து பணிஇடங்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு மற்றும் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துத வேண்டும்.
- வாரத்தில் ஐந்து நாள் வங்கி முறையை செயல்படுத்த வேண்டும்.
- ஊக்கத்தொகைகள் (PLI) தொடர்பான நிதிச் சேவைகள் துறையின் (DFS) சமீபத்திய உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். இது வேலை பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் ஊழியர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
- பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும்.
- வங்கி ஊழியர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கும் வகையில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.
- ஊழியர் நலத்திட்டங்களை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்
- ஐடிபிஐ வங்கியில் குறைந்தபட்சம் 51% பங்குகளை அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன.
போராட்ட திட்டங்கள் :
- பிப்ரவரி 14 - அனைத்து மாவட்டத்திலும் உள்ள வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
- பிப்ரவரி 16 முதல் - போராட்டம் குறித்த விழிப்புணர்வு போஸ்டர்கள் வாயிலாக அனைத்து பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.
- பிப்ரவரி 21 - அனைத்து மாவட்டத்திலும் உள்ள வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
- பிப்ரவரி 23 - சமூக வலைகளங்கள் மூலம் போராட்டம் குறித்த விழிப்புணர்வு.
- பிப்ரவரி 28 - கருப்பு பட்டை அணிந்து வேலைக்கு வருதல்.
- மார்ச் 3 - டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம். மற்றும் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சருக்கு தெரியப்படுத்துதல்.
- மார்ச் 5 - IBA, DFS, CLC ஆகிய அமைப்புகளுக்கு போராட்டம் குறித்த நோட்டீஸ் வழங்கப்படும்.
- மார்ச் 7 - அனைத்து மாவட்டத்திலும் உள்ள வங்கி தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
- மார்ச் 11 - அணைத்து இடங்களிலும் போராட்டம்.
- மார்ச் 17 - தலைநகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு.
- மார்ச் 21 - பேரணி.
- மார்ச் 22 - சமூக வலைதளத்தில் போராட்டம் குறித்த விழிப்புணர்வு.
- மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் வேலைநிறுத்த போரட்டம்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
இந்த வேலைநிறுத்தத்தை தவிர்க்க, இந்திய வங்கி சங்கம் (IBA) மற்றும் சங்கங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை வெற்றியடையாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவது உறுதி என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் முக்கிய வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்து விடுமாறு வங்கி சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.