- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஏப்ரல் 1 முதல் UPI வேலை செய்யாது.! இந்த மொபைல் எண்களை செக் பண்ணிக்கோங்க.!
ஏப்ரல் 1-ம் தேதி முதல், Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI பயன்பாடுகளைப் பாதிக்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகிறது.

Author: Gowtham
Published: March 21, 2025
இப்போ உள்ள காலத்தில் வங்கிக் கணக்கு, கூகிள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தாத ஆட்களே இல்லை. அப்போ இது உங்களுக்கான இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது.
அதாவது, ஏப்ரல் 1ம் தேதி முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அதன்படி, சில மொபைல் எண்களில் UPI சேவைகள் நிறுத்தப்படும். இதன் முக்கிய நோக்கம், மோசடிகளைத் தடுப்பது மற்றும் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என NPCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செயலற்ற எண்களுடன் கூகிள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற வற்றில் இணைக்கப்பட்ட UPI ஐடிகளை NPCI நீக்க உள்ளது. அதாவது உங்கள் வங்கிக் கணக்கு செயலற்ற மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும். அந்த வகையில், UPI பரிவர்த்தனைகளை எளிதாக்க, செயலில் உள்ள மொபைல் எண் அவசியம், அது உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
எந்த மொபைல் எண்களுக்கு UPI ரத்தாகும்?
செயலற்ற மொபைல் எண்கள் (Inactive Numbers): ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (பொதுவாக 90 நாட்கள் அல்லது அதற்கு மேல்) பயன்படுத்தப்படாத மொபைல் எண்கள்.
சிம் கார்டு துண்டிக்கப்பட்டு, பின்னர் வேறு நபருக்கு மறுவிற்பனை செய்யப்பட்ட எண்கள்.
வங்கி கணக்கு அல்லது UPI ஆப்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படாத எண்கள்
.
NPCI நடவடிக்கை என்ன?
வங்கிகள் மற்றும் UPI , Google Pay, PhonePe, Paytm போன்றவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் செயலற்ற மொபைல் எண்களின் பட்டியலை NPCI-க்கு வாராந்திர அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, இந்த எண்கள் வங்கி கணக்குகள் மற்றும் UPI ஆப்களில் இருந்து தானாகவே நீக்கப்படும். ஏப்ரல் 1 முதல், இந்த எண்களில் UPI பரிவர்த்தனைகள் செய்ய முடியாது.
யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
ஒரே மொபைல் எண்ணை பல வங்கி கணக்குகளில் பதிவு செய்து, அதில் ஒரு வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தாமல் விட்டவர்கள்.
தங்கள் பழைய எண்ணை வங்கியில் புதுப்பிக்காமல், புதிய எண்ணை பயன்படுத்துபவர்கள்.
சிம் கார்டு தொலைந்து போன அல்லது ரத்து செய்யப்பட்டு, அதை வங்கியில் தெரிவிக்காதவர்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வங்கி கணக்கு மற்றும் UPI ஆப்களில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
செயல்பாடில்லாத அல்லது பழைய எண்ணை பயன்படுத்தினால், உடனடியாக உங்கள் வங்கியில் சென்று புதிய எண்ணை பதிவு செய்யுங்கள்.
மேலும், Google Pay, PhonePe போன்ற ஆப்களில் உள்ள மொபைல் எண்ணை சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்றவும்.