- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Vivo T4x 5G : பட்ஜெட் பயனர்களுக்ககாவே புதிய மாடலை களமிறக்கும் விவோ! சிறப்பம்சங்கள் இதோ…
பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட Vivo T4x 5G மொபைல் போன் இந்த மாதம் அறிமுகமாகவுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: March 1, 2025
விவோ நிறுவனம் பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்வதில் சிறந்த நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், எந்த அளவுக்கு பெரிய விலை போன்களை கொண்டு வருகிறதோ அதே போலவே சிறிய பட்ஜெட் விலை போன்களையும் கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் Vivo T3x5G ஸ்மார்ட்போனை கொண்டு வந்தது.
அதனைத்தொடர்ந்து இப்போது அதனுடைய அடுத்த மாடலான Vivo T4x 5G ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. எந்த தேதியில் இந்த போன் அறிமுகமாகவுள்ளது? விலை எவ்வளவு சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது பற்றி விவரமாக காணலாம்…
செயல்திறன் :
Vivo T4x 5G ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 7300 சிப்செட்டை கொண்டுள்ளது, இது AnTuTu பெஞ்ச்மார்க் சோதனையில் 728,000 க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்றுள்ளது.
கேமரா : இந்த போனானது 50MP முதன்மை கேமராவுடன் இரட்டை கேமரா அமைப்பையும், 2MP இரண்டாம் நிலை சென்சாரையும் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி, இது AI Eraser, AI Photo Enhance, மற்றும் AI Document Mode போன்ற நவீன புகைப்பட செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.
பேட்டரி வசதி : Vivo T4x 5G போன் 6,500mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. எனவே, இந்த அசத்தல் வசதி இருப்பதால் நீண்ட நேரம் நம்மால் போன் உபயோகம் செய்துகொள்ள முடியும். முந்தைய மாடலான Vivo T3x இன் 6,000mAh பேட்டரியுடன் ஒப்பிடுகையில் அதை விட இது அதிகம்.
கலர்ஸ் : இந்த ஸ்மார்ட்போன் Pronto Purple மற்றும் Marine Blue (கடல் நீலம்) என இரண்டு அழகிய நிறங்களில் கிடைக்கிறது. இதில் பர்பிள் கலர் நம்மளை பார்த்தவுடன் கவர்ந்து இழுக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை விவரங்கள் :
6GB RAM + 128GB சேமிப்பு மாடல் : இந்த மாடல் ரூ.12,999 விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் முன்னோடியான Vivo T3x 5G மாடலின் ரூ.13,499 விலையை விட குறைவானது. 8GB RAM + 128GB சேமிப்பு மாடல் ரூ.14,999 விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அறிமுகம் ஆன பிறகு விலை பற்றிய விவரங்கள் தெரிய வரலாம்.
அறிமுகம் எப்போது?
இந்த போன் வரும் மார்ச் 5-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. அறிமுகம் ஆன பிறகு அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது கடைகள் மூலம் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் அதன்பிறகு ப்ளிப்கார்டு, அமேசான் போன்ற சந்தைகளில் விற்பனைக்கு வரும். குறைந்த பட்ஜெட்டில் நல்ல போன்கள் தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த போன் ஒரு சிறப்பான போன் என்று தான் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
Vivo T3x vs Vivo T4x எது பெஸ்ட்?
செயலி (Processor)
- Vivo T3x: MediaTek Dimensity 700-யில் செயல்படுகிறது.
- Vivo T4x: அதை விட மேம்படுத்தப்பட்ட MediaTek Dimensity 7300 செயலியை கொண்டுள்ளது. எனவே இது Vivo T3x போனை விட அதிக செயல்திறனை வழங்குகிறது.
பேட்டரி (Battery):
- Vivo T3x: 6,000mAh திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது.
- Vivo T4x: 6,500mAh திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே, அதிக நேரம் போன் பயன்படுத்தலாம்.
கேமரா (Camera):
- Vivo T3x: 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் துணைக் கேமரா உள்ளது.
- Vivo T4x: 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் துணைக் கேமரா உள்ளது. புகைப்பட விரும்புகளுக்கு பீல் குட்டான புகைப்படங்களை எடுத்துக்கொடுக்க உதவுகிறது.
டிஸ்பிளே (Display):
- Vivo T3x: 6.58-இன்ச் Full HD+ LCD டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது.
- Vivo T4x: 6.78-இன்ச் Full HD+ AMOLED டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது,Vivo T3x விட Vivo T4x பெரிய டிஸ்பிளே மற்றும் தெளிவு திறனை கொண்ட காரணத்தால் கேம்ஸ் விளையாடவும்..படங்கள் பார்க்கவும் சிறந்தவையாக இருக்கும்.
இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசங்களை வைத்து பார்க்கையில் விவோ நிறுவனம் Vivo T4x-யில் மேம்படுத்தப்பட்ட சில அம்சங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். விலையும் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது என்பதால் விருப்பம் இருப்பவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.