- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பர்சனல் vs பிசினஸ் லோன் : ஊதிய விவரம் இல்லாமல் லோன் கிடைக்குமா?
பிசினஸ் லோன் பெரிய தொகைகளை வழங்குவதால், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பொருத்தமானது. பர்சனல் லோன் விரைவாக கிடைக்கும், ஆனால் நீண்ட காலத்தில் செலவு அதிகமாக இருக்கலாம்.

Author: Gowtham
Published: April 17, 2025
பர்சனல் லோன் (தனிநபர் கடன்) மற்றும் பிசினஸ் லோன் (தொழில் கடன்) இரண்டும் உங்கள் தேவைகளைப் பொறுத்து சிறப்பாக இருக்கும். பர்சனல் லோன் உங்கள் தனிப்பட்ட கிரேடிட் ஸ்கோரை பாதிக்கும், ஆனால் பிசினஸ் லோன் உங்கள் தொழில் கிரேடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும். பிசினஸ் லோன் பெரிய தொகைகளை வழங்குவதால், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு பொருத்தமானது. பர்சனல் லோன் விரைவாக கிடைக்கும், ஆனால் நீண்ட காலத்தில் செலவு அதிகமாக இருக்கலாம்.
பர்சனல் லோன் (தனிநபர் கடன்)
பர்சனல் லோன் என்பது தனிமனிதர்களுக்கு வழங்கப்படும் லோனாகும், இது பொதுவாக உத்தரவாதம் இல்லாமல் (unsecured) இருக்கும். இது தனிப்பட்ட தேவைகளுக்கு (வீடு சீரமைப்பு, திருமணம்) அல்லது சிறு தொழில்களுக்கு பயன்படுத்தப்படலாம். இந்த லோனின் அங்கீகாரம் உங்கள் தனிப்பட்ட கிரேடிட் ஸ்கோர் மற்றும் செலரி ஸ்லிப் அடிப்படையாகக் கொண்டு வழங்கபடுகிறது. பொதுவாக ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை தொகை கிடைக்கும், திருப்பி செலுத்தல் காலம் 2-5 ஆண்டுகள் வரை இருக்கும். ஆனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம்.
பிசினஸ் லோன் (தொழில் கடன்)
தொழில் நடத்துபவர்களுக்கு அவர்களின் தொழில் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது, உதாரணமாக உபகரணங்கள் வாங்குவது, பங்கு முதலீடு செய்வதற்கு உதவும். இது உத்தரவாதமுடன் (secured) அல்லது உத்தரவாதம் இல்லாமல் (unsecured) இருக்கலாம். ரூ.50,000 முதல் ரூ.1கோடி வரை தொகை கிடைக்கலாம், திருப்பி செலுத்தல் காலம் தொகையை பொறுத்து 25 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். உத்தரவாதமுடன் இருந்தால்வட்டி விகிதம் பொதுவாக குறைவாக இருக்கும்.
எது சிறந்தது?
உங்கள் தொழில் புதியதாக இருந்தால் அல்லது நிதி தேவைப்பட்டால், பர்சனல் லோன் சிறந்தது. ஏனெனில் இது எளிதாக அங்கீகரிக்கப்படுகிறது மற்றும் விரைவாக நிதி கிடைக்கும். ஆனால் உங்கள் தொழில் நிறுவனமாக இருந்தால் மற்றும் பெரிய தொகை தேவைப்பட்டால், பிசினஸ் லோன் பொருத்தமானது. ஏனெனில் இது குறைவான வட்டி விகிதம் மற்றும் நீண்ட திருப்பி செலுத்தல் காலத்தை வழங்குகிறது. உங்கள் தொழில் வரலாறு மற்றும் நிதி நிலையை பொறுத்து முடிவு செய்யுங்கள்.
செலரி ஸ்லிப் இல்லாம பர்சனல் லோன்
பர்சனல் லோன் என்பது உத்தரவாதம் (Surety) இல்லாமல் வங்கிகள் அல்லது NBFCகள் வழங்கும் கடனாகும். இது மருத்துவ செலவுகள், பயணம், அல்லது மற்ற திடீர் தேவைகளுக்கு பயன்படுகிறது. பொதுவாக, கடன் வழங்குபவர்கள் உங்கள் வருமானத்தை சரிபார்க்க செலரி ஸ்லிப் அல்லது வங்கி அறிக்கைகளை கேட்கிறார்கள். ஆனால், செலரி ஸ்லிப் இல்லாதவர்களுக்கும் சில வழிகள் உள்ளன.
செலரி ஸ்லிப் இல்லாமல் கடன் பெறுவது:
உங்கள் CIBIL ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், செலரி ஸ்லிப் இல்லாமல் கடன் பெறுவது எளிதாகும். இது உங்கள் கடன் திருப்பி செலுத்தல் திறனை காட்டுகிறது.
அதி கசிபில் ஸ்கோர் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதம், நீண்ட கால திருப்பி செலுத்தல் காலம், மற்றும் அதிக கடன் தொகையை வழங்கும். உங்கள் கிரெடிட் ஸ்கோரை பராமரிக்க Airtel Thanks app-ஐ பயன்படுத்தலாம் (Airtel Credit Score). உங்களிடம் பிணையமாக பயன்படுத்தக்கூடிய சொத்துகள் இருந்தால், அவற்றை வழங்கி கடன் பெறலாம்.
இது உங்கள் கடன் திருப்பி செலுத்தல் திறனை உறுதிப்படுத்தும். இது உங்கள் கடன் தொகையை அதிகரிக்கவும், வட்டி விகிதத்தை குறைக்கவும் உதவும், ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பிணையம் இழக்க நேரிடும்.
ஏற்கனவே ஒரு வங்கியோ அல்லது NBFCயோ வாடிக்கையாளராக இருந்தால், செலரி ஸ்லிப் இல்லாமல் கடன் வழங்குவதில் பொறுமையாக இருக்கலாம். ஆனால், செலரி ஸ்லிப் இல்லாமல் கிடைக்கும் கடன்கள் பொதுவாக அதிக வட்டி விகிதத்துடன் வரும் (1-4% அதிகம்). எனவே, பல்வேறு வழங்குபவர்களின் விகிதங்களை ஒப்பீடு செய்து பாருங்கள்.