ஊசலாடும் பாதுகாப்பு: ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களின் துடைக்கப்படாத கண்ணீர்
நிலுவையில் இருக்கும் ஓய்வூதிய திருத்தத்தை மேற்கொள்ள கோரி ஓய்வுபெற்ற இந்திய வங்கி ஊழியர்கள் கோருகின்றனர். ஒன்றிய அரசின் மெத்தனத்தால் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்று தரவுகள் சுடுகாட்டுவதாக தெரிவிக்கின்றனர். வங்கித் துறைக்குள் நிலவும் நிதி பிரச்சனை நாட்டின் நிதி நெருக்கடியைக் குறிக்கிறது என்று ஓய்வுபெற்றோர் கூறுகின்றனர்.

Author: Pughazh Selvi PK
Published: November 1, 2023
இந்திய பொதுத்துறை வங்கிகள் பல்வேறு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது. உதாரணமாக, வங்கிகள் இணைப்பு, மூன்றாம் தரப்பு ஆட்கள் சேர்ப்பு (Outsourcing), அதிகரிக்கும் காலிபணியிடங்கள் போன்றவைகள் வங்கிகள் சந்திக்கும் சவால்கள்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில், ஓய்வூதியத் திருத்ததிற்கான வங்கி ஊழியர்களின் நீண்ட போராட்டம் முன்வந்துள்ளது. நீண்ட நாளாக வங்கித் துறையிலுள்ள நிதி பிரச்சனை, ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. தற்போது பல உண்மை தரவுகளோடு அவைகளை சரிசெய்ய போராடுகின்றனர்.
வெடிக்கும் பொருளாதார யுத்தம்
ஓய்வுபெற்றோரின் நிதி தேக்கத்தை சுட்டிக்காட்டி மனுக்கள் அளித்தாலும் அவை நிராகரிக்கவேப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இதேநிலை தொடர்ந்துள்ளதால், தங்களின் வாழ்வாதார கோரிக்கைகாக பொருளாதார யுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதை பற்றி அனைத்து கேரள வங்கி ஓய்வூதியோர் சங்கத்தை (AKBRF) சேர்ந்த கே.டி.பாபு பேசுகையில், “கடைசியாக 1993ஆம் ஆண்டு ஓய்வூதிய திருத்தப்பட்டது. இதனால, 30 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அடிப்படையான ஒய்வூதியமே இதுவரை பெறுகிறோம்” என்று வேதனை தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் AKBRF அமைப்பு, 21 பொதுத்துறை வங்கிகள் (வங்கிகள் இணைப்பு முந்தைய எண்ணிக்கை) பற்றி தரவுகள் சேகரித்துள்ளனர்.
மேலும் அவர் கூறுகையில், “ இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 1990 ஆம் ஆண்டு அமலாக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நவம்பர் 1993 ஆம் ஆண்டு வங்களில் அமலாக்கப்பட்டது. வருங்கால வைப்பு நிதிதிட்டதில் (மத்திய வருங்கால வைப்பு நிதிக்கு பதிலாக) ஒரு பகுதியான இந்த திட்டத்தில் நிதி என்பது ஊழியர்களின் ஒரே சொத்தாகும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்றுவரை இது கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கிறது” என்று கூறினார்.
வெளிவராத ஓய்வூதிய நிதி
பணவீக்கமும் வாழ்வாதார செலவுகளும் அதிகரித்துக்கொண்டே செல்வதால், ஓய்வுபெற்றோர் தாங்களும் நிதி தேக்கத்தில் சிக்கியுள்ளதாக உணருகின்றனர். தொடரும் இந்த ஓய்வூதிய பிரச்சனைதான் ஒரு மர்மமான நிதி கதையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
AKBRF வின் பொது செயலாளர் எம். சுரேஷ் பேசுகையில், “கடந்த 2022 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் (24,408 கோடி ரூபாய்) வழங்க 40% பணமே (61,432 கோடி ரூபாய்) தேவைப்பட்டது. மீதமுள்ள 60% பணம் நிதிமூலதனத்தில் சேர்க்கப்பட்டது. தற்போதைய ஓய்வூதிய நிதிமூலதனம் 3.57 லட்சம் கோடி ரூபாயாகும்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், நிதிமூலதனத்தைப் பற்றி தரவுகள் சேகரிப்பது தாண்டி ஓய்வுபெற்றோரின் கோரிக்கையை நிறைவேற்ற AKBRF தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது என்றார்.
செவிசாய்க்காமல் மௌனம் காக்கும் அரசு
ஒன்றிய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (IBA), இரண்டுமே தொடர்ந்து இந்த பிரச்சனையில் மௌனமாகவே இருக்கின்றனர். நிதி அமைச்சரின் நாடாளுமன்ற அறிக்கையாலும் அரசின் மெத்தனத்தாலும் தங்களின் சமூக பாதுகாப்பு ஊசலடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு ஓய்வுபெற்றோரை அணுகும் முறை குறித்து, எம். சுரேஷ் கனலிடம் பேசுகையில், “ஓய்வூதிய திருத்தத்தால் பெரும் அழுத்தத்தில் ஓய்வுபெற்றோர் இருக்கிறார்கள். ஆனால், ஒன்றிய நிதி அமைச்சகம் எங்களின் நிலையை ஊதசீனமே செய்கிறது. 2020 ஆம் ஆண்டு, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓய்வூதிய திருத்த பிரச்சனையைச் சரி செய்வதாக அறிவித்தார். அதற்கு பின்பு எதுவும் மாறவில்லை.” என்று கூறினார்.
இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வுபெற்றோருக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஓய்வூதிய திருத்தம் குறித்து பத்திர பிரமாணம் செய்தது. அதில் IBA கூறியதாவது, “ஓய்வூதியத் தொகையை உயர்த்த எந்த சாத்தியக்கூறும் இல்லை. ஓய்வூதிய உயர்வை ஏற்பது பொருளாதார ரீதியாக சாத்தியமில்லை. ஆகையால், ஒன்றிய ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியம் வழங்க இயலாது.” என்று கூறியுள்ளனர்.
இறுதியாக, ஒன்றிய நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பின் செயல்பாட்டால் ஓய்வுதிய திருத்தத்தின் நிதி நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது.
ஆய்வுக்குள்ளான நிதி நிலை
ஓய்வூதிய திருத்தம் குறித்து மேலும் ஆய்வு செய்கையில், வங்கியின் நிதிநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தரவுகளின் அடிப்படையில் வங்கி நிதிமூலதனம் ஒவ்வொரு ஆண்டும் உயர்வதை காண முடிகிறது. இருப்பினும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேறாமலே இருப்பதாக போராட்ட அமைப்பினர் தெரிவிகின்றனர்.
AKBRF தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த தரவுகள் கீழே
2018 | 2021 | 2022 | |
ஓய்வூதிய பயனாளர்கள் | 5,40,947 | 6,04,569 | 6,15,777 |
குடும்ப ஓய்வூதிய பயனாளர்கள் | 1,22,196 | 1,43,358 | 1,58,738 |
மொத்தம் | 6,63,170 | 7,47,917 | 7,74,515 |
ஓய்வூதிய நிதி (கோடிகளில்) | 2,23,588 | 3,22,402 | 3,57,891 |
Source: RTI மூலம் அனைத்து கேரள வங்கி ஓய்வூதியோர் சங்கம் பெற்ற தரவு
மேற்குறிப்பிட்ட RTI தரவு கூடுதலாக ஒரு தகவலை வெளிப்படுத்தியது. 2021 ஆண்டின் படி 7,74,515 வங்கி ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அவர்களில் ஓய்வூதியம் பெற விரும்புவோர் 2,10,000 ஊழியர்கள் 31.03.2022 தேதியோடு ஓய்வுபெற்றுள்ளனர். இதேநிலை 2045 வரை தொடந்தால், ஓய்வூதிய பயனாளர்கள் யாரும் எஞ்சி இருக்க மாட்டார்கள் ஆனால், ஓய்வூதிய தொகை 6 லட்சம் கோடிக்கு மேல் புதையல் போல் சேர்ந்திருக்கும்.
பட்டவர்த்தனமான பாரபட்சம்
1986 முதல் போராடி, 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான், இந்த ஓய்வூதிய திட்டம் அமலானது. ஆனால், ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திருத்த தொகை இன்றளவும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
வங்கித் துறைக்குள்ளேயே இந்த ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்க முடியும். இந்திய ரிசர்வ் வங்கியின் ஓய்வூதிய பயனாளர்கள் மட்டும் ஓய்வூதிய திருத்த தொகையை அனுபவிக்க மற்ற வங்கி ஓய்வூதியார்களின் கோரிக்கை உதாசீனப்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் வங்கித் துறையில் இருக்கும் ஆழமான ஏற்றத்தாழ்வு வெளிவருகிறது.
“சுமார் 30,000 இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு, 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 13.56% ஓய்வூதிய தொகை உயர்வு கிடைத்துள்ளது.” என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.
ஓய்வூதிய திட்டத்தின் அமலாக்கத்திற்கு பிறகு, இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் உதவியோடு, இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு 4 முறை ஓய்வூதிய உயர்வு கிடைத்துள்ளது.
இந்திய நிதித் துறை முன்னோக்கி செல்ல செல்ல, தனது துறை சார்ந்த ஊழியர்களை எவ்வாறு கையாளுகிறது என்பதை பார்க்க முடிகிறது. ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களின் நிலை வங்கித்துறையின் கையில் லிட்மஸ் சோதி போன்று இருக்கிறது. ஆனால், எவ்வளவு தடைகள் வந்தாலும், தரவுகளைக் கேடயமாக வைத்து, விடாமுயற்சியை ஆயுதமாக ஏந்தி ஓய்வூதிய பயனாளர்கள் தங்களுக்கு சேர வேண்டிய நிதிகாவும், நீதிக்காகவும் போராடுகிறார்கள்.
(This is a translated version of a report originally published in Kanal, titled Silenced Security: Retired Bank Employees' Unheard Cry for Pension Revisions)
No comments yet.