- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
AI தொழில்நுட்பத்தால் பறிபோகும் 4,000 வங்கி பணிகள்? DBS வங்கி CEO அதிர்ச்சி தகவல்!
செயற்கை தொழில்நுட்பத்தின் (AI) அதீத வளர்ச்சி காரணமாக DBS வங்கி நிர்வாகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஸ் குப்தா கூறியுள்ளார்.

Author: Kanal Tamil Desk
Published: February 25, 2025
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தெற்காசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கியின் தலைமை செயல் அதிகாரி பியூஸ் குப்தா அண்மையில் மும்பையில் இந்திய ஐடி துறை குழுமமான நாஸ்காம் (Nasscom) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வில் அவர் பேசியது வங்கித்துறை வட்டாரத்தில் குறிப்பாக ஊழியர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “ AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் எங்கள் (DBS) பணியாளர்களில் சுமார் 4,000 எண்ணிக்கையிலோ அல்லது 10% அளவிலோ குறைக்கப்படுவார்கள் என்பது எனது தற்போதைய கணிப்பு" கூறினார். இருந்தாலும் அதே AI தொழில்நுட்பத்தால் 1,000 புதிய பதவிகள் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், “ நான் தலைமை நிர்வாக அதிகாரியாக 15 வருடங்கள் பணியாற்றி வருகிறேன். தற்போது தான் முதல் முறையாக, வேலைவாய்ப்புகளை உருவாக்க போராடி வருகிறேன். இதுவரை, இழக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு பதிலாக என்னென்ன புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பது குறித்து சிந்தித்து வருகிறேன். வேலை இழப்புகளை தடுக்க அந்த ஊழியர்களை வேறு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தவிக்கிறேன் என்றும் குப்தா கூறினார்.
வங்கி இதற்கு முன்பு பயன்படுத்திய தொழில்நுட்பத்தை போல இந்த AI தொழில்நுட்பம் இல்லை என்றும், கடந்த தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) DBS குறிப்பிடத்தக்க வேலை இழப்புகளை சந்திக்கவில்லை. 2016-17ஆம் ஆண்டு காலகட்டத்தில் 1,600 பேரின் வேலைவாய்ப்புகள் ஆபத்தில் இருந்தபோதும், தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து கிட்டத்தட்ட அனைத்து ஊழியர்களையும் வங்கிக்கு மீண்டும் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், AI தொழில்நுட்பம் இப்போது பல வங்கி செயல்முறைகளை தானியக்கமாக்குவதால், ஊழியர்களை வேறு வேலைக்கு பயன்படுத்துவது ஒரு சவாலாக மாறியுள்ளது என குப்தா குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர் தொடர்புகளுக்கு, AI-ஐ முழுமையாக பயன்படுத்துவதில் வங்கி எச்சரிக்கையாக உள்ளது என்றும், வங்கி முதன்முதலில் 2012-13ஆம் ஆண்டில் AI உடன் பரிசோதனை செய்தது, ஆனால் அதிக குறிப்பிடத்தக்க வெற்றியைக் காணவில்லை. இருப்பினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு AI தொழில்நுட்பம் தீர்வுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது, மேலும் AI இன் முழு நன்மைகளும் இன்னும் உணரப்படவில்லை என்று குப்தா கூறினார்.
அடுத்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரம் வேலைஇழப்புகள் என்பது பெரும்பாலும் நிரந்தர ஊழியர்களை பாதிக்காது. தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை தான் இந்த வேலையிழப்பு பிரச்சனை பெரிதாக தாக்கும் என அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் ஊழியர்கள் அந்த பணியில் இருந்து வெளியேறும்போது அந்த பதவிகள் வேறு ஆட்களால் நிரப்பப்படாது என்று கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வங்கியான DBS தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தாவின் பதவிக்காலம் வரும் மார்ச் 28 அன்று நிறைவு பெறுகிறது. அவருக்கு பிறகு டான் சு ஷான் DBS வங்கியை தலைமை தாங்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது.