- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வாரத்தில் 5 நாட்கள் வேலை : காத்திருந்தது ஏமாற்றமடைந்த வங்கி ஊழியர்கள்!
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த வங்கி ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 7, 2025
அரசு மற்றும் சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்களுக்கு வேலை - குடும்ப சூழல் ஆகியவற்றின் சமநிலை பாதிக்காதவாறு உத்வேகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால், வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கை வங்கி ஊழியர்களுக்கு நீண்ட நாள் கனவாகவே இருந்து வருகிறது. வேலைப்பளு, ஊழியர்களின் மனச்சோர்வு, வேலை - தனிபட்ட வாழ்க்கை சமநிலை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை நிறைவேற்றம் செய்ய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வாரத்தில் 6 நாட்கள் வேலை..,
இதுவரையில் ‘வாரத்தில் 5 நாட்கள் வேலை நாள் ’ என்ற கோரிக்கை குறித்து அரசிடம் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை.
மாதத்தில் 2 சனிக்கிழமைகள் தவிர மற்ற வாரங்களில் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்து வரும் வங்கி வங்கி ஊழியர்களுக்கு தற்போது வரையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
IBA - UFBU :
கடந்த 2025 டிசம்பர் மாதத்திலேயே வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கை நிறைவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு (IBA) மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் (UFBU) ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனாலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் :
கடந்த ஜனவரி 31-ல் நாடாளுமன்றத்தில் தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் வாரத்தில் 5 நாட்கள் வேலை எனும் வங்கி ஊழியர்களின் கோரிக்கை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. ஜனவரி 31-ல் குடியரசு தலைவர் உரை, அடுத்து பிப்ரவரி 1-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2025 உரை, அடுத்தடுத்த நாட்களில் நாடாளுமன்ற நிகழ்வுகள் என எதிலும் மேற்கண்ட கோரிக்கை பற்றி எந்தவித அறிவிப்பும், அது தொடர்பான செய்திகளும் வெளியாகியது போல தெரியவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இனியாவது வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.
வேலைநிறுத்த போராட்ட அழைப்புகள் :
ஏற்கனவே வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AIBOC சங்கத்தின் சார்பாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளிலும், மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் AIBOA சங்கத்தினரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
8வது ஊதியக்குழு ஒப்புதல் :
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தி 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து, கடந்த ஜனவரி 16-ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு 8வது ஊதிய குழு அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.