- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னை மண்டல தூய்மை பணியாளர்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்
செங்கொடி இயக்கம் தலைமையிலான ஆர்பாட்டத்தில் 380 பேர் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள 8 மண்டல தூய்மை பணியாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கழிவறை வசதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பணி உபகரணங்கள் தரக்கோரியும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

Author: Muthurani
Published: October 20, 2023
ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் தங்களது அடிப்படை வசதிகளை செய்து தர பல முறை கோரிக்கை வைத்தும், சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் தொழிலாளர்கள் அக் 18 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் மண்டலம் 5 அலுவலகம், வடக்கு வட்டார அலுவலகம், பேசின் சாலை சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் 16 தூய்மை பணியாளர் மண்டலங்கள் இருக்கின்றன (49 -64 மண்டலங்கள்). இதில் 8 மண்டலங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மண்டல அலுவலர்களிடம் மனு கொடுத்தும், மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். செங்கொடி இயக்கம் தலைமையிலான ஆர்பாட்டத்தில் 380 பேர் கலந்துகொண்டனர்.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளும் தாமதப்படுத்தும் நிர்வாகமும்
சென்னையில் உள்ள 8 மண்டல தூய்மை பணியாளர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கழிவறை வசதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பணி உபகரணங்கள் தரக்கோரியும் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அபாயகரமான நிலையில் இயங்கும் BOV ஆட்டோக்களை முறையாக பழுது பார்த்து கொடுக்க வேண்டும், அனைத்து கோட்டங்களிலும் கழிவறை , ஓய்வறை ( உடை மாற்றும் அறை) குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், NULM தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 1ஆம் தேதி சம்பளம் வழங்கிட வேண்டும், NULM குழு மூலம் சம்பளம் வழங்குவதை தவிர்த்து நேரடியாக மாநகராட்சியே சம்பளம் வழங்க வேண்டுமென்றும், GPF,செலக்சன் கிரேடு, ஸ்பெஷல் கிரேடு, ஓய்வு பெற்ற பயண பயன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நமது செங்கொடி இயக்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு கனலிடம் பேசுகையில், “முதலமைச்சர் ஆட்சிக்கு வந்ததும் 1000 ஆட்டோ வண்டிகளை வழங்கினார். கூடவே, வண்டிக்கான பராமரிப்பு உபகரணங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டும். ஆனால் அப்படி வழங்குவதில்லை, தொழிலாளர்களுக்கு பணி உபகரணங்கள் துடைப்பம் உள்ளிட்ட உபகரணங்களை நிர்வாகம் முறையாக வழங்காததால் தொழிலாளர்கள் தங்களது சொந்த காசை போட்டு வாங்க வேண்டியுள்ளது. எனவே, எங்களது கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல ஆர்ப்பாட்டம் நடத்தினோம்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 13,14 தேதிகளில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கும், கழிவறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கடந்த மூன்று மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
“தூய்மை பணியாளர்களின் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கடந்த மாதம் 17 ஆம் தேதி மண்டல அலுவலரை பார்த்து எங்களது கோரிக்கை மனுக்களைக் கொடுத்தோம். ஆனால், எங்களது கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருந்ததால் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். அடுத்தக்கட்டமாக ரிப்பன் மாளிகையில் ஆர்பாட்டம் நடத்துவதாக திட்டமிட்டுள்ளோம். தேதி பின்னர் அறிவிப்போம்” என்று கனலிடம் பேசுகையில் திரு. பிசீனிவாசலு கூறினார்.