- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பாலஸ்தீன மக்கள் ஆதரவாக தமிழ்நாட்டு முற்போக்கு அமைப்புக்கள் போராட்டம்
பல ஊடக செய்திகளின் தகவல் படி, இதுவரை 5795 அப்பாவி மக்களும், 2360 குழந்தைகளும், 1932 பெண்களும், 295 முதியோர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Author: Muthurani
Published: October 25, 2023
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ்கும் இடையே மீண்டும் நடந்த மோதலில், இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களையும், போரையும் நிறுத்த கோரி தமிழ் நாட்டில் சில தினங்களாக பல்வேறு முற்போக்கு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
சுமார் 75 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே காசாவில் மீண்டும் மோதல்கள் தொடங்கியது. இன்று வரை 5795 உயிர்கள் பலியாயிருக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் முற்போக்கு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இது போன்று, உலகின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீன மக்கள் ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
'போரை நிறுத்து; பாலஸ்தீனத்தை பாதுகாப்போம்’
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )தென் சென்னை மாவட்டம் நடத்திய ஆர்ப்பட்டம்
இஸ்ரேல் ஹாமஸ் தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களை உடனே நிறுத்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதலை நிறுத்து போன்ற கோரிக்கைளை முன் வைத்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தென் சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை குழு உறுப்பினர் Gராமகிருஷ்னன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேல் முருகன், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீனத்தை பாதுகாப்போம் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தை பாதுகாப்போம் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் கொடூர தாக்குதலை கண்டித்து மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூரில் அக்.20. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மத்திய குழு உறுப்பினர்கள் பி. சம்பத், வாசுகி மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் கறுப்பு துணியணிந்து மதுரையில் நடத்திய ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தின் மருத்துவமனை மீது குண்டுகளை பொழிந்து குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்த இஸ்ரேலை கண்டித்து ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் கறுப்பு துணியணிந்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காசா மருத்துவமனையின் மீதான இஸ்ரேலின் மனிதத் தன்மையற்ற தாக்குதலுக்கு வன்மையான கண்டனத்தை இணையளத்திலும் தெரிவித்துள்ளது.
“பற்றி எரிகிறது பாலஸ்தீனம் மெளனம் கலைப்போம்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்ட நிகழ்வை அரண் செய் ஒருங்கிணைத்தது. சென்னை கவிக்கோ அரங்கத்தில் அக் 20 இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், மருதையன் இடது சாரி செயற்பாட்டாளர் மற்றும் மதுர் சத்யா போன்றோர் கலந்து கொண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தங்கள் கருத்துகளையும் இஸ்ரேலுக்கு எதிரான கண்டங்களையும் தெரிவித்தனர்.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சென்னையில் நடத்திய போராட்டம் .
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சென்னையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு துணை செயலாளர் வீர பாண்டியன் பேசுகையில், "ஐ.நா., பிரிக்ஸ் மற்றும் பிற நாடுகள் தலையிட்டு போரை நிறுத்த அழுத்தம் தர வேண்டும். நாங்கள் போரை எதிர்க்கிறோம், பாலஸ்தீன விடுதலைக்கு துணை நிற்கிறோம்" என்று கூறினார்.
மார்க்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடலூரில் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய தொழிற் சங்க மையம் சென்னையில் நடத்திய கண்ட ஆர்ப்பாட்டம்
அனைத்து பெண்கள் கூட்டமைப்பு "போரை உடனடியாக நிறுத்து, இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவித்திடுக" போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற 31ம் தேதி சென்னையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திட்டமிட்டுள்ளது.