Advertisement
படுதோல்வியான ‘பாங்க் ஆஃப் பரோடா’ வங்கியின் திட்டம்: பணிசுமையில் வங்கி ஊழியர்கள்
பாங்க் ஆஃப் பரோடா வின் செயலி பாப் வேர்ல்ட், இந்திய ரிசர்வ் வங்கியால் இடைகாலத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கி ஊழியர்களின் பணி சுமை பற்றி விவாதங்கள் எழுந்துள்ளது. ஆட்கள் பற்றாகுறை, இலக்கை அடைவதில் தடுமாற்றம் என பல மறைக்கப்பட்ட தகவல்கள் வெளிவருகிறது.

Author: Pughazh Selvi PK
Published: October 28, 2023
Advertisement
சமீபமாக இந்திய ரிசர்வ் வங்கி, பாப் வேர்ல்ட் (Bob World) எனப்படும் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் மொபைல் பேங்கிங் (அலைபேசி வழி பண பரிவர்த்தனை) செயலிக்கு இடைகாலத் தடை விதித்துள்ளது. இந்த நிகழ்வால் வங்கித்துறையில் இருக்கும் முரண்கள், வங்கி ஊழியர்களின் பணிச்சுமை மற்றும் காலக்கெடுவால் ஏற்படும் அழுத்தம் ஆகியவைகள் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
அல்ஜசீரா செய்தி வெளியிட்ட புலனாய்வு அறிக்கைப்படி, பாப் வர்ல்ட் செயலியில் உள்ள கணக்குகளில் ஏராளமானவை பொய் கணக்குகளாகும். அதையடுத்தே, பாப் வேர்ல்ட் செயலியில் புதிய கணக்குகள் இணைக்க இடைகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொய் கணக்குகள் அனைத்தும் வங்கி ஊழியர்களாலே உருவாக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Advertisement
பாப் வேர்ல்ட் செயலியில் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட முறையிலும் அதை கண்காணித்த விதத்திலும் குளறுபடிகள் இருந்துள்ளது. இதனால், அக் 10 ஆம் தேதி, இந்திய ரிசர்வ வங்கி அந்த செயலியில் புதிய கணக்குகள் சேர்க்க இடைகாலத் தடை விதித்துள்ளது.
இந்த பிரச்சனையைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் அவர்கள் மீதுள்ள வேலை அழுத்தம், வங்கி அவர்களுக்கு தரும் இலக்கு மற்றும் காலக்கெடு குறித்து அவர்களது ஆதங்கத்தை வெளிபடுத்த தொடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களில், குறிப்பாக X தளத்தில் இதை குறித்து விவாதங்கள் எழுந்துள்ளது.
X தளத்தில் ஜோக்கர் பேங்கர் பதிவிட்டதாவது, “SBI LIFE யை விற்கும் ஊழியர்களுக்கு சுற்றுலா (செல்லும் வாய்ப்பு) அளிக்கப்படுகிறது.” என்று பதிவிட்டார்.
குறிப்பிட்ட SBI LIFE (காப்பீட்டாளர்கள்) இலக்கை காலக்கெடுவிற்குள் கட்டாயம் முடிக்க சொல்லியுள்ளது ஜோக்கர் பேங்கர் பதிவிட்ட திரைபதிவுகளில் (screenshots) தெளிவாக தெரிகிறது.
படம்: வாட்சாப் செயலியில் கட்டாய SBI LIFE பதிவு குறித்து
மேலுள்ள படத்திற்கு பதிலளிக்கும் வகையில், SBI ஊழியர் X தளத்தில் கூறியதாவது, “நீங்கள் எந்த வங்கி கடன் வாங்கினாலும், @SBILife க்கு தகுதியானர்வர் இல்லை எனில், அந்த கடனுக்கு சமந்தமே இல்லாத உங்களின் மனைவி/அம்மா அல்லது வேறு யாரவது பெயரிலாவது (காப்பீடு) வழங்க சொல்லி @TheOfficialSBI ஊழியர்களை வற்புறுத்துகின்றனர். விற்காத மூன்றாம் தரப்பு பொருட்களை விற்க தெரிந்தே இந்த அதிக அல்லது தவறான விற்பனை நடக்கிறது.” என்று தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதள பதிவுகளால் இந்தியவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, SBI யில் இருக்கும் கவலைக்குரிய பணி சூழல் வெளிவந்துள்ளது.
காலக்கெடு அழுத்ததால் உருவான பாப் வேர்ல்ட் சிக்கல்
இலக்கு மற்றும் காலக்கெடுவால் உருவாகும் அழுத்தம் குறித்து இப்போது அனைத்து வங்கி ஊழியர்களும் சமூக வலைதளங்களில் பேச தொடங்கியுள்ளனர்.
படம்: பாப் வேர்ல்டிற்கான இலக்கு குறித்து
Photo credit - X
பாங்க் ஆஃப் பரோடா வங்கி மண்டலத்திற்கு 1000, 500 என்றும் கிளை வாரியாகவும் கணக்கு சேர்ப்பு இலக்கு குறிப்பிட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கமான, வீ பேங்கர்ஸ் கூட்டமைப்பு, பாங்க் ஆஃப் பரோடா நிர்வாகத்தை வன்மையாக கண்டித்துள்ளது. இப்படியான அழுத்தமான பணி சூழலை கவனிக்க தவறியதற்காவும், இலக்கை எட்ட தரப்பட்டுள்ள அழுத்ததிற்காகவும் கண்டித்துள்ளனர்.
அவர்கள் X தளத்தில் பதிவிட்டதாவது, “AIBOBOA யிடம் இருந்து வந்த கடிதம் பாப் வேர்ல்டின் குளறுபடியை வெளிபடுத்தியது. புகை வந்தால் எங்கேயோ நெருப்பு எரிவாதாக கூறுவார்கள். நிர்வாக தலைமையில் இருக்கும் பித்து வங்கியை மூழ்கடிக்கும். #UnrealisticTargetPressure #ToxicWorkCulture உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டனர்.
சமூக வலைத்தளத்தில் பாப் வேர்ல்ட் பற்றி பேச தடைவிதித்து, அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பாக கடிதம் வெளியிட்டு இருந்தது. அந்த கடிதம் பற்றி வீ பேங்கர்ஸ் கூட்டவைப்பு பதிவிட்ட டிவீட் தான் மேற்கூரியுள்ளது.
ஊழியர்கள் பற்றாகுறை
பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பிற பொதுத்துறை வங்கியில் குறைந்த ஊழியர்கள் இருப்பதே ஊழியர்கள் பணிச்சுமைக்கு காரணம் என்று வங்கி நிபுணர்கள் கூறுகின்றனர். தரப்பட்ட இலக்கை அடைய ஊழியர்கள் மேல் அதிகரிக்கும் வேலை அழுத்தம் என்பது ஆட்கள் பற்றாகுறையால் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
பெயர் சொல்ல விரும்பாத, மூத்த SBI அலுவலர் கனலிடம் கூறியதாவது, “அதிகப்படியான ஊழியர்கள் பற்றாக்குறையில் தான் பொதுத்துறை வங்கிகள் செயல்படுகிறது இதுவே போது மக்களுக்கு சேவை செய்வதில் தோல்வியடைய காரணம். இதனால், தற்போது இருக்கும் வங்கி ஊழியர்கள் இலக்கை அடைய அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதுவே பாப் வேர்ல்ட் பிரச்சனையில் நடந்தது போன்ற நேர்மையற்ற செயல்களுக்கு வழிவகுக்கிறது.” என்று கூறினார்.
RBI வெளியிட்ட சமீபத்திய தரவு படி, வங்கி ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகபடியான சரிவு ஏற்பட்டுள்ளது குறித்து கனல் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடரும் வேலை அழுத்தம்
சமீபகாலமாக பொதுத்துறை வங்கி ஊழியர்கள், இலக்கை அடைய அதிகபடியாக உழைப்பது, அதனால் வரும் அழுத்தத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களிலும் அவர்கள் வேலை செய்வதை பார்க்க முடிகிறது.
மார்ச் மாதம் 2023, இந்திய வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இலக்கை அடைய ஊழியர்கள் வேலை நேரத்தை தாண்டி வேலை செய்ய வேண்டும் என்று அதிலிருந்தது.
இதே போல பாங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா ஜனவரி மாதம் கூறியிருந்தது. நிர்வாகத்திடம் இருந்து அதிக பணிசுமை மற்றும் அழுத்தத்தால் 2000 க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராடினர்.
வீ பேங்கர்ஸ் கூட்டமைப்பும் வங்கிகள் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் ஊழியர்களை தொடர்புகொண்டு பணிக்கு அழைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
வங்கி ஊழியர்களின் வேலை அழுத்தம் பற்றி சமூக ஊடகங்களில் பேச தொடங்கிய பிறகு, 5 நாட்கள் வேலை குறித்து விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி 70 மணி நேர வேலை பற்றி பேசியதும் பெரும் சர்ச்சையை மக்கள் மத்தியில் தூண்டியுள்ளது.
No comments yet.