- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வங்கிகளில் மதிய உணவு இடைவேளை இருக்கிறதா? RBI ரூல் சொல்வது என்ன?
வங்கிகளில் மதிய நேரம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதா? ஆனால், RBI சொல்லும் உண்மையான ரூலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Author: Kanal Tamil Desk
Published: September 12, 2024
டெல்லி : பொதுவாக வங்கிகளுக்கு செல்லும் பொழுது மதிய உணவு இடைவேளை என்று கூறி, நம்மை 1 மணி முதல் 2 மணி நேரம் காக்க வைப்பார்கள். நாம் அனைவரும் வங்கிகளுக்கு முக்கிய வேலையாக சென்றால் அந்த பணியை முடிக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக நாம் வங்கிக்கு 12 மணிக்கு மேல் சென்றால் போதும் மதிய உணவு இடைவேளை என காரணம் காட்டி கிட்டத்தட்ட 3 மணி வரை நம்மை காக்க வைப்பார்கள். இதை வங்கி சென்ற அனைவரும் அனுபவித்திருப்பது உண்டு.
வங்கியின் மதிய உணவு இடைவெளியின் உண்மையான விதிமுறைகள் என்னவென்று இங்கே பலருக்கும் தெரியாது. அது தெரியாமல் தான் நாம் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். அதை தெரிந்து கொண்டால் நம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
வங்கியின் மதிய உணவு இடைவெளி குறித்து உண்மையில் சொல்லப்போனால், “மதிய உணவு இடைவேளை நேரம் என்பது கிடையவே கிடையாது”. இனிமேல் அவ்வாறு கூறினால் இந்த விதைகளை சொல்லி காத்திருக்காமல் உங்கள் வேலையை விரைவில் முடித்துக் கொண்டு செல்லலாம்.
RBI விதிமுறைப்படி, SBI மற்றும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என அனைத்து வங்கிகளும் அதனை கடைபிடிக்கப்படுகிறது. இருந்தாலும் வங்கியில் பணிபுரியபவர்கள் மனிதர்கள் என்பதால் இந்திய தொழிலாளர் சட்டம் இவர்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது, தொழிலாளர் சட்டத்தின் படி எட்டு மணி நேரம் வேலை செய்பவர்கள் அரை மணி நேரம் உணவு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், வங்கியில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களும் அரை மணி நேரம் உணவு இடைவேளை கிடைக்கும் ஆனால் இதற்கு ஒரு விதிமுறை உள்ளது.
RBI விதிகளின்படி, ஒரு வங்கியில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக ஓய்வெடுக்க முடியாது. அதற்கு மாறாக, ஷிப்ட் முறைப்படியும் பாதி ஊழியர்கள் ஓய்வு எடுத்தால் பாதி பேர் வேலை செய்வார்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவையை உறுதி செய்வதோடு வங்கிச் செயல்பாடுகள் எல்லா நேரங்களில் சீராகத் தொடர முடியும்.
வாடிக்கையாளர்களுக்கான வங்கிச் சேவை இடையூறு விளைவிக்காமல், வேலை நேரம் முழுவதும் வாடிக்கையாளர் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைகளுடன் இந்த அணுகுமுறை ஒத்துப்போகிறது.