Advertisement
SBI வங்கியை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்.! CDAMS-TN அமைப்பின் பின்னணி என்ன?
நீதிமன்றங்களால் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளை பொதுவாக நிர்வகிக்க பாரத ஸ்டேட் வங்கியானது CDAMS-TN எனும் அமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: September 14, 2024
Advertisement
சென்னை : தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் மோட்டார் வாகனக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிறரால் வரவு (டெபாசிட்) வைக்கப்படும் பெரும் தொகை கொண்டுள்ள பல்வேறு வங்கி கணக்குகள் முறையாக நிர்வகிக்கப்டாமல் இருந்துள்ளது. இதனை முறைப்படுத்த நிதி வரவு - செலவுகளை துல்லியமாக கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் தமிழ்நாடு நீதிமன்ற டெபாசிட் கணக்கு மேலாண்மை எனும் CDAMS-TN எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
நீதிமன்ற கணக்கு வழக்கு விவரங்களை முறையாக கையாளும் சிறப்பான திட்டங்களை கொண்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
Advertisement
CDAMS-TN உருவான பின்னணி :
இந்த CDAMS-TN அமைப்பு உருவாவதற்கு பின்னால், ஓர் நீதிமன்ற நிதி முறைகேடு வழக்கு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்படும் நீதிமன்றத்தில் பணியாற்ற ஓர் ஊழியர், அங்குள்ள நீதிமன்ற வங்கி கணக்கை முறைகேடாக பயன்படுத்தி சுமார் ரூ.1.5 கோடி அளவுக்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டது.
RBI அறிவுறுத்தல் :
இந்த வழக்கு விசாரணை கடந்த, ஜூலை 25ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண ஆஜரானார். அவர் கூறுகையில்," மாவட்ட நீதிமன்றங்களில் செயல்படும் அனைத்து வங்கிகளையும் ஓர் அமைப்பு மையப்படுத்தி முறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் ஆலோசனை நடத்த வேண்டும்." எனப் பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று, அத்தகைய அமைப்பை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நீதிமன்றத்தில் எடுத்துரைக்குமாறு SBI-ஐ உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. SBI பரிந்துரை ஏற்கப்பட்டால் இந்த அமைப்பை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றலாம் என்று நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியது.
நீதிமன்றம் பாராட்டு :
அதன் பெயரில், CDAMS-TN அமைப்பு உருவாக மிக முக்கிய பங்காற்றிய SBI வழக்கறிஞர் செவனன் மோகன், SBI துணைப் பொது மேலாளர் வீரேந்தர் குமார் வர்மா மற்றும் உதவிப் பொது மேலாளர் வி. பிரபாகர் ஆகியோரின் பணியை உயர்நீதிமன்றம் வெகுவாக பாராட்டியது.
இந்த அமைப்பு மூலம், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களால் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும். வங்கி நிதி வரவு செலவைக் கண்காணித்து தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் தமிழ்நாடு நீதிமன்றத்தில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்களை காசோலையாக வைத்திருக்கும்படி இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு :
எஸ்பிஐ குழுவால் உருவாக்கப்பட்ட CMDS-TN பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கக்காட்சியாக நீதிபதிகளுக்கு SBI-யால் தெரிவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் விளக்க திட்டங்களை நீதிபதிகள் பாட்டினர். ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் இதனை சரிபார்த்து, இதில் ஏதேனும் மாற்றங்களைப் பரிந்துரைப்பதற்காக கோரி, ரிசர்வ் வங்கி மூத்த நிர்வாகியுடன் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தினர். இது தொடர்பான அடுத்த உத்தரவுகளை பிறப்பிக்க வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments yet.