- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
கனரா வங்கி Savings Account-ல் இவளோ விஷயம் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்
வங்கிகளில் நாம் புதிய கணக்கு தொடங்குகையில், நமது வயது, வேலை, ஊதியம், வங்கி பயன்பாடு என பல்வேறு காரணிகள் கொண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுபற்றிய சிறு செய்தி தொகுப்பை காணலாம்.

Author: Kanal Tamil Desk
Published: October 21, 2024
நமது சேமிப்புகளை முறைப்படுத்தவும், முதலீடுகள் மேற்கொள்ளவும் வங்கி கணக்கு துவங்குவது என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அப்படி துவங்க வேண்டிய சேமிப்பு கணக்குகள் நமது வயது, பாலினம், நமது தேவை, தொழில் என பல்வேறு காரணிகள் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. காரணிகள் அறிந்து அதற்கேற்றாற் போல சேமிப்பு கணக்குகளை துவங்கினால் அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
இந்த காரணிகள் கொண்டு நாம் துவங்கும் சேமிப்பு கணக்குகள் மூலம் கிடைக்கும் பலன்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அப்படியான சலுகைகளை ஒவ்வொரு வங்கிகளும் விளம்பரப்படுத்தி தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். அதில் நமக்கு எந்தெந்த சலுகைகள் பயனுள்ளதாக இருக்கும் என அறிந்து அந்த வங்கி சேவையை நாடுவது நமது விருப்பம்.
இதற்கு உதாரணமாக பொதுத்துறை வங்கிகளில் மிகப் பிரபலமாக செயல்பட்டு வரும் கனரா வங்கியில் செயல்படுத்தப்படும் சில குறிப்பிட்ட முக்கியமான சேமிப்பு கணக்குகள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
ஜீவன்தரா சேமிப்பு கணக்கு (Canara Jeevandhara) :
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் இந்த ஜீவன்தரா திட்டத்தில் சேருவதற்கு தகுதியானவர்கள்.
இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதாவது, கணக்கில் பணமே இல்லை என்றாலும் எந்தவிதமான அபராதமும் விதிக்கப்படாது.
Rupay வகை ATM கார்டு இலவசமாக முதல் முறை வழங்கப்படும். வருடாந்திர பராமரிப்பு தொகை பிடித்தம் கிடையாது. கனரா வங்கியில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் சேவை கட்டணம் கிடையாது.
நகைகள், முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்கும் லாக்கர் வாடகையில் 50% சலுகை வழங்கப்படும்.
காசோலை புத்தகங்கள் (Cheque Book) ஆண்டுக்கு 60 பக்கங்கள் வரை இலவசமாக வழங்கப்படும்.
குறிப்பிட்ட விதிமுறைகளின்படி, உடல்நலக் காப்பீட்டையும் இந்த சேமிப்பு கணக்கு வழங்குகிறது. வங்கியுடன் தொடர்பு கொண்ட மருந்தகங்களில் மருந்துகள் வாங்கினால் 25% வரை சலுகை கிடைக்கும்.
ஏஞ்சல் கணக்கு (Canara Angel Account) :
இது பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட வங்கி கணக்கு வகையாகும். 18 வயது முதல் 69 வயது வரையில் உள்ள பெண்கள் இந்த வங்கி கணக்கை துவங்க தகுதி பெற்றவர்கள்.
10 லட்சம் வரை புற்றுநோய் காப்பீடு, 26 லட்சம் வரை தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.
இலவசமாக Rupay ஏடிஎம் கார்டு வழங்கப்படும். மிந்த்ரா, அமேசான், ஸ்விகி, புக் மை ஷோ போன்ற வணிகத்தளங்களை பயன்படுத்துகையில் ரூ.4 ஆயிரம் வரை சலுகைகள் கொடுக்கபடுகிறது.
நகைகள், முக்கிய ஆவணங்களை சேமித்து வைக்கும் லாக்கர் வாடகையில் 15% சலுகை வழங்கப்படும். இலவச SMS சேவை, இலவச NEFT / RTGS / IMPS சலுகைகள் வழங்கப்படும்.
இந்த வங்கி கணக்கு வாடிக்கையாளரின் மகள்களின் கல்விக் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணம் எனும் Processing fees முழுக்க தள்ளுபடி செய்யப்படும்.
வெற்றியாளர் கணக்கு (Canara Aspire Account) :
18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண் பெண் என இருபாலரும் இந்த வங்கி கணக்கை தொடங்க தகுதியானவர்கள்.
ஒரு காலாண்டுக்கு ரூ.5 ஆயிரம் வரையில் நிலையாக சேமிக்க வைக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு Coursera எனும் இணையதள படிப்பாக தளத்தில் இலவசமாக ஒரு ஆன்லைன் படிப்பை படிக்கலாம்.
மேலும், ஒரு காலாண்டுக்கு ரூ.25 ஆயிரத்தை நிலையாக சேமித்து வைத்திருந்தால் மேலும் ஒரு Course இலவசமாக படித்துக்கொள்ளலாம்.
கல்விக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்கு 50 ஏடிஎம் பரிவர்த்தனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
Amazon, Swiggy, BookMyShow மற்றும் Gaana ஆகியவற்றில் டெபிட் கார்டு அடிப்படையில் பல்வேறு சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.
ஊழியர்களுக்கான அக்கவுண்ட் (Premium Payroll Account) :
குறைந்தபட்சம் 5 ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி மாத ஊதியம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாக பெரும் ஊழியர்களுக்கானது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த கணக்கை தொடங்க தகுதி பெற்றவர்கள்.
இந்த ஊழியர்களுக்கான வங்கி கணக்கு என்பது அவர்கள் பெரும் மாத ஊதியம் கொண்டு சில்வர், கோல்டு, டயமென்ட், பிளாட்டினம் என இந்த ஊழியகர்களுக்கான கணக்கில் மட்டும் 4 வகைகள் உள்ளன. தற்போது சில்வர் கணக்கு வகைதாரர்களுக்கு மட்டுமான சலுகை விவரங்களை பார்க்கலாம்.
Premium Payroll கணக்கு தரர்களுக்கு கிரெடிட் கார்டு இலவசமாக வழங்கப்படும். எந்தவித வரம்புகளும் இல்லாமல் இலவச லாக்கர் செயல்பாடுகள் கொடுக்கப்படும். இலவச NEFT/RTGS பரிவர்த்தனைகள்.
இறப்புக்கான விபத்துக் காப்பீட்டுடன் இலவச டெபிட் கார்டு வழங்கப்படும். இலவச IMPS/SMS வசதி வழங்கப்படும். இலவச ஆயுள் காப்பீடு வசதி, இலவச தனிநபர் விபத்து காப்பீடு வசதி, இலவச விமான விபத்து காப்பீடு, டெபிட் கார்டு வருடாந்திரா பராமரிப்பு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
இப்படி கனரா வங்கிக்கு மட்டும் மேற்கண்டவாறு பல்வேறு வங்கி கணக்கு வகைகள் உள்ளது. இதுபோல பல்வேறு வங்கிகளில் பயனர்கள் தங்கள் வயது, வேலை, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு அந்தந்த வங்கி சலுகைகளை கவனித்து தங்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். அவ்வாறு வங்கி கணக்குகளை தொடங்குவது நமக்கு பல்வேறு பலன்களை தரும்.