தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Tuesday, Dec 2, 2025 | India
Home / வங்கியியல்

நீண்ட கால வங்கி ஊழியர்களுக்கு 'ஷாக்' செய்தி! பணி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்? AIBEA அவசர அழைப்பு!

பொதுத்துறை வங்கிகளில் நீண்ட வருடங்கள் பணியாற்றும் ஊழியர்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறி, ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 4, 2024

மத்திய நிதியமைச்சகம் (DFS- Department of Financial Services) அண்மையில் ஓர் முக்கிய சுற்றறிக்கையை மத்திய பொதுத்துறை வங்கிகளுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வங்கியில் உயர் பொறுப்பில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் நீண்ட வருடங்களாக பணியாற்றும் வங்கி ஊழியர்கள் வரையில் பலரது பணி திறன் பற்றி மதிப்பாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வெளியான தகவலின் அடிப்படையில்,

Advertisement

  • SBI வங்கியில் பணியற்றும் உயர் அதிகாரிகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 25 வருடமாக வங்கியில் பணியாற்றி வருபவர்கள்,
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள உயர் அதிகாரிகளில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 30 வருட வங்கி பணியை ஆற்றியவர்கள்,  
  • SBI வங்கியில் எழுத்தாளர் (Teller) மற்றும் மற்ற பணியாளர்களில் 58 வயதுக்கு மேற்பட்டோர், 
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தாளர் (Teller) மற்றும் ,மற்ற பணியாளர்களில் 57 வயதுக்கு மேல் உள்ளவர்கள்

ஆகியோர்களின் பணித் திறன் பற்றி மதிப்பாய்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை குறிப்பிட்டு, வங்கி ஊழியர் சங்கத்தினர், மத்திய நிதியமைச்சகம் நிர்ணயித்துள்ள பணி திறனை பூர்த்தி செய்யவில்லை என்றால் வங்கி  ஊழியர்களுக்கு கூடுதல் பணி அழுத்தம் அல்லது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பதற்கு இந்த மதிப்பாய்வு நடத்தப்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

AIBEA (All India Bank Employees Association) மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக எதிர்க்கிறது. மத்திய அரசின் இச்செயல் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் இந்த உத்தரவானது தொழிற்சங்க விதிமுறைகளில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் செயல்திறன் குறைவாக கொண்ட ஊழியர்களுக்கு எதிராக வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் சூழலை உருவாக்குகிறது. இந்த உத்தரவானது ஊழியர்களை நேரடியாக குறிவைக்கிறது. மேலும், வங்கித் துறையின் பணி பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் AIBEA குற்றம்சாட்டுகிறது.

Advertisement

ஏற்கனவே வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை  நிலவுகிறது. அதனால், அதிக பணிச்சுமை இருப்பதையும் AIBEA சுட்டிக்காட்டுகிறது. பல வங்கி கிளைகளில் குறைந்தபட்சம் எழுத்தர் (Teller) மற்றும் மற்ற உதவிப் பணியாளர்களுடன் மட்டுமே இயங்குகின்றன, ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் இங்கு நிலவி வருகிறது. ஏற்கனவே, வங்கி நிர்வாகம் ஊழியர்களுக்கு அதிகப்படியான இலக்குகளை நிர்ணயித்து அதன் மூலம் பணி அழுத்தத்தை ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில், மத்திய நிதியமைச்சகத்தின் இந்த உத்தரவு அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கிறது என்று AIBEA குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் இந்த மதிப்பாய்வு நடவடிக்கை மற்றும் வங்கி ஊழியர்களைப் பாதிக்கும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிராவில் உள்ள ஐக்கிய வங்கி சங்கங்களின் அமைப்பு (UFBU)  வரும் நவம்பர் 16ஆம் தேதி வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. 

வங்கி ஊழியர்கள், ஏற்கனவே பல்வேறு வகைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் சூழலில் மத்திய நிதியமைச்சகத்தின் இந்த நடவடிக்கை மேலும் அழுத்தத்தை தருவதாக UFBU குறிப்பிடுகிறது. இச்செயல்பாடு வங்கி ஊழியர்களின் பணி பாதுகாப்பை இன்னும் மோசமாக்கும் என்றும் UFBU கூறுகிறது.

இதனை மேற்கோள்கட்டி, AIBEA அமைப்பு, அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைப் பாதுகாப்பிற்கான இந்த அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு ஒரு ஏதுவான நல்ல பணிச்சூழலை கொண்டு வருவதற்கு பதிலாக, இந்த உத்தரவு மூலம் வங்கி ஊழியர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அரசாங்கம் வழிவகுத்துள்ளது என்று தொழிற்சங்கம் கூறுகிறது.

மத்திய அரசின் இந்த மதிப்பாய்வு நடவடிக்கை குறித்து, AIBEA அடுத்த படிநிலைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மேலும் ஆலோசிக்கவும் AIBEA திட்டமிட்டுள்ளது.

Tags:UFBUNationalized BanksSBIBank EmployeesFinance MinistryDFSAIBEAForced RetirementBankPublic Sector BanksBankersbank employees

No comments yet.

Leave a Comment