தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

அதிகரிக்கும் சேமிப்புகள், சரியும் கடன் விகிதங்கள், வங்கி சர்வே கூறுவதென்ன?

நடப்பாண்டு வங்கி சேமிப்பு மற்றும் கடன் வழங்கல் பற்றிய விவரங்களானது, கடந்தாண்டை ஒப்பீடு செய்கையில், இந்தாண்டு கடன் வாங்கும் சதவீதத்தை விட சேமிப்பின் சதவீதமானது அதிகரித்துள்ளது என வங்கி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 4, 2024

இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் ஆண்டுதோறும் , கடந்தாண்டு செயல்பாட்டுடன் ஒப்பீடு செய்து அதன் விதிதங்களை கணக்கிட்டு அதற்கேற்றாற் போல தங்கள் கொள்கைகள்/செயல்பட்டுகளில் மாற்றம் கொண்டுவரும்.

பொதுவாகவே, வங்கிகளில் சேமிப்புகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தை விட, கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். அதாவது, ஒருவரது சேமிப்பு ஒரு குறிப்பிட்ட வங்கியில் 7 சதவீத ஆண்டு வட்டி தருகிறது என்றால், அதே வங்கி வாடிக்கையாளருக்கு, கடன் கொடுக்கையில் சுமார் 10 சதவீதம் வரையில் வட்டி வசூல் செய்கிறது. இந்த இடைப்பட்ட 3 சதவீதம் தான் வங்கியின் வருமானமாணமாக கருதப்படுகிறது.

அப்படி கணக்கிட்டால், வங்கியில் சேமிப்பு  விகிதங்களை காட்டிலும், கடன் விகிதமானது அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், சமீபத்திய வங்கி பணப்பரிவர்த்தனை பற்றிய பகுப்பாய்வு முடிவுகள், கடந்த 2 ஆண்களுடன் ஒப்பீடு செய்து வெளியான தரவுகளின்படி, வங்கிகளில் வழங்கப்பட்ட கடன் விகிதங்களை காட்டிலும், சேமிப்பு விகிதமானது அதிகமாக இருந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 8, 2022-ல் வெளியான வங்கித் துறை தரவுகளுடன் ஒப்பீடு செய்கையில், அக்டோபர் 18, 2024இல் வெளியான தகவல்கள் மேற்கண்ட கூற்றை உறுதிப்படுத்துகின்றன. இதனால், வங்கியின் கடன் வழங்கல் செயல்பாட்டில் மாற்றங்கள் எழலாம் என்கிறது நிதித்துறை வட்டாரங்கள்.

வங்கிகளின் சேமிப்பு அளவானது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்கையில், 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளையில், கடன் சதவீதமானது 4.9 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

பண புழக்கம் (M3) கடந்த ஆண்டுடன் ஒப்பீடு (YoY) செய்கையில் 11.06 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 24 வாரங்களில் மிக உயர்ந்த சதவீதமாகும்.

கடன் வளர்ச்சியானது இந்தாண்டு 11.52 சதவீதமாக உள்ளது. 124 வாரங்களில் மிக குறைவான கடன் வளர்ச்சி அளவு பதிவாகியுள்ளது.

டெபாசிட் :

வங்கி சேமிப்பானது ஆண்டுக்கு, தற்போது தோராயமாக ரூ.217 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பீடு செய்கையில், இது 12.16 சதவீதம் அதிகம். ஆனால் கடந்த 2 வாரத்தை ஒப்பீடு செய்கையில் இது 0.5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

அட்வான்ஸ்கள் எனப்படும் சிறுசிறு முன்தொகைகள் ரூ.167.7 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பீடு செய்கையில் 13.03 சதவீதம் அதிகமாகும். அதேநேரம், கடந்த இரண்டு வார அளவீட்டை ஒப்பீடு செய்கையில் 0.34 சதவீதம் அளவுக்கு இது குறைந்துள்ளது.

கிரெடிட் கார்டு டெபாசிட் விகிதம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 77.04 சதவீதமாக இருந்து தற்போது  77.17 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது.

வாராந்திர கணக்கீடு : 

கடந்த வாராந்திர டெபாசிட்கள் 0.51 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன. டிமாண்ட் டெபாசிட்கள் 1.81 சதவீதம் குறைந்துள்ளது, தீபாவளி செலவினம் அதிகரித்ததன் காரணமாக இந்த வாராந்திர சரிவு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆண்டு பகுப்பாய்வு : 

நடப்பாண்டு மொத்த வைப்புத்தொகை ரூ.218.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பீடு செய்கையில், இது 11.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே நேரம் அட்வான்ஸ் என்பதும் சிறிய அளவிலான நுண்கடன் ரூ.172.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேற்கண்ட சமீபத்திய வங்கித் தரவுத் துறையின் பகுப்பாய்வின் படி, வங்கி சேமிப்பு - கடன் வழங்கல் விகித முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் (ஏப்ரல் 2022 தரவுகளின்படி) முதல் முறையாக கடன்களை விட இப்போது சேமிப்புகள் என்பது வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த மாற்றத்தை வங்கிகள் பகுப்பாய்வு செய்து தங்கள் கடன் உத்திகளை மறுமதிப்பீடு செய்து கடன் வழங்கலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:BankSavingssavingsCreditM3YoYbankingLoansloansBank Loan