தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

தொடர் பழிவாங்கும் நடவடிக்கை, தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பர் 2-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தொழிற்சங்க தலைவர் மீது நிர்வாக ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 2ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: November 7, 2024

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) கீழ் செயல்படும் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பானது வரும் 2024, டிசம்பர் 2ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தொழிற்சங்க தலைவர் மீதான நிர்வாக ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பில் நவம்பர் 6ஆம் தேதி முதல் முன்னெடுக்கப்பட உள்ள பல்வேறு போராட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன.

  • நவம்பர் 6ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமானது, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கித் தலைவருக்கு (CEO/MD) இப்பிரச்சனை குறித்து கடிதம் மூலம் தெரிவிப்பார்கள்.
     
  • நவம்பர் 10ஆம் தேதி வங்கி ஊழியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்படும்.
     
  • நவம்பர் 12ஆம் தேதி வங்கி ஊழியர்கள் தங்கள் உடையில் கருப்பு பட்டை (Black Badge) அணிந்து பணிக்கு செல்வார்கள்.
     
  • நவம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள TMB வங்கிகளுக்கு முன்னர் போராட்டம் நடைபெறும்.
     
  • நவம்பர் 15ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் TMB வங்கியின் தலைவருக்கு (MD/CEO) க்கு மெமோ (உடனடி கோரிக்கை/செய்தி) அளிப்பார்கள்.
     
  • நவம்பர் 17ஆம் தேதி எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளம் வாயிலாக ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை குறிப்பிடுவர்.
     
  • நவம்பர் 20ஆம் தேதி தூத்துக்குடி TMB வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும்.
     
  • நவம்பர் 25ஆம் தேதி வாட்ஸ் அப் குழுக்களில் ஊழியர்களின் கோரிக்கை பகிரப்படும். 
     
  • நவம்பர் 30ஆம் அனைத்து மாவட்டத்திலும் வங்கி ஊழியர்களின் போராட்டம் நடைபெறும்.
     
  • டிசம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

என AIBEA கீழ் இயங்கும் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் தங்கள் வேலைநிறுத்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த, 20, அக்டோபர் 2024, அன்று TMB வங்கியின் மனிதவள மேம்பாட்டுத் துறை (HR) மேலாளருக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் அனுப்பட்ட கடிதத்தில், “ கடந்த சில வருடங்களாக,TMB ஊழியர் சங்கம் மற்றும் அதன் செயல்பாடுகளை ஓரங்கட்டுவதற்கு குறிவைத்து உங்கள் வங்கி நிர்வாகத்தின் தரப்பில்  மிரட்டும் விதத்தில் அச்சுறுத்தல்கள் முயற்சிகள் நடந்து வருவதை நாங்கள் கவனித்து வருகிறோம்.

TMB தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்த தொழிற்சங்கத்தின் அப்போதைய பொதுச் செயலருக்கு எதிராகத் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம்.

​எங்கள் TMB தொழிற்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.என்.விக்னேஷ் மற்றும்  தலைவர் பி.பிரபாகரன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகு மேற்கண்ட இரு தலைவர்களும், சில வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, வாட்ஸ்அப் குழு மூலம் வங்கியின் (TMB) நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அவர்களுக்கு நிர்வாகம் சார்பில் மெமோ வழங்கப்பட்டது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB - Tamilnad Mercantile Bank) என்பது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் வங்கித் துறையாகும். இது முதலில் 1921-ல் நாடார் வங்கியாக நிறுவப்பட்டு பின்னர், நவம்பர் 1962-ல் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி என்று பெயர் மாற்றி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி இந்தியா முழுவதும் 567 கிளைகளைக் கொண்டுள்ளது.

Tags:Tamilnad Mercantile BankTMBAIBEATBEFBank StrikeTamil Nadu