- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஹைதராபாத் SBI வங்கியில் ரூ.4.8 கோடி மோசடி : வழக்கின் பின்னணி என்ன?
ஹைதராபாத்தில் உள்ள சனத் நகர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கிக் கிளையில் ரூ.4.8 கோடி கடன் மோசடி நடந்த சம்பவத்தை ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Author: Kanal Tamil Desk
Published: November 9, 2024
ஹைதராபாத் மாநிலத்தில் சனத் நகர் கிளையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் பண மோசடி அரங்கேறியுள்ளது. இந்த மோசடியில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த விசாரணையில், வங்கியில் சுமார் ரூ.4.8 கோடி அளவில் கடன் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
இந்த மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள் :
மட்டப்பள்ளி ஸ்ரீசாந்த், விஷால், டகல ராஜு, சுதன்சு சேகர் பரிடா, MD. வஜீத், யு.சுனில் குமார், பாஸ்கர் கவுட், அமஞ்சி உபேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளி :
இந்த மோசடி சம்பவத்தின் மூளையாக, சனத் நகர் SBI கிளையின் முன்னாள் மேலாளர் கார்த்திக் ராய் என்பவர் செயல்பட்டுள்ளார். இவர், வங்கிக் கடன் வழிமுறைகளில், ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல், சில போலியான ஆவணங்கள் மூலம் கடன்களுக்கு ஒப்புதல் அளித்து, ஒவ்வொரு கடனுக்கும் 5% கமிஷன் பெற்றுள்ளார் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி வழக்கில், இவர் கடந்த 2023 மே 20-ஆம் தேதியன்றே சனத் நகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவருடைய இந்த தவறான நடவடிக்கை தான் அடுத்தாக இப்போது மோசடி செய்தவர்களுக்கு ஒரு வழியாக அமைந்துள்ளது.
மோசடி நடந்தது எப்படி?
கார்த்திக் ராய் செய்த குற்ற செயலை தொடர்ந்து, இப்போது நிகழ்ந்த இந்த ரூ.4.8 கோடி மோசடி சம்பவத்தின் மூளையாக தற்போது மேலாளாராக பொறுப்பில் இருந்த மொஹமது வாஜீத் தான் என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவர் ஒத்துழைப்புடன், டகலா ராஜு என்ற கடன் முகவர், மேட்டுப்பள்ளி ஸ்ரீஷாந்த் மற்றும் விஷால் ஆகியோர் பொய்யான ஆவணங்களுடன் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சுதாங்சு சேகர் பரிடா என்பவர் இந்த கடன் விண்ணப்பங்களை உண்மையானது போல தயார் செய்து கொடுக்கவும், போலியான சம்பளத் தொகுப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை அச்சடித்தும் கொடுக்கவும் உதவியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல, பக்சர் கவுட் என்ற நபர் போலி ஆவணங்களுக்கான போலியான ரப்பர் ஸ்டாம்ப்ஸ், சம்பளத் தொகுப்பு மற்றும் அடையாள அட்டைகளைச் தயார் செய்ய செய்ய உதவி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இவர்கள் ஒரு குழுவாக இணைந்து இந்த மோசடி சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது பொருளாதார குற்றப்பிரிவினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தீவிரமடையும் விசாரணை :
இந்த குழு போலியான ஆவணங்கள், தவறான தகவல்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் மூலம் ரூ.4.8 கோடி பணத்தை முறைகேடாக மோசடி செய்துள்ளனர் என்பது குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட பணம் இவ்வளவு தானா? இந்த வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.