- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
SBI வங்கியில் வேலைவாய்ப்பு : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
SBI வங்கியில் SO உதவி மேலாளர் (பொறியியல் பிரிவு) பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட படப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Author: Kanal Tamil Desk
Published: November 25, 2024
பொறியியல் பட்டதாரிகளுக்கென வேலைவாய்ப்புகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. பொறியியல் பிரிவினருக்கான சிறப்பு அலுவலர் (SO - Specialist Officer) உதவி மேலாளர் பணிக்கான 168 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபற்றிய முழு விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :
சிறப்பு அலுவலர் (SO) உதவி மேலாளர் (சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் தீயணைப்பு (FIRE) பிரிவு) - ஆகியவற்றில் மொத்தமாக 168 காலியிடங்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.
வயது :
01.10.2024 தேதியின்படி 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீடு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம் :
- சிறப்பு அலுவலர் ( தீயணைப்பு பிரிவு - Fire) - ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும்.
- சிறப்பு அலுவலர் (சிவில் பிரிவு) - ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும்.
- சிறப்பு அலுவலர் (எலக்ட்ரிக்கல் பிரிவு) - ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை ஊதியம் வழங்கப்படும் என வேலைவாப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினியர், தீயணைப்புத் துறை சார்ந்த பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தீயணைப்புத் துறை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் நாக்பூரில் உள்ள National Fire Service (NFSC) கல்லூரில் பொறியியல் படித்திருக்க வேண்டும் அல்லது தீயணைப்பு துறை பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் 60%-க்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், குறைந்தது 2 ஆண்டுகள் அந்த துறையில் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள், SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பித்து கொள்ளலாம்.
முக்கிய தேதிகள் :
- விண்ணப்பத்தின் ஆன்-லைன் பதிவு - 22.11.2024,
- விண்ணம் செய்ய கடைசி தேதி - 12.12.2024,
- ஆன்லைன் கட்டணம் செலுத்தும் தேதி - 22.11.2024 - 12.12.2024.
தேர்வு செய்யப்படும் முறை :
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
- ஆவணங்கள் சரிபார்ப்பு
- மருத்துவ பரிசோதனை