தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / வங்கியியல்

RTGS - NEFT : 'அக்கவுண்ட் நம்பர் டைப் செய்தால் பெயர் வரணும்' வங்கிகளுக்கு RBI உத்தரவு!

RTGS மற்றும் NEFT பணபரிவர்தனைகள் செய்யும் போது வங்கி கணக்கு எண் டைப் செய்தால் பயனர்களின் பெயர் காண்பிக்கப்பட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கியானது அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 31, 2024

ஒருவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் வழியாக இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கு RTGS, NEFT, UPI பரிவர்த்தனைகள் வாயிலாக செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அனைத்து செயல்பாடுகளும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் அந்தந்த வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன.  

இதில் UPI பரிவர்த்தனை பொறுத்தவரை, UPI-ல் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் குறிப்பிட்ட மொபைல் நம்பர் அல்லது UPI ID-ஐ டைப் செய்தால் அதில் பயனரின் பெயர் காண்பித்துவிடும். ஒருவேளை அவர் UPI கணக்கு வைத்திருக்கவில்லை என்றால் வங்கி கணக்கிற்கு நேரடியாக UPI கணக்கில் இருந்து ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். அப்போது பயனரின் பெயர் காண்பிக்கப்படாது.  

RTGS மற்றும் NEFT வழியாக ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, ஒருவர், யாருடைய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அந்த பயனரின் வங்கி கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து வங்கியின் IFSC Code-ஐ டைப் செய்த பிறகு அந்த வங்கி பெயர் மற்றும் கிளை விவரங்கள் மட்டுமே தெரியவரும். பயனரின் பெயர் காண்பிக்கப்பட மாட்டாது.  

இதனால், பயனரின் பெயரை தாமாக டைப் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சில சமயம் வங்கி கணக்கு எண் தவறாக உள்ளீடு செய்துவிட்டால் பயனரின் பெயர் வைத்து அந்த பரிவர்த்தனை நிறுத்தப்படுவதில்லை. அது தவறான பரிவர்த்தனையாக மேற்கொள்ளப்படுகிறது. அந்த பரிவர்த்தனை முடிந்த பிறகு வங்கியில் புகார் செய்து தவறாக அனுப்பப்பட்ட பயனரை கண்டறிந்து பணத்தை திரும்ப பெரும் சிக்கல்கள் நடைமுறையில் உள்ளன. 

RBI உத்தரவு : 

இதனை சரிசெய்யும் நோக்கில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது, ஆன்லைன் பரிவர்த்தனையின் போது பயனரின் வங்கி கணக்கை ஒருவர் டைப் செய்தாலே அந்த பயனரின் பெயர் வந்துவிடும் படி, தங்கள் தரவு தொழில்நுட்பத்தை வங்கிகள் மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 

IFSC Code டைப் செய்த உடன் வங்கி பெயர் மற்றும் கிளை விவரங்கள் வருவது போல பயனரின் வங்கி கணக்கு எண்ணை டைப் செய்த உடன் பயனர் பெயர் வர வேண்டும் என RBI அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தவறுதலாக வேறு பயனருக்கு பணம் அனுப்பும் முறை தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

RTGS மற்றும் NEFT ஆன்லைன் பரிவர்த்தனை செயல்படுத்தும் அனைத்து வங்கிகளும், ஏப்ரல் 1, 2025க்குள் வங்கி கணக்கு எண்ணுடன் பயனர்களின் பெயர் விவரங்கள் தெரியும்படி தங்கள் தரவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என RBI அறிவுறுத்தியுள்ளது. 

RTGS மற்றும் NEFT : 

RTGS (Real-Time Gross Settlement) மற்றும் NEFT (National Electronic Funds Transfer) என்பவை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வழிகளாகும். 

RTGS என்பது ரூ.2 லட்சத்திற்கு மேலான பண பரிவர்த்தனை செய்ய பயன்படும் முறையாகும்.தொழில், ரியல் எஸ்டேட் என பெரிய பண பரிவர்த்தனைகள் செய்ய இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. 

NEFT முறையானது, குறைவான தொகை கொண்ட ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தப்படுகிறது. மாத ஊதியம் உள்ளிட்ட இன்னும் பிற குறைவான ஆன்லைன் பரிவர்தனைகளுக்கு  NEFT பயன்படுத்தப்படுகிறது. RTGS மற்றும் NEFT என்ற இரண்டு முறைக்கும் அதிகபட்ச பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு இல்லை

Tags:NEFTRTGSOnline TransactionOnline PaymentsRBIReserve Bank of India