- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
வக்பு சட்டத்திருத்த மசோதா! உச்சநீதிமன்றத்தில் குவிந்த வழக்குகள்!
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதியிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு செய்துள்ளனர்.

Author: Santhosh Raj KM
Published: April 8, 2025
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டிருந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்று பின்னர் நிறைவேற்றப்பட்டது.நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், நீதிமன்றத்தை நாடுவோம் எனத் தெரிவித்திருந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்டதிருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேரடியாக ஆஜராகி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபையிலும் மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வழக்கு தொடரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையிலும், அதற்கு எதிராகவும் உள்ள வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-
வாக்கு வங்கியை தூண்டிவிட்டு, நாட்டில் கலவரம் போன்ற சூழ்நிலைய உருவாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்குதான் இந்த வழக்குள். வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்து ஆதாயம் அடைந்து வரும் நில மாஃபியாக்கள் மட்டுமே புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள். குறைந்த அளவிலான பொதுநல மனுக்கள் அதிக வாக்கு வங்கி நலனுக்காக போடப்பட்டுள்ள வழக்குகள் போல தெரிகிறது.
புதிய சட்டம் சமூக நீதியையும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசியலமைப்பின் பயன்பாட்டையும் உறுதி செய்யும். இது இந்து-முஸ்லிம் பிரச்சனை அல்ல. ஏராளமான முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைக்கள் கூட இந்த சட்ட திருத்தத்தை வரவேற்றுள்ளனர் என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.