Advertisement
"TDS வரிச்சுமையை யூகோ வங்கி திரும்ப பெற வேண்டும்" AIFUCBO-ன் தொடரும் போராட்டம்
UCO வங்கி அதிகாரிகளின் அகில இந்திய கூட்டமைப்பான, AIFUCBO-ஆனது,உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, யூகோ வங்கி நிர்வாகம் TDS வரி பிடித்தம் தொடர்பான ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முதற்கட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 6, 2025
Advertisement
அகில இந்திய UCO வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பின் (AIFUCBO, NOBO மற்றும் BMS உடன் இணைக்கப்பட்டுள்ளது) தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைக் கடன்கள் மீதான TDS வாரிசுமையை யூகோ வங்கி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து AIFUCBO அமைப்பினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) போன்ற வங்கிகள், தங்கள் ஊழியர்கள் மீதான மேற்கண்ட TDS வாரிசுமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
TDS பிடித்தம் கோரிக்கைகள் :
29 டிசம்பர் 2024 தேதியிட்ட AIFUCBO இன் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, TDS பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் நிர்வாகத்தின் செயலற்ற தன்மையால் இங்கு குழப்பம் ஏற்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ.4,445.84 கோடி நிகர லாபம் ஈட்டிய UCO வங்கி, நிதி ரீதியாக நிலையானதாகவே உள்ளது என்றும், ரூ.38 கோடி TDS வரி சுமையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் வங்கி ஊழியர்கள் கூறுகின்றனர்.

SBI மற்றும் BOB போன்ற மற்ற முன்னணி வங்கிகள் ஊழியர்கள் மீதான இந்த வரிச்சுமையை அவர்களே ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், யூகோ வங்கி நிர்வாகமானது, இந்த TDS வரி சுமையை தனது ஊழியர்களே செலுத்த வேண்டும் என அறிவுறுத்துவதால், யூகோ வங்கி ஊழியர்கள் விரக்தியடைந்துள்ளனர். யூகோ தலைமை நிர்வாகத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் பலன்கள் இல்லாமல் கூடுதல் மணிநேரம் வேலை செய்தது என அவர்களின் பங்களிப்புகளுக்கு இங்கு மதிப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

முன்னதாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி,இந்த TDS கூடுதல் வரிச் சுமையை யூனியன் வங்கி நிர்வாகமே ஏற்கக் கோரி யூனியன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பும் போராட்டத்தை அறிவித்திருந்தது.
முதற்கட்ட போராட்டம் :
30 டிசம்பர் 2024 முதல் வங்கியின் HRMS தளத்தின் மூலம் MD & CEO க்கு தனிப்பட்ட முறையீடுகளுடன் முதற்கட்ட போராட்டம் தொடங்கியது. மேலும், டிசம்பர் 31 அன்று இந்த கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள AIFUCBO உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வங்கி நிர்வாகத்திற்கு சமர்ப்பித்தனர்.

இந்த TDS வரி பிடித்தம் விவகாரம் குறித்து, கனலிடம் பேசிய AIFUCBOவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் செந்தில் குமார், “ TDS பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு தீவிரப்படுத்துவோம் என்று கூட்டமைப்பு உறுதியாக அறிவித்துள்ளது. அடுத்தகட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் அடங்கும். அடுத்தகட்ட போராட்டம் என்பது 24 ஜனவரி 2025 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தமாக இருக்கும். ஊழியர்களின் வரி சுமை கருதி, ஊழியர்கள் மீதான கூடுதல் வரி சுமையை வங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். SBI மற்றும் BOB நிர்வாகம் இந்த கூடுதல் வரி சுமையை ஏற்க ஏற்கனவே முடிவு செய்துள்ளதை நாங்கள் அறிவோம். யூகோ வங்கியின் நிர்வாகமும் இதேபோல் தங்கள் ஊழியர்களின் இந்த TDS வரி சுமையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.” என்றார்.
பிரச்சினையின் பின்னணி :
உச்ச நீதிமன்றத்தின் மே 2024 தீர்ப்பைத் தொடர்ந்து இந்தப் போராட்டம், வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா அல்லது சலுகைக் கடன்களுக்கான TDS வரி பிடித்தம் தொடர்பாக வங்கி ஊழியர்களின் தேவைகளை உறுதிப்படுத்தியது. இந்த தீர்ப்பின்படி, ஊழியர்களுக்கான TDS வரி பிடித்ததில் இருந்து விலக்கு அளிக்க வழிவகை செய்கிறது.

மற்ற வங்கிகள் முன் தொழில்துறை முன்மாதிரியாக யூகோ வங்கி இருந்தபோதிலும், வங்கி அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.வங்கியின் இந்த நிலைப்பாடே ஊழியர்களை ஒன்று திரட்டி போராட தூண்டுகிறது.
TDS வரி சுமையின் விவகாரத்தில் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சமமான நிதி நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை தொடர்ந்து முன்னிறுத்தி இந்தப் போராட்டம் தொடர்கிறது. முதற்கட்ட போராட்டத்திலேயே அதன் தீவிரம் உணர்ந்து யூகோ வங்கி நிர்வாகம் தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் என்று ஊழியர்கள் நம்புகிறார்கள்..
No comments yet.