- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
SBI வழங்கும் ரூ.50 லட்சம் வரை அடமானம் இல்லாத கல்வி கடனுதவி! முக்கிய விவரங்கள் இதோ…
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானம் இல்லாத கல்விக் கடனை 10.15% ஆண்டு வட்டி வீதத்தில் வழங்குகிறது.

Author: Kanal Tamil Desk
Published: January 6, 2025
இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) வெளிநாட்டில் மாணவர்கள் படிப்பதற்காக கல்விக்கடன்களில் ரூ.50 லட்சம் வரையில் அடமானம் அல்லாத கல்வி கடன்களாக (Collateral-Free Education Loan) வழங்குகிறது. இதுகுறித்த விவரங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
என்ன திட்டம்?
SBI (State Bank of India) வழங்கும் மூலதனம் அற்ற கல்விக் கடன் (Collateral-Free Education Loan) என்பது, வெளிநாடுகளில் பயில விரும்பும் மாணவர்களின் உயர்கல்வி படிப்புகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட கடன் திட்டமாகும். இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்வி செலவுகளுக்கு எளிதில் கடன் பெற முடியும். மேலும், இதை எந்தவிதமான அடமானமும் (collateral) இல்லாமல் கடன்பெற முடியும்.
யார் தகுதியுடையவர்?
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் UG (Undergraduate) அல்லது PG (Postgraduate) படிப்புகளை பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர் ஏற்கனவே இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் (Government or recognized institutions) சேர்ந்து உயர்கல்வியை பெற்றிருக்க வேண்டும். இந்த கடனை பெறுவதற்கு மாணவர்களின் கல்வி நிலை, மதிப்பெண்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
கடன் தொகை எவ்வளவு?
வெளிநாடுகளில் குறிப்பிட்ட 96 கல்வி நிறுவனங்களில் பயில விரும்பும் மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை எந்தவித அடமனமும் இல்லாமல் கடன் உதவி பெறலாம். இந்த கடனுதவியானது விதிமுறைகளுக்கு உட்பட்டு ரூ.3 கோடி வரை நீட்டித்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
வட்டி விகிதம் (Interest Rate)
- ரூ.7.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான கடனுக்கு ஆண்டு வட்டி 10.15% நிர்ணயம் செய்யப்படுகிறது.
- இந்த வகை கடன்களில் SBI வங்கியானது விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவு வட்டி விகிதத்தில் சலுகைகளும் வழங்குகிறது.
- வெளிநாடுகளில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவிகளுக்கு கூடுதல் வட்டி விகித சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
- இந்த கடனுக்கான செயல்பாட்டு கட்டணம் ரூ.10 ஆயிரம் என கூறப்படுகிறது.
- வட்டி விகிதமானது SBI MCLR (Marginal Cost of Lending Rate) என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
எந்தெந்த நாடுகளில்?
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள SBIயால் குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
கடன் திருப்பிச் செலுத்தும் விவரம்
படிப்பை முடித்த பிறகு, கடன் திருப்பிச் செலுத்தும் தவணை முறைகள் (EMI) தொடங்கும்.
திருப்பி செலுத்த வேண்டாம் எனும் Moratorium Period என்பது, மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரையில் ஆகும். மாணவர்கள் படிப்பு நிறைவு பெரும் வரை EMI செலுத்த வேண்டிய அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு, விதிமுறைகளுக்கு உட்பட்டு கடனை திருப்பி செலுத்த 15 ஆண்டுகாலம் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
முக்கிய ஆவணங்கள் :
- ஆதார், பான் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள்.
- மாணவர் மேற்படிப்பு சேர்க்கை கடிதம் (Admission Letter).
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமான சான்று (Income Certificate).
- கல்வி நிறுவனத்தில் சேருவதற்காக பிற சான்றிதழ்கள்.
- வெளிநாட்டில் பயில விரும்பும் மாணவர்கள் Form I-20 அல்லது விசா போன்ற ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகே கடன் தொகை கிடைக்கப்பெறும்.
SBI Rinn Raksha (இன்சூரன்ஸ்)
- Rinn Raksha என்பது, மாணவர்கள் கடன் திருப்பிச் செலுத்த முடியாத காலங்களில் (நோய், எதிர்பாரா விபத்துகள்) பாதுகாப்பு அளிக்கும் இன்சூரன்ஸ் திட்டமாக இந்த வசதி உள்ளது. இதுவும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.