தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Tuesday, Dec 2, 2025 | India
Home / வங்கியியல்

கர்நாடகாவில் பரபரப்பு! வங்கி ஊழியரை சுட்டுக்கொன்று ATM பணம் கொள்ளை!

கர்நாடகா மாநிலம் பிதர் நகரில் உள்ள SBI வங்கி கிளை ஏடிஎம்-ல் வங்கி ஊழியர்கள் பணம் நிரப்ப வந்தபோது 2 கொள்ளையர்கள் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பணத்தை திருடி சென்றுள்ளனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: January 16, 2025

கர்நாடகா மாநிலம் பிதரில் சாந்தி நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகே உள்ள ஏடிஎம்-ல் பணம் நிரப்ப அதற்கான வங்கி ஊழியர்கள் பாதுகாப்புடன் தங்கள் நான்கு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.  

Advertisement

ஜனவரி 16, காலை 11.30 மணியளவில் அங்குள்ள ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் போது அங்கு இரு சக்கர வாகனத்தில் திடீரென வந்த 2 கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  

இதில் 2 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அப்போது, அந்த ஊழியர்கள் கொண்டுவந்திருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் துப்பாக்கி குண்டு காயமுற்ற ஒரு ஊழியர் உயிரிழந்துவிட்டார். இன்னொரு ஊழியர் துப்பாக்கி காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Advertisement

பட்டப்பகலில் மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் உள்ள வங்கி கிளை அருகே வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிதர் நகர் பகுதி போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வங்கி ஊழியர்கள் நேரடி நிதி புழக்கவழக்கத்தில் தினமும் பங்கெடுத்து வருவதால் அவர்கள் மீதான இம்மாதிரியான தாக்குதல்கள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இம்மாதிரியான உயிரிழப்பு சம்பவங்கள் வங்கி ஊழியர்கள் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றன. இம்மாதிரியான சம்பவங்களை கருத்தில் கொண்டு வங்கி ஊழியர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

Advertisement

Tags:SBI Bidar nagar BranchATM RobberyBidarKarnatakaSBI

No comments yet.

Leave a Comment