தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Header Logo
Wednesday, Jul 9, 2025 | India

Advertisement

Home / வங்கியியல்

வேலையை இழந்த தனியார் வங்கி ஊழியர்! பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி!

உ.பி வராணாசியில் தனியார் வங்கி ஊழியர், தனது வேலையை இழந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை பொதுமக்கள் உடனடியாக மீட்டு உயிரை காப்பாற்றியுள்ளனர்.

News Image

Author: Kanal Tamil Desk

Published: February 4, 2025

Advertisement

உத்திர பிரதேச மாநிலம் வராணாசியின் பெலுபுர் பகுதியில் உள்ள வங்கியில் வேலை செய்த வங்கி ஊழியர் சுனில் குமார் மிஸ்ரா தனது வேலையை இழந்ததால் ஜனவரி 31 அன்று மாலை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ விவரம் : 

Advertisement

இந்த சம்பவம் வராணாசி ரவீந்திரபுரி பகுதியில் நடந்துள்ளது. சுனில் குமார் மிஸ்ரா என்பவர் சிதோரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூச்சி (Buchi) கிராமத்தை சேர்ந்தவர். அவர் அப்பகுதி தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ள நிலையில், திடீரென அவரை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் சுனில் குமார் மிஸ்ரா.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், துரிதமாக செயல்பட்டு தீ அவருடைய உடம்பு முழுவதும் பரவுவதற்குள் அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தில், சுனில் குமார் மிஸ்ரா மயங்கி நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பெலுபுர் காவல் நிலைய அதிகாரி விஜய் நாராயண் மிஸ்ரா தலைமையிலான போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மருத்துவ உதவி மற்றும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் :

முதலில், வாரணாசி SBS மருத்துவமனைக்கு சுனில் குமார் மிஸ்ரா அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் விரைவாக மேல் சிகிச்சைக்காக Trauma Center at BHU மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்? 

போலீசாரின் தகவலின்படி, சுனில் குமார் மிஸ்ரா, தான் வேலை பார்த்து வந்த வங்கி வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் மனமுடைந்து இந்த தவறான முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. பணியில் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக மிஸ்ராவை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி தரப்பு கூறியுள்ளது. இந்த தகவல் வராணாசி காவல்துறையினர் மூலம் வெளியிடப்பட்டது.

திடீர் வேலையிழப்பு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. 

காவல்துறை கொடுத்த தகவல் :

 பெலுபுர் காவல் நிலையத்தின் Station In-charge, விஜய் நாராயண் மிஸ்ரா இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சுனில் குமார் மிஸ்ராவின் நிலை மற்றும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்கியுள்ளனர்.

தற்கொலைக்கு முயற்சி செய்த சுனில் குமார் மிஸ்ரா தான் வேலை செய்து வந்த வங்கியில் இருந்து சரியாக வேலை செய்யவில்லை அலட்சியமாக செயல்படுகிறார் என்ற காரணம் தொடர்ந்து கூறப்பட்டால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பிறகு தனது பணியையும் அவர் இழந்துள்ளார். இதன் காரணமாகவே இந்த அதிர்ச்சிகாரமான முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. 

தற்கொலை முயற்சி சம்பவம் குறித்தும்,அதற்கான காரணங்கள் மற்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அடுத்தகட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக வாரணாசி காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:IDFC Varanasi BranchSuicide attemptIDFCVaranasi

No comments yet.

Leave a Comment