தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / வங்கியியல்

95% வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா? நிதியமைச்சர் கூறுவதென்ன? AIBEA விளக்கம்!

வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான வங்கி காலிப்பணியிடங்கள் பற்றி மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி, 95% காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கூறியதற்கு AIBEA மறுப்பு தெரிவித்து விளக்கம் தெரிவித்துள்ளது.

News Image

Author: M Manikandan

Published: March 15, 2025

வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கமான UFBU சங்கத்தினர் அறிவித்துளள்னர்.

வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறுகையில் 95 சதவீத வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்து AIBEA சங்க பொதுச்செயலாளர் C.H.வெங்கடாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நமது தற்போதைய போராட்டத் திட்டத்தில், மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று போதுமான பணியாளர்களை காலிப்பணியிடங்களில் நிரப்புவது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரசாங்கத்திடம் இருந்து சில வாய்மொழி அறிவுறுத்தல்கள் வந்து இருப்பதால், வங்கிகள் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதைக் குறைத்துவிட்டன என்பதையும், துணைப் பணியாளர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு சில தடை உள்ளது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

இதனால், கிளைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், பணியாளர்கள் வழக்கமான பணி நேரத்திற்குள் தங்களது பணிகளை முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக, கிளைகளில் தற்காலிக மற்றும் சாதாரண அடிப்படையில் ஏராளமான நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

10-2-2025 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் V.செல்வராஜ் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, இந்திய அரசின் நிதித் துறை இணையமைச்சர் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்தும் அமைச்சர் தனது பதிலில் கீழ்கண்ட தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பணியாளர் எண்ணிக்கை விவரங்கள் : 

ஆபிஸர்ஸ் பணியிடங்கள் :  2011-ல் 2,39,997 பணியாளர்கள் உள்ளனர். 2017-ல் 3,19,685 பணியாளர்கள் உள்ளனர். 2024-ல் 412,977  ஏப்ரல் 1,2025 கணக்கீட்டின் படி 4,21,584 பேர் பணியில் உள்ளனர் என்றும், 

கிளார்க் பணியிடங்கள் :  2011-ல் 2,54,232 பணியாளர்களும், 2017-ல் 2,69,271 பணியாளர்களும், 2024-ல் 2,48,539 பணியாளர்களும் ஏப்ரல் 1, 2025 கணக்கீட்டின்படி 2,48,173 பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

துணைப் பதிவாளர் பணியிடங்கள் : 1,24,069 பணியாளர்களும், 2017-ல் 1,19,288 பணியாளர்களும், 2024-ல் 95,199 பணியாளர்களும் உள்ளனர்.ஏப்ரல் 1, 2025-ல் 88,851 பணியாளர்கள் பணியில் இருப்பர்.

மொத்தமாக, 2011-ல் , 6,18,838 பணியாளர்களும், 2017-ல் 7,08,244 பணியாளர்களும், 2024-ல் 7,56,715 பணியாளர்களும், இறுதியாக ஏப்ரல் 1, 2025 கணக்கீட்டின்படி 7,58,608 பணியாளர்கள் பணியில் இருப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் இதனை குறிப்பிடுவார?

(1) ​​2011ஆம் ஆண்டிலிருந்து பொதுத்துறை வங்கிகளில் (PSB) பணியாளர்களின் எண்ணிக்கை, குறிப்பாக எழுத்தர்கள் மற்றும் துணைப் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது உண்மையா?

(2) அப்படியானால், 2011, 2017 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள அதிகாரிகள், எழுத்தர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சமீபத்திய தேதியின்படி PSBகளில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் எழுத்தர்கள் மற்றும் துணைப் பணியாளர்களின் சதவீதம் என்ன?

(3) கடந்த 13 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் பணியாளர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?

நிதி அமைச்சகத்தில் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அவர்களுக்கு 

ஒவ்வொரு பொதுத்துறை வங்கியிலும் உள்ள ஊழியர்களின் தேவை அந்தந்த PSBஆல் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, அவைகளுக்கிடையேயான, வணிகத் தேவை, செயல்பாடுகள், பணிக்காலம் மற்றும் பிற திட்டமிடப்படாத வெளியேற்றங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் நியமனம் PSBகளால் அதற்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது. அவர்களின் தேவைகளின் அடிப்படையில் இது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.

PSB களின்படி, அதிகாரிகள், எழுத்தர்கள் மற்றும் கீழ்நிலை ஊழியர்களின் எண்ணிக்கை பின்வருமாறு

ஆபிஸர்ஸ் பணியிடங்கள் :  2011-ல் 2,39,997 பணியாளர்கள் உள்ளனர். 2017-ல் 3,19,685 பணியாளர்கள் உள்ளனர். 2024-ல் 412,977  ஏப்ரல் 1,2025 கணக்கீட்டின் படி 4,21,584 பேர் பணியில் உள்ளனர் என்றும், 

கிளார்க் பணியிடங்களில் 2011-ல் 2,54,232 பணியாளர்களும், 2017-ல் 2,69,271 பணியாளர்களும், 2024-ல் 2,48,539 பணியாளர்களும் ஏப்ரல் 1, 2025 கணக்கீட்டின்படி 2,48,173 பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

துணைப் பதிவாளர் பணியிடத்தில், 1,24,069 பணியாளர்களும், 2017-ல் 1,19,288 பணியாளர்களும், 2024-ல் 95,199 பணியாளர்களும் உள்ளனர்.ஏப்ரல் 1, 2025-ல் 88,851 பணியாளர்கள் பணியில் இருப்பர்.

மொத்தமாக, 2011-ல் , 6,18,838 பணியாளர்களும், 2017-ல் 7,08,244 பணியாளர்களும், 2024-ல் 7,56,715 பணியாளர்களும், இறுதியாக ஏப்ரல் 1, 2025 கணக்கீட்டின்படி 7,58,608 பணியாளர்கள் பணியில் இருப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

1.1.2025 நிலவரப்படி, மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் எழுத்தர்கள் மற்றும் துணைப் பணியாளர்களின் சதவீதம் முறையே 32.71% மற்றும் 11.71% ஆகும்.

அமைச்சரின் இந்த பதிலின்படி, 2011 முதல் 2024 வரை 1,72,980 அதிகாரிகள் சேர்க்கப்பட்ட நிலையில், எழுத்தர் எண்ணிக்கை 5,693 ஆகவும், துணைப் பணியாளர்கள் 29,410 ஆகவும் மட்டுமே குறைந்துள்ளனர். ஆனால் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களுடன் இந்த புள்ளிவிவரங்களை நாங்கள் சரிபார்த்தபோது, ​​ரிசர்வ் வங்கியின் பின்வரும் விவரங்களைக் காண்கிறோம்.

அமைச்சர் கூறியது : 

ஆபிசர்ஸ்

2011-ல் 2,39,997 

2024-ல் 4,12,977

உயர்வு - 1,72,980

 

கிளார்க் 

2011-ல் 2,54,232

2024-ல் 2,48,539

குறைவு - 5,693

 

துணை பதிவாளர்

2011-ல் 1,24,609

2024-ல் 95,199

குறைவு - 29,410

 

RBI கூறுவது : 

ஆபிசர்ஸ்

2011-ல் 3,10,961

2024-ல் 4,05,366

உயர்வு - 94,405

 

கிளார்க் 

2011-ல் 3,13,537

2024-ல் 2,46,965

குறைவு - 56,842

 

துணை பதிவாளர்

2011-ல் 1,24,609

2024-ல் 95,199

குறைவு - 29,410

 

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளின் எழுத்தர் ஆட்சேர்ப்புகளை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2013 மற்றும் 2024 க்கு இடையில் உள்ள எழுத்தர் பணியாளர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், அது மிகவும் ஆபத்தானது.

2013ல் கிளர்க் 3,98,801 2024-ல் கிளார்க் பணியாளர்கள்  2,46,965. இதன்படி கணக்கிட்டால் ஆட்குறைப்பு 1,51,836 ஆகும்.

இதனால்தான் பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்சம் 1,50,000 எழுத்தர் பணியிடங்களும், சுமார் 50,000 துணைப் பணியாளர் பணியிடங்களும் (மொத்தம் 2 லட்சம் காலியிடங்கள்) நிரப்பப்படாமல் உள்ளன என்று நாங்கள் கூறுகிறோம். தொழில் மேம்பாடு, அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றுக்கு பணியாளர் தேவையை சேர்த்தால் இன்னும் தேவை அதிகமாகும். இதனால், ஊழியர்கள் கடும் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.

தனியார் துறை வங்கிகளை ஒப்பிட்டுப் பார்த்தால், 2011ல் தனியார் வங்கிகளில் மொத்த ஊழியர்கள் 1,71,071 ஆகவும், 2024ல் 8,46,530 ஆகவும் இருந்தனர். 95% எழுத்தர், துணைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்று அமைச்சர் எப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை? இது புள்ளிவிவரப் பிழையா அல்லது வேண்டுமென்றே மக்களுக்குத் தவறாகத் தெரிவிக்கும் முயற்சியா? அது எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் கிளைகளில் கடுமையான பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எனவே 2025 மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என AIBEA பொதுச்செயலாளர் C.H.வெங்கடாச்சலம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  

Tags:Pankaj choudhary2 Day ProtestUFBU Bank StrikeAll India StrikeTwo-Days Strike CallTwo Day Nationwide StrikeAIBEAUFBU