- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
“வரிச்சுமையை குறைக்க வேண்டும்., வருமான வரி முறையில் திருத்தம் வேண்டும்” நிதியமைச்சருக்கு AIBOC கடிதம்!
வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து வங்கி அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து முன்கூட்டிய வரி பிடித்தம் செய்யும் முறையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு AIBOC கடிதம் எழுதியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: February 5, 2025
வருமானவரி சட்ட விதிமுறைகளின் படி, விதிக்கப்பட்டுள்ள வருமானவரி உச்சவரம்பு விலகுக்கிற்கு மேல் மாத வருமானம் பெரும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து முன்கூட்டியே வரி பிடித்தம் செய்யும் நடைமுறை என்பதை பெரும்பாலான வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமை பிரச்சனையாக உள்ளது. இந்த வரிச்சுமையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
முன்னதாக, RRB வங்கி ஊழியர்களிடம் இருந்து முன்கூட்டியே வரி பிடித்தம் செய்யும் முறையை விலக்கி அந்த வரிச் சுமையை அந்தந்த வங்கி நிர்வாகங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என RRB நிர்வாக அதிகாரிகளுக்கு NFRRBO வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தது.
NFRRBO கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
- மாத சம்பளத்தில் முன்கூட்டியே பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையை, வணிக வங்கிகள் போல, RRB வங்கிகளும் நேரடியாக செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஊழியர்கள் செலவுக் கணக்குகளை சமர்ப்பித்து வரிச்சலுகை பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்க வேண்டும்.
- இதனால் RRB வங்கி ஊழியர்களின் வரிச்சுமை குறையும் என்பதால், RRB நிர்வாகங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- இந்த கோரிக்கைக்கு RRB நிர்வாகங்கள் எவ்வாறு பதிலளிக்கிறது என்பது முக்கியமாக பார்க்கப்பட உள்ளது.
NFRRBO கடிதத்தின் தொடர்ச்சியாக அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் ஆதரவாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், மாத சம்பளத்தில் இருந்து முன்கூட்டியே வரி பிடித்தம் செய்யும் முறையிலிருந்து விலக்கு அளிக்கக் வேண்டும் என கூறி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
AIBOC கடிதத்தில்..,
இந்த கடிதத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள், வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், சலுகை வட்டி விகிதங்களில் கடன்கள், இடமாற்றங்களின் போது வாடகை இல்லாத தங்குமிடம், அதிகாரப்பூர்வ வாகன பயன்பாட்டிற்கான எரிபொருள் செலவுகளை திருப்பிச் செலுத்துதல் மற்றும் எங்கள் அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான பிற சலுகைகள் ஆகியவற்றின் வரிவிதிப்பு குறித்து மிகுந்த அக்கறையுடன் உங்களுக்கு எழுதுகிறோம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 17(2) மற்றும் விதி 3(7)(1) இன் கீழ் உள்ள விதிகள் வங்கி ஊழியர்களிடையே கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்துகின்றன, மேலும் அவை மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது பாரபட்சமானவை என்று கருதப்படுகின்றன.

GST, வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி..,
வங்கி ஊழியர்கள் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு, முறையாக வரி செலுத்துவோர் மற்றும் இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமக்கள் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை வங்கி அதிகாரிகளும் 30% வருமான வரி வரம்பிற்குள் வருகிறார்கள். இவர்கள் வருமான வரி செலுத்துவதன் மூலம் தேசிய வருவாயில் கணிசமாக பங்களிக்கிறார்கள். நாங்கள் GST, தொழில்முறை வரி வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி, கல்வி வரி, வாகன வரி போன்றவற்றையும் செலுத்தி வருகிறோம்.
எங்கள் சம்பளம் பெரும்பாலும் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குள் செலவிடப்படுவதால், எங்கள் செலவினங்கள் நேரடியாக பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுகின்றன என்பதையும் குறிப்பிடுவது பொருத்தமானது. இருப்பினும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருந்தபோதிலும், எங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மீதும் வரி விதிக்கப்படுவதால் நியாயமற்ற வரிவிதிப்புக் கொள்கைகள் காரணமாக எங்கள் வருவாய்கள் மற்றும் சலுகைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
எங்கள் சம்பளம் குறைந்துள்ளது
1979 வரை, வங்கித்துறையில் உள்ளார்ந்த அபாயங்கள் மற்றும் பொறுப்புகள் காரணமாக, வங்கி அதிகாரிகளின் சம்பளம் 1-ம் வகுப்பு அரசு அதிகாரிகளை விட அதிகமாக இருந்தது என்பதை முன்னிலைப்படுத்துவது முக்கியம். காலப்போக்கில், அரசு அதிகாரிகளுக்கான தொடர்ச்சியான சம்பளக் கமிஷன்கள் மற்றும் வங்கிகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊதிய தீர்வுகள் எங்கள் சம்பளத்தை கணிசமாகக் குறைத்துள்ளன.
ஓய்வூதியத்திற்கான ஊதியச் சுமை 2-3% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இது எங்கள் அடிப்படை ஊதியத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களைப் போலல்லாமல், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் பணி அழுத்தம் இருந்தபோதிலும் எங்கள் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, எங்கள் குறைந்த சம்பளங்களுக்கு ஓரளவு இழப்பீடாக சலுகைகள் செயல்பட்டன. இருப்பினும், இந்த சலுகைகள் மீதான சமீபத்திய வரிவிதிப்பால், நாங்கள் மிகவும் தண்டிக்கப்பட்டது போல உணர்கிறோம்.

எங்கள் உடனடி கோரிக்கை :
உங்கள் தலைமையின் கீழ் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், இந்த விதிகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேற்கூறியவற்றின் அடிப்படையில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் "சம்பளம்" என்பதன் வரையறையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும், வங்கியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பிரிவு 17(2) மற்றும் விதி 3(7)(1) ஐ திருத்த வேண்டும் என்றும் நாங்கள் உடனடியாகக் கோருகிறோம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கோவிட்-19 நிவாரண முயற்சிகள் அல்லது அரசாங்கத் திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றின் போது வங்கியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்துள்ளனர். இந்த நியாயமற்ற வரிவிதிப்பு மன உறுதியைக் குறைப்பது மட்டுமல்லாமல், புதிய திறமையாளர்கள் வங்கித் துறையில் சேருவதைத் தடுக்கிறது. உங்கள் தலைமையின் கீழ், நீதி வெல்லும் என்றும், இந்த தேவையற்ற வரிச்சுமை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” எனவும் AIBOC சங்கத்தினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.