- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
"மறக்க முடியாத காதல் கதை".., ஒரே மேடையில் இரண்டு பெண்களை மணந்த இளைஞன்.!
வாலிபர் ஒருவர் தனது முன்னாள் காதலி கனகா லால் மற்றும் தற்போதைய காதலி அத்ரம் ஜல்கர் தேவி ஆகிய இருவரையும் ஒரே திருமண மேடையில் மணந்து கொண்டார்.

Author: Gowtham
Published: March 29, 2025
தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு இளைஞன், குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் பழங்குடி பழக்கவழக்கங்களைப் பின்பற்றி ஒரே விழாவில் இருவரையும் திருமணம் செய்து கொண்டு, தனக்கும் இரண்டு பெண்களுக்கும் இடையேயான முக்கோணக் காதல் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
சூரியதேவ், ஹைதராபாத்தில் திரைப்படத் துறையில் பணி பிரிந்து வருகிறார். ராஜுலகுடாவைச் சேர்ந்த கனக லாலுடன் மூன்று ஆண்டுகளாக காதலித்து ந்துள்ளார். பின்னர் அவர்களது உறவு மோசமடைந்ததால் அவர்கள் காதலை முறித்துக் கொண்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர், அதே பகுதியில் உள்ள புல்லாரா கிராமத்தைச் சேர்ந்த அத்ரம் ஜல்கர் தேவியுடன் சூரியதேவுக்கு காதல் மலர்ந்தது. இருப்பினும், கனகாவுக்கு இந்த காதல் கதை பற்றி தெரிந்ததும், சூர்யாதேவை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்.
இதற்கு தீர்வு காண கிராம பெரியவர்களுடன் கனகா ஒரு பஞ்சாயத்தை கூட்டியுள்ளார். ஆரம்பத்தில், கிராம பெரியவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இறுதியில் எப்படியோ அவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, மணமகன் இரு மணப்பெண்களின் பெயர்களையும் ஒரு திருமண அழைப்பிதழில் அச்சிட்டு, ஒரு பிரமாண்டமான விழாவில் அவர்களை மணந்தார். ஆனால், இவ்வாறு ஒரு வாலிபர் இரண்டு திருமணம் செய்து கொள்வது இந்துக்களுக்கு சட்டவிரோதமானத. கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தில் ஒரு இளைஞன் ஒரே மண மேடையில் இரண்டு பெண்களை மணந்தபோது இதேபோன்ற வழக்கு தொடரப்பட்டது.